Published:Updated:

``24 நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” - கிரண் பேடிக்குக் கெடு விதித்த தி.மு.க

ஜெ.முருகன்
``24 நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” - கிரண் பேடிக்குக் கெடு விதித்த தி.மு.க
``24 நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” - கிரண் பேடிக்குக் கெடு விதித்த தி.மு.க

``தமிழர்களை விமர்சித்த கிரண் பேடி 24 நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தி.மு.க கெடு விதித்திருக்கிறது.

``24 நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” - கிரண் பேடிக்குக் கெடு விதித்த தி.மு.க

``மோசமான ஆட்சி, ஊழல் அரசியல் மற்றும் அலட்சியமான அதிகாரத்தால் சென்னையில் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழக மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகுமுறையும் இந்த வறட்சிக்கான காரணங்களில் ஒன்று” என்ற குறுஞ்செய்தி ஒன்றை 2 நாள் களுக்கு முன்பு தனது வாட்ஸ்-அப் மூலம் தட்டிவிட்டார். அவரின் அந்தக் கருத்து தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் கிரண் பேடியைக் கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

``24 நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” - கிரண் பேடிக்குக் கெடு விதித்த தி.மு.க

தொடர்ந்து ஆளுநர் கிரண் பேடி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்து புதுச்சேரி மாநில தி.மு.க சார்பில் தலைமை தபால்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட தி.மு.க தொண்டர்களும் நிர்வாகிகளும் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதோடு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது பேசிய புதுச்சேரி மாநில தி.மு.க பொறுப்பாளர் சபாபதி மோகன், ``ஆளுநர் கிரண்பேடிக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் எங்களின் போராட்டம் தொடரும்” என்றார். தொடர்ந்து பேசிய புதுச்சேரி தி.மு.க அமைப்பாளரும், எம்.எல்.ஏவுமான சிவா, ``பா.ஜ.கவால் நியமனம் செய்து அனுப்பி வைக்கப்பட்டவர் இன்று நம்மைப் பார்த்து கோழைகள், சுயநலவாதிகள் என்று கூறுகிறார். தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், வீரத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

``24 நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” - கிரண் பேடிக்குக் கெடு விதித்த தி.மு.க

அரசையும் அமைச்சர்களையும் எம்.எல்.ஏக்களையும் விமர்சித்துப் பேசினீர்கள். ஆனால் இன்று எங்கள் தமிழ் மக்களையே கோழைகள் என்று விமர்சித்திருக்கிறீர்கள். எங்கள் வீரத்தைக் காட்டினால் உங்களால் 1 நிமிடம் புதுச்சேரியில் தங்கியிருக்க முடியுமா? புதுச்சேரி மாநிலத்தையே ஸ்தம்பிக்க வைக்க எங்களால் முடியும். வாரம்தோறும் மகாராணி போல சைக்கிளில் ஊர்வலம் போகிறீர்கள். ஆனால் உங்கள் பின்னால் பாதுகாப்புக்கு 4 ஜீப்புகளும், ஓய்வு பெற்ற அதிகாரிகளும் உலா வருகின்றனர். அது இனிமேல் நடக்குமா? கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற வழியில் வந்தவர்கள் நாங்கள். அதனால்தான் கண்ணியத்தோடு போராட்டத்தை நடத்தி வருகிறோம். மக்களின் கருத்தை நான் சொன்னேன் என்று கூறியிருக்கிறீர்கள். எந்த மக்கள் எங்கே சொன்னார்கள் என்று உங்களால் கூற முடியுமா ?

``24 நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” - கிரண் பேடிக்குக் கெடு விதித்த தி.மு.க

நாங்கள் 4 பேர் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தியதற்கே துணை ராணுவத்தை வரவழைத்தீர்கள். நாங்கள் கொந்தளித்து எழுந்தால் ராணுவத்தைக் கொண்டுவந்தாலும் எங்களிடமிருந்து நீங்கள் விடுபட முடியுமா? தமிழகத்தில் சட்டசபையில் தளபதி குரல் கொடுத்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்தமாக தமிழக உறுப்பினர்கள் குரல் கொடுக்கின்றனர். தமிழர்களை விமர்சித்தால் பதவியில் நீடிக்க முடியாது என்பதை உணர்வீர்கள். நீங்கள் மன்னிப்பு கேட்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும்” என்றார்.

Vikatan