Published:Updated:

உதயநிதி பதவியேற்புக்காகத் தயாரான நல்ல நாள்! - தங்க தமிழ்ச்செல்வன் இணைப்பில் ரகசியம் காத்த ஸ்டாலின்

உதயநிதி பதவியேற்புக்காகத் தயாரான நல்ல நாள்! - தங்க தமிழ்ச்செல்வன் இணைப்பில் ரகசியம் காத்த ஸ்டாலின்
உதயநிதி பதவியேற்புக்காகத் தயாரான நல்ல நாள்! - தங்க தமிழ்ச்செல்வன் இணைப்பில் ரகசியம் காத்த ஸ்டாலின்

சொந்தக் கட்சிக்காரர்களுக்கு சீட் கொடுப்பதைவிடவும் மாற்று முகாம்களில் இருந்து வந்தவர்களுக்கே தலைமை அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. தங்க தமிழ்ச்செல்வன் இணையவிருக்கிறார் என்ற தகவலைக் கேட்டவுடன் டெல்லியிலிருந்து பறந்து வருகிறார் டி.ஆர்.பாலு. இந்தப் பாசத்தை எப்படிப் புரிந்துகொள்வது எனவும் தெரியவில்லை.

`தி.மு.க இளைஞரணிச் செயலாளராக வரும் 4-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கலாம்' என அறிவாலய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், `தங்க.தமிழ்ச்செல்வன் வருகையால் உடன்பிறப்புகளிடையே கொந்தளிப்பு அதிகரித்திருக்கிறது' என ஆதங்கப்படுகின்றனர் தி.மு.க வட்டாரத்தில். 

உதயநிதி பதவியேற்புக்காகத் தயாரான நல்ல நாள்! - தங்க தமிழ்ச்செல்வன் இணைப்பில் ரகசியம் காத்த ஸ்டாலின்

நாடாளுமன்றம் ப்ளஸ் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, `உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்த வேண்டும்' என்ற குரல் தி.மு.க-வில் எழுந்தது. அதற்கேற்ப, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், தீர்மானத்தை நிறைவேற்றி அறிவாலயத்துக்கு அனுப்பி வைத்தனர். இதே தீர்மானத்தை தூத்துக்குடியில் நிறைவேற்றி அனுப்பி வைத்திருந்தார் கனிமொழி எம்.பி. ஆனால், அடுத்து வந்த நாள்களில் உதயநிதியை முன்னிறுத்த வேண்டும் என்ற குரல் வலுவாக இல்லாததால், இந்த முடிவு தற்காலிகமாகக் கிடப்பில் போடப்பட்டது. அதேநேரம், `எப்போது வேண்டுமானாலும் உதயநிதி பெயரை தலைமை அறிவிக்கலாம்' என்ற கருத்தும் பேசப்பட்டு வந்தது. அதற்கேற்ப, தி.மு.க இளைஞரணிச் செயலாளராக இருந்த வெள்ளக்கோயில் சாமிநாதனும் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துவிட்டுக் கடிதம் கொடுத்துவிட்டதாகத் தகவல் வெளியானது. இந்தநிலையில், கடந்த சில நாள்களாக தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளுக்குத் தகவல் ஒன்று சென்று சேர்ந்துள்ளது. `வெளியூருக்குப் பயணப்பட்டுவிட வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் உதயநிதி பதவியேற்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம். சென்னையில் இருக்குமாறு உங்களுடைய பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறப்பட்டுள்ளது. 

உதயநிதி பதவியேற்புக்காகத் தயாரான நல்ல நாள்! - தங்க தமிழ்ச்செல்வன் இணைப்பில் ரகசியம் காத்த ஸ்டாலின்

``வரும் ஜூலை 4-ம் தேதி சுபமுகூர்த்த தினமாக இருப்பதால் அன்றைய தினமே, உதயநிதி பதவியேற்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம். ஆனால், பதவியேற்பு குறித்து இதுவரையில் நான்கு முறை தேதிகள் சொல்லப்பட்டும் தள்ளிப் போய்விட்டன. வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் உறுதியாகப் பதவியேற்பு இருக்கும் என ஸ்டாலின் குடும்பத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். வரும் 4-ம் தேதி சட்டசபை அலுவல்கள் முடிந்த பிறகு, உதயநிதி பொறுப்பேற்கும் நிகழ்வுகள் அரங்கேறலாம்" என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகிகள் சிலர், 

``அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி நேற்று தி.மு.க-வில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன். அவரது வருகையை சீனியர்கள் உட்படக் கட்சியின் விசுவாசிகள் யாரும் ரசிக்கவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னரே, தி.மு.க-வில் இணைவது குறித்து தங்க தமிழ்ச்செல்வனிடம் இருந்து சிக்னல் வந்துள்ளது. இதைத் துணைப் பொதுச் செயலாளரான திண்டுக்கல் ஐ.பெரியசாமி விரும்பவில்லை. தங்கம் இணைவது குறித்த தகவலையும் கடைசிநேரத்திலேயே அவருக்குத் தெரியப்படுத்தினார் ஸ்டாலின். அதுவரையில் ரகசியமாகவே வைத்திருந்தார். நேற்று நடந்த நிகழ்விலும் அவர் கடைசியாகத்தான் நின்றுகொண்டிருந்தார். `தங்கம் யாருக்கும் அடங்க மாட்டார். அவரைச் சேர்த்துக்கொள்வதால் பயன் இல்லை' என ஸ்டாலின் கவனத்துக்குச் சிலர் தகவல் கொண்டு சென்றுள்ளனர். இதைப் பெரிதாக அவர் எடுத்துக்கொள்ளவில்லை. 

உதயநிதி பதவியேற்புக்காகத் தயாரான நல்ல நாள்! - தங்க தமிழ்ச்செல்வன் இணைப்பில் ரகசியம் காத்த ஸ்டாலின்

நேற்றைய இணைப்பைக் கவனித்த சீனியர்கள் சிலர், `மாற்று முகாம்களில் இருந்து கழகத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கைக் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த எண்ணிக்கையை அவ்வளவு எளிதாகப் புறம்தள்ளிவிட முடியாது. அவர்களுக்கு உடனே முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளும் எம்.எல்.ஏ சீட்டுகளும் வழங்கப்படுகின்றன. கடந்தகாலத் தேர்தல்களில் அ.தி.மு.க சார்பாக இவர்கள் போட்டியிட்டபோது இவர்களை எதிர்த்துதான் கழக நிர்வாகிகள் சண்டையிட்டனர். இதற்காகப் பல்வேறு வழக்குகளையும் சுமந்தனர். அவற்றையெல்லாம் மறந்துவிட்டு அவர்களோடு இணைந்து செயல்படுவது என்பது சாத்தியமில்லை. சொந்தக் கட்சிக்காரர்களுக்கு சீட் கொடுப்பதைவிடவும் மாற்று முகாம்களில் இருந்து வந்தவர்களுக்கே தலைமை அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. தங்க தமிழ்ச்செல்வன் இணையவிருக்கிறார் என்ற தகவலைக் கேட்டவுடன் டெல்லியில் இருந்து பறந்து வருகிறார் டி.ஆர்.பாலு. இந்தப் பாசத்தை எப்படிப் புரிந்துகொள்வது எனவும் தெரியவில்லை. கட்சிக்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பவர்களையும் தலைமை கண்டுகொள்ள வேண்டும்' என ஆதங்கப்பட்டுள்ளனர். 

உதயநிதி பதவியேற்புக்காகத் தயாரான நல்ல நாள்! - தங்க தமிழ்ச்செல்வன் இணைப்பில் ரகசியம் காத்த ஸ்டாலின்

`` தி.மு.க-வில் இணைவதற்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, தனக்கு எந்தப் பொறுப்பும் தேவையில்லை எனக் கூறியிருந்தார் தங்க தமிழ்ச்செல்வன். அதேநேரம், அவருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படுவது குறித்து தலைமையிடம் இருந்து எந்த வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை. ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், `என்னுடைய உழைப்புக்கேற்ற பதவியைத் தலைமை வழங்கும்' எனக் கூறியிருக்கிறார் தங்கம். அப்படி அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவி வழங்கப்பட்டால், கட்சிக்குள் புகைச்சல் நீடிப்பதைத் தவிர்க்க முடியாது" என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள். 
 

அடுத்த கட்டுரைக்கு