Published:Updated:

`அரசியல் அதிகாரத்துக்காக மட்டுல்ல எனது போராட்டம்!' - ராஜினாமா கடிதத்தில் ராகுல் உருக்கம்

விகடன் விமர்சனக்குழு
`அரசியல் அதிகாரத்துக்காக மட்டுல்ல எனது போராட்டம்!' - ராஜினாமா கடிதத்தில் ராகுல் உருக்கம்
`அரசியல் அதிகாரத்துக்காக மட்டுல்ல எனது போராட்டம்!' - ராஜினாமா கடிதத்தில் ராகுல் உருக்கம்

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

`அரசியல் அதிகாரத்துக்காக மட்டுல்ல எனது போராட்டம்!' - ராஜினாமா கடிதத்தில் ராகுல் உருக்கம்

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் துவண்டுபோயுள்ளது காங்கிரஸ். ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நம்பியிருந்த ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸூக்கு இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. இதனால் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறேன் என அவர் ராஜினாமா கொடுத்தும், அதைக் காங்கிரஸ் காரியகமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸ் முதல்வர்கள் அவரைச் சந்தித்து சமாதானம் செய்தும் பயனில்லை. அவர் தன் முடிவில் உறுதியாக இருக்கிறார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``ராஜினாமா கடித்தத்தை ஏற்கெனவே வழங்கிவிட்டதால், நீண்ட நாள் தலைவர் பொறுப்பில் நீடிக்க முடியாது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி, புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும். புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளிலும் நான் பங்கேற்க மாட்டேன்” என்று உறுதிபட கூறியுள்ளார்.

`அரசியல் அதிகாரத்துக்காக மட்டுல்ல எனது போராட்டம்!' - ராஜினாமா கடிதத்தில் ராகுல் உருக்கம்

அத்துடன் விரிவான விளக்க அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ராகுல், ``காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தது எனக்குக் கிடைத்த பெருமை. நான் இந்த நாட்டுக்குக் கடமைப்பட்டுள்ளேன். ஒரு காங்கிரஸ் தலைவராக நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்க வேண்டும். அந்த வகையில் கட்சியின் எதிர்கால நலன் கருதி நான் தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறேன். கட்சியிலிருக்கும் பலர், அடுத்த தலைவரை நான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நான் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பது சரியாக இருக்காது. பாரம்பர்ய வரலாற்றுப் பெருமை கொண்டது காங்கிரஸ். அப்படியிருக்க எங்களை வழிநடத்தும் சரியான தலைவரை கட்சி அறிவிக்கும் என நம்புகிறேன்.

`அரசியல் அதிகாரத்துக்காக மட்டுல்ல எனது போராட்டம்!' - ராஜினாமா கடிதத்தில் ராகுல் உருக்கம்

அரசியல் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதற்காக அல்ல, எனது போராட்டம். பா.ஜ.க மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்போ, கோபபோ இல்லை. என்னுடைய உடம்பில் இருக்கும் ஒவ்வொரு செல்களும், பா.ஜ.க முன்னிறுத்தும் இந்தியாவை எதிர்க்கச் சொல்கின்றன. இது ஒன்றும் புதிதாகத் தொடங்கிய போராட்டம் அல்ல. நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்த போராட்டம் தான். அவர்கள் எங்கெல்லாம் வேற்றுமை பார்க்கிறார்களோ, அங்கு நான் சமத்துவத்தைப் பார்க்கிறேன். அவர்கள் வெறுப்பை நோக்கும் இடங்களில், நான் அன்பை விதைக்க ஆசைப்படுகிறேன். என்னுடைய இறுதி மூச்சுவரை நாட்டுக்காகச் சேவையாற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார்.