Published:Updated:

தலையங்கம் - இது கெளரவ யுத்தம் அல்ல!

தலையங்கம் - இது கெளரவ யுத்தம் அல்ல!

தலையங்கம் - இது கெளரவ யுத்தம் அல்ல!

தலையங்கம் - இது கெளரவ யுத்தம் அல்ல!

Published:Updated:
தலையங்கம் - இது கெளரவ யுத்தம் அல்ல!
தலையங்கம் - இது கெளரவ யுத்தம் அல்ல!

தேதி குறித்தாகிவிட்டது... மார்ச் 18-ம் தேதி சங்கரன்கோவிலிலுக்கு சட்ட மன்ற இடைத்தேர்தல்!

 தேதி சொல்லும் முன்பே, சட்டசபையில் எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த்தும் முதல்வர் ஜெயலலிதாவும் முன்னோட்ட சவால் விடுத்தார்கள். 'முடிந்தால் தனித்து நின்று ஜெயித்துக்காட்டுங்கள்' என்றார் முதல்வர். 'ஆளும் கட்சி என்றாலே எப்படி இடைத் தேர்தலை நடத்துவார்கள் என்பதைத்தான் போன ஆட்சியிலேயே பார்த்தோமே?' என்று எகத்தாளமாக எதிர்க் குரல் கொடுத்தார் எதிர்க் கட்சித் தலைவர். அந்த எகத்தாளத்தை நிஜமாக்கிவிடாமல், முற்றிலும் நேர்மையாக இந்தத் தேர்தல் நடக்குமா என்பதுதான் ஜெயலலிதா எதிர்நோக்கி உள்ள மிகப் பெரிய கேள்வி!

இந்தியா முழுவதும் கேலி பேசும் அளவுக்கு 'திருமங்கலம் ஃபார்முலா'வால் தமிழகம் அடைந்த கேலிப் பெயரை, துடைத்தெறியும் விதமாக 'அன்பளிப்பு'களும் அரசு இயந்திரத்தின் அடாவடிகளும் துளியும் அற்ற 'சங்கரன்கோவில் ஃபார்முலா'வை முதல்வர் உருவாக்குவாரா?

மாறாக... கட்டடங்களை மாற்றியது, கட்டணங்களை உயர்த்தியது, மின் வெட்டை முன்னிலும் கூடுதல் ஆக்கியது போன்ற நடவடிக்கைகள் தன் செல்வாக்கைப் பாதித்து இருக்கும் என்று முதல்வர் நினைப்பாரானால், அச்சம் அவரை ஆட்டத்தான் செய்யும்.

இடைத்தேர்தல்கள் என்பவை எந்தவோர் அரசுக்கோ கட்சிக்கோ கௌரவம் பார்க்கவும், கர்வம் காட்டவுமான களங்கள் அல்ல! காலாண்டு அல்லது அரையாண்டுத் தேர்வுகளைப் போலத்தான் இவையும். இது வரை சரியான முறையில்தான் செயல்பட்டு வந்தோமா என்று எடைபோட்டு, தன்னைத்தானே திருத்திக்கொள்ள ஒரு மாணவனுக்கு அளிக்கப்படும் வாய்ப்புகள் போன்றவை!

இந்த இடைத்தேர்வுகளில் குறுக்கு வழி மூலம் போலியான வெற்றியைப் பெற்று, வீண் தம்பட்டம் அடித்துக்கொண்டால், அது தன்னைத்தானே அந்த மாணவன் ஏமாற்றிக்கொள்வது அன்றி, வேறு ஏதும் இல்லை. கடைசி வரை தனது பலம் - பலவீனத்தைத் தெரிந்துகொண்டு, தன்னைத் திருத்திக்கொள்ள ஒரு மாணவனுக்கு விருப்பம் இல்லை என்றால்,  விரும்பாத ஒரு மாணவன், கெடுபிடிகள் மிகுந்த பொதுத் தேர்வின்போது தடுமாறிக் குழம்பி, தோல்வியைத்தான் சந்திக்க வேண்டி இருக்கும்!

ஜெயலலிதா விரும்பும் 'ஜெயம்' எத்தகையது?