Published:Updated:

`பின் விளைவு ஏதோ ஒன்று நடக்கக்கூடும்?!' - ஸ்டாலின் முடிவு குறித்து முத்தரசன்

`பின் விளைவு ஏதோ ஒன்று நடக்கக்கூடும்?!' - ஸ்டாலின் முடிவு குறித்து முத்தரசன்
`பின் விளைவு ஏதோ ஒன்று நடக்கக்கூடும்?!' - ஸ்டாலின் முடிவு குறித்து முத்தரசன்

"சபாநாயகர் மீது, தி.மு.க கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தேவையற்றது" என்று ஸ்டாலின் தற்போது கூறியுள்ளது அவர் எடுத்த முடிவு. அந்த முடிவுக்குப் பின்னால் தமிழக அரசிற்குப் பின் விளைவுகள் ஏதோ ஒன்று விரைவில் நடக்கக்கூடும் என்று நம்புகிறேன். தி.மு.க கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார். 

`பின் விளைவு ஏதோ ஒன்று நடக்கக்கூடும்?!' - ஸ்டாலின் முடிவு குறித்து முத்தரசன்

புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னையில் ரூ.1,500க்கு விற்ற ஒரு டேங்கர் லாரி தண்ணீர் தற்போது ரூ.9,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழக முதல்வரால் நேற்று முன்தினம் தொடங்கி வைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கடந்த 2013-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டத் திட்டம். இப்போதுதான் அடிக்கல் நாட்டப்படுகிறது. 2021-ல் தான் இந்தப் பணிகள் முடிவடையும். ஆகவே, தற்போது நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்கு இந்தத் திட்டம் உதவாது. குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி ஜூலை 2ம் தேதி தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

தமிழகச் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்னை, 7 பேர் விடுதலை, நீட் தொடர்பான பிரச்னை ஆகியவற்றிற்குத் தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பதைச் சட்டமன்றத்தில் முதல்வர் விளக்க வேண்டும். மேலும், நடைபெறக்கூடிய சட்டமன்றத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், 8 வழிச் சாலை, நீட் தேர்வு, புதியக் கல்விக் கொள்கை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தமிழக அரசு எடுத்துள்ள முடிவு என்ன? அதற்கான தீர்வு என்ன? என்பதை முடிவு செய்ய வேண்டும். 

இந்தாண்டு குறுவை சாகுபடி பொய்த்துவிட்டதால் குறுவை சாகுபடி செய்யும் டெல்டா விவசாயிகளைக் கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். சபாநாயகர் மீது, தி.மு.க கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தேவையற்றது என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தற்போது கூறியுள்ளது அவர் எடுத்த முடிவு. அந்த முடிவுக்குப் பின்னால் தமிழக அரசிற்குப் பின் விளைவுகள் ஏதோ ஒன்று விரைவில் நடக்கக்கூடும் என்று நம்புகிறேன். கூட்டணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் எடுக்கும் முடிவே இறுதியானது. தற்போது வரையிலும் தி.மு.க கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை, பா.ஜ.க ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத கட்சி. அதேநேரம் சர்வாதிகாரத்தில் நம்பிக்கை உடைய கட்சி.  மத்திய அரசு கொண்டு வர இருக்கும் ஒரே நாடு ஒரே தேசம் என்ற திட்டம் தேவையற்றது. தற்போது உள்ள தேர்தல் நடைமுறைகளை மாற்ற வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜாவின் பொறுப்பு வரும் 24ம் தேதி முடிவடைகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேண்டும் என்று தி.மு.கவிடம் நாங்கள் கேட்கப்போவதில்லை" என்றார். 

அடுத்த கட்டுரைக்கு