Published:Updated:

``கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்!’ - கொதிக்கும் நாராயணசாமி

``கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்!’ - கொதிக்கும் நாராயணசாமி
``கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்!’ - கொதிக்கும் நாராயணசாமி

அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, அமைச்சரவை முடிவுகளை மாற்ற முயல்வது, தன்னிச்சையாக அதிகாரிகளை அழைத்துப் பேசுவது, உத்தரவிடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியின் சாபக்கேடு என்றார்.

``கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்!’ - கொதிக்கும் நாராயணசாமி

புதுச்சேரி மாநில டி.ஜி.பி., சுந்தரி நந்தாவின் சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள குருத்துகுளி கிராமம் ஆகும். அவரது தயார் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இறுதிச்சடங்கு குருத்துகுளி கிராமத்தில் இன்று நடைபெற்றது. இதற்காக விமானம் மூலம் கோவை வந்த புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, சமூகநலன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கார் மூலம் ஊட்டி வந்தனர். குருத்துகுளி கிராமத்திற்கு நேரில் வந்துஅஞ்சலி செலுத்தினார்கள்

.

``கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்!’ - கொதிக்கும் நாராயணசாமி

பின்னர்  செய்தியாளர் சந்திப்பில் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரி முதல்வராகிய நான், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில முதல்வர்கள் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்து, தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை வழிநடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். ராகுல்காந்தியும் எங்களது கோரிக்கையை உன்னிப்பாகக் கேட்டார். அவர் எங்களிடம் உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இருப்பினும் அவர்கள் நாங்கள் கூறியதை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி மக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தார். ஒன்று கூட கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை.

ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பின்பு, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., அமல்படுத்தியதால் சுமார் 5.8 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். தற்போதைய பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடி, தனது சாதனைகளை முன் வைத்து பிரசாரம் செய்யவில்லை. மாறாக அவரது பிரசாரம் முழுவதும் பாகிஸ்தான், இந்து மதத்தையும் முன்வைத்தே இருந்தது. நாட்டு மக்களிடம் மத உணர்வைத் தூண்டி, பாகிஸ்தான் மீது வெறுப்பைப் பயன்படுத்தி நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க., மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. மத்தியில் ஆட்சியமைத்துள்ள பா.ஜ.க., ஏற்கெனவே கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றி, அவர்களுடைய திட்டங்கள் எனச் சொல்லி வந்தார்கள்

``கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்!’ - கொதிக்கும் நாராயணசாமி

தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி, மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.,வின் கட்டளையை ஏற்றுச் செயல்படுகின்றது. ஹைட்ரோ காா்பன் திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் கடுமையாக எதிர்த்தோம். நீட் தேர்வு, இந்தி திணிப்பு உள்ளிட்டவற்றிற்கும் எதிர்ப்பு தெரிவித்தோம். மக்கள் விரோத திட்டங்களை நாங்கள் எதிர்த்து வருகிறோம். ஆனால் தமிழக அரசு மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தின் சாபக்கேடு கிரண்பேடி. மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றினால் முட்டுக்கட்டை போடுவது, அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, அமைச்சரவை முடிவுகளை மாற்ற முயல்வது, தன்னிச்சையாக அதிகாரிகளை அழைத்துப் பேசுவது, உத்தரவிடுவது, இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதில் அன்றாட அரசு நிர்வாகங்களை நடத்த முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு அதிகாரம் உண்டு. துணை நிலை ஆளுநருக்கு எவ்வித தனிப்பட்ட அதிகாரமும் கிடையாது. துணை நிலை ஆளுநர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெளிவாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பு நடைமுறையில் இருக்கும் போது, இதை மீறிச் செயல்பட்டு வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்”என்றார் .