இன்னொரு 100 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு பிரதமர் பஞ்சமே இல்லை. ராகுல், பிரியங்கா, வதேரா, ரேகன், மிரயா என ஐந்து அவதாரங்கள் ஒரே நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் உதயமாகிவிட்டார்கள். காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற வந்திருக்கும் இந்தப் புதிய பிரம்மாக்களை, இந்தியாவை ரட்சிக்க வந்தவர்களாகக் காட்டத் தொடங்கி இருக்கிறது காங்கிரஸ். 'இரண்டாவது ராஜீவ்’ என்று ராகுலுக்குப் பட்டம். 'இளைய இந்திரா’ என்று பிரியங்காவுக்கு மகுடம். 'இவர்களுக்கு நான் மட்டும் இளைத்தவனா?’ என்று புல்லட்டில் ஏறிவிட்டார் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா. குடும்பமே பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால், பிள்ளைகள் வீட்டில் இருக்கப் பயப்படாதா? பிரியங்கா-வதேரா தம்பதிக்குப் பிறந்த ரேகனும் மிரயாவும் உ.பி. பிரசார மேடைக்கு வந்து கை காட்டினார்கள். அமேதியில் அந்தக் குழந்தைகளின் முகங்களைப் பார்த்த இளம் காங்கிரஸார் நம்பிக்கை பெற்றிருப்பார்கள். மொத்தத்தில் நேரு குடும்பத்தைவிட்டால் காங்கிரஸுக்குக் கதிமோட்சமே இல்லை என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது!

''முன்பு நீங்கள் எனது பாட்டியை நம்பினீர்கள். அதன் பிறகு, எனது தந்தை மீது நம்பிக்கை வைத்தீர்கள். இப்போது அதே நம்பிக்கையை என் மீது வையுங்கள்'' என்று கெஞ்சுகிறார் ராகுல். ''ராகுல் விரும் பினால், நான் தீவிர அரசியலுக்கு வரத் தயார்!'' என்று நம்பர் 10 ஜன்பத் வீட்டில் வைத்துச் சொல்ல வேண்டிய செய்தியை ரேபரேலி வெயிலில் சொல்கிறார் பிரியங்கா. ''மக்கள் விரும்பினால் நான் தேர்தலில் போட்டியிடுவேன். எனக்கு அரசியலில் அதிக ஆர்வம் உள்ளது. ஆனால், இப்போது ராகுல் தெரிவித்துள்ள கருத்துக்களை இந்தப் பகுதி மக்களுக்குச் சொல்ல வந்து உள்ளேன்!'' என்று வெளிப்படையாகவே தனது பேராசையை வெளிச்சப்படுத்தி விட் டார் வதேரா. இந்த மூன்று பேரின்கேள்வி களுக்கு மக்கள் பதில் சொல்வதற்கு முன்னதாக, முதலில் சோனியா வழிவிட்டாக வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.

வாரிசு அரசியல் காங்கிரஸ் கட்சிக்குப் புதிது அல்ல. இப்போது நாம் பார்ப்பது இந்திய தேசிய காங்கிரஸ் அல்ல, இந்திரா காங்கிரஸ்தான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தக் கலாசாரத்தை ஜவஹர்லால் நேருவே தொடங்கிவைத்தார். 'தன்னை வல்லபாய் படேல் உதாசீனப்படுத்துகிறார்’ என்பதை உணர்ந்ததுமே, இரண்டாம் கட்டத் தலைவர்களை ஐந்தாம் கட்டத் துக்கு நகர்த்தும் வேலையை நேருவே தொடங்கினார். இந்திராவுக்கு எம்.பி. பதவியைக் கொடுத்தவரும் அவரே. நேருவின் திடீர் மறைவு நேரத்தில் லால் பகதூர் சாஸ்திரியை முன்மொழிய காமராஜர் முன்வந்தார். அவரது ஆயுசும் இரண்டு ஆண்டுகளில் முடிந்தது. அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு பிரதமர்களை இழந்த காங்கிரஸுக்கு தலைமைப் பஞ்சம் வந்தது. இந்திராவை விட்டால் வேறு வழி இல்லை என்று காமராஜர் சொல்ல... மொரார்ஜி தேசாய் எதிர்த்தார். ஆனால், வாக்கெடுப்பில் மொரார்ஜியால் வெற்றி பெற முடியவில்லை. இந்திரா, ஜனநாயக முறைப்படி வென்றார். அதுதான் காங்கிரஸ் கட்சியில் நடந்த ஜனநாயக நெறிமுறையின் கடைசி நிகழ்வு. அதற்குப் பிறகு 'இந்திராவே இந்தியா’ என்ற முழக்கம் தொடங்கியது.

தன்னைப் பிரதமர் ஆக்கிய காமராஜரை விலக்கியதில் தொடங்கி... தனது மகன் சஞ்சய் காந்தியை வாரிசு ஆக்கியதில் தொடர்ந்தது இந்திராவின் அரசியல். 'எமர்ஜென்சி’ என்று இந்திரா கொண்டுவந்த அவசர நிலைக் காலத்தில் 'எக்ஸ்ட்ரா கான்ஸ்டிடியூஷனல் அத்தாரிட்டி’யாகவும் 'சூப்பர் பிரைம் மினிஸ்டர்’ ஆகவும் வலம் வந்தார் சஞ்சய். அம்மா கொண்டுவந்த 20 அம்சத் திட்டத்தைவிட, மகன் கொண்டுவந்த 4 அம்சத் திட்டம் ஆண்டவன் உத்தரவாகப் பார்க்கப்பட்டது. விமான விபத்தில் சஞ்சய் பலியாக... ஒரு சில நாட்களிலேயே 'விமானி’ ராஜீவ் அரசியல் களத்துக்குள் வந்தார். உடனே எம்.பி. ஆனார். காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் 7 பேரில் ஒருவரானார். நான்கு ஆண்டுகளுக்குள் இந்திராவின் மரணம். ராஜீவ் கையில் பிரதமர் பதவி வந்தது. அவரின் மரணமும் அடுத்த ஆறு ஆண்டுகளில் நடந்தது. ராகுலும் பிரியங்காவும் சிறு வயதினர் என்பதால், சோனியா முகத்தை காங்கிரஸ் கட்சி பார்த்தது. நரசிம்ம ராவ் வீட்டில் கூடிய கமிட்டிக் கூட்டத்தில் கட்சித் தலைவராக சோனியா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், சோனியா அதை மறுத்தார். ராஜீவ் மரணம் நிகழ்ந்த மூன்றாவது நாள் அது. சோனியாவின் நிராகரிப்புக்கு அதுகூடக் காரணமாக இருக்கலாம். நரசிம்ம ராவ்,

சீதாராம் கேசரி போன்றவர்களால் கட்சி நடத்த முடியாத நிலையில், ஆறு ஆண்டுகள் கழித்து சோனியாவே கட்சிக்குள் வந்தார். தலைமை நாற்காலியும் கிடைத்தது. 'அந்நியர் ஆளலாமா?’ என்ற அஸ்திரத்தைப் பாரதிய ஜனதா எடுத்ததும்... தன்னை 'சூப்பர் பிரைம் மினிஸ்டர்’ நிழலுக்குள் கொண்டுபோய் இருத்திக்கொண்டு, மன்மோகனை ஆட்டுவிக்கும் காரியத்தை சோனியா கனகச்சிதமாகப் பார்க் கிறார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் வாரிசு வளர்ந்துவிட்டது. நெக்ஸ்ட்... ராகுல்!

இதுதான் சோனியாவின் திட்டம். இது நடந்தால், ஒரே குடும்பத்தின் நாலாவது தலைமுறை பிரதமர் நாற்காலியைப் பிடித்தது என்ற பெருமை நேரு குடும்பத்துக்குக் கிடைக்கும். 4ஜி நாற்காலி யில் உட்காரப்போவது ராகுலா... பிரியங்காவா என்பதுதான் இப்போது குழப்பமான கேள்வி!

'பிரதமர் நாற்காலியை பிரியங்காவுக்குக் கொடுத்துவிட்டு, உ.பி. முதல்வராக உட்கார ராகுல் நினைக்கிறார்’ என்கிறது டெல்லி வட்டாரம்.

''பிரதமர் ஆசை என்னை அலைக்கழிக்கவில்லை. எனக்கு வேறு ஆசை இருக்கிறது'' என்று ராகுல் சொல்லும் ரகசியக் குறிப்பு அந்த யூகத்துக்கு வலு சேர்க் கிறது. பிரியங்கா பிரதமர் ஆவதும் வதேரா அதிகாரத்தைக் கைப்பற்று வதும் ஒரே நாடகத்தின் உள் அர்த்தக் காட்சிகள்தானே? அதனால்தான் தனது புல்லட் பயணத்தை வதேராவும் தொடங்கிவிட்டார்.

இது கட்சிக்குப் புது நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது. ராஜீவ் பிரதமர் ஆனபோது, மூத்த தலைவர் கமலாபதி திரிபாதி ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டார். 'கட்சிக்காக இதுவரை உழைத்தவர்களைப் புறக்கணித்துவிட்டு, யாரோ சில ஓய்வுபெற்ற அதிகாரிகளின் கைக் கருவியாக காங்கிரஸ் செயல்படத்

தொடங்கிவிட்டது!'' என்று குற்றம்சாட்டினார். ரமேஷ் பண்டாரி, மணி சங்கர் அய்யர், நட்வர்சிங் போன்ற ஓய்வுபெற்ற அதிகாரிகள் ராஜீவ் காலத்தில் கோலோச்சினார்கள் என்றால், ராகுல் தன்னோடு லேப்-டாப் இளைஞர்களை மட்டுமே நெருங்கவிடுகிறார். ஆனாலும் உத்தரப் பிரதேச வளர்ச்சிக்குத் தேவையான மாற்றுத் திட்டம் ஒன்றைக்கூட அவரால் சொல்ல முடியவில்லை. மாயாவதியின் ஊழலுக்கு முன்னால் போஃபர்ஸ் ஊழலுக்கு முழு விளக் கத்தை ராகுல் கொடுத்தாக வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன்னால் 'இந்து’ சித்ரா சுப்பிரமணியமும் 'எக்ஸ்பிரஸ்’ அருண்ஷோரியும் கேட்ட கேள்விகள் இன்னமும் பதில் சொல்ல முடியாத வையாகவே கிடக்கின்றன. போலியாக உருவாக்கப்பட்ட கம்பெனிகளில் இத்தாலி பிரஜைகள் இருந்ததும்... குவோத்ரோச்சி என்ற ஆயுதத் தரகரைக் காப்பாற்ற இன்று வரை எடுத்துவரும் முயற்சிகளும்... ஊழ லுக்கு எதிரான ராகுலின் பிம்பத்துக்கு ஊனம் ஏற்படுத்துபவை. சோனியா பதவி ஏற்கப் பயந்ததற்கு இதுவும் முக்கியக் காரணம்.

எனவே, பழசை ஞாபகப்படுத்தாத ஒரு முகத்தைத் தேடுகிறது காங்கிரஸ். ஆளைக் காட்டுமா உ.பி. முடிவு?