Published:Updated:

எஜமானி ஜெ. வேலைக்காரி சசி!

நடராஜனை சிக்க வைத்த 'மாஸ்டர் பிளான்'ப.திருமாவேலன்

எஜமானி ஜெ. வேலைக்காரி சசி!

நடராஜனை சிக்க வைத்த 'மாஸ்டர் பிளான்'ப.திருமாவேலன்

Published:Updated:
##~##

ப்போதும் தன்னை முஷ்ரஃப் என்றுதான் சொல்லிக்கொள்வார் ம.நடராஜன். அதனால்தானோ என்னவோ இவரது வாழ்க்கையும் தலைமறைவாகவே கழிந்தது. இப்படிச் சொன்னதுதான், நடராஜனுக்குச் சிக்கல் அதிகமானதற்கும் காரணம். பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃபை ஒருநாள் காலையில் வீழ்த்திவிட்டு ஆட்சியைப் பிடித்தவர் முஷ்ரஃப். அதைப் போலவே அ.தி.மு.க-வையும் கைப்பற்றிவிட நடராஜன் திட்டமிடுகிறார் என்ற உள்காய்ச்சல் ஜெயலலிதா வுக்கு உண்டு. அதன் விளைவுதான் போயஸ் கார்டனில் இருந்து அவர் துரத் தப்பட்டதும் இப்போது கைதுசெய்யப்பட்டதும்!

 போலீஸ் பாதுகாப்பு அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இருக்கும். ஆனால், எப்போதும் சி.ஐ.டி. போலீஸார் கண்காணிப்பில் இருப்பவர் எம்.நடராஜன். ''பக்தவத்சலம் முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே சி.ஐ.டி. போலீஸார் கண்காணிப்பில் இருக்கிறேன். அண்ணா ஆட்சி நீங்கலாக அனைத்து முதலமைச்சர் களும் என்னை வேவு பார்த்தார்கள்!'' என்பதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்வார். தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியில் பி.யூ.சி-யும் பி.எஸ்சி-யும் படித்தவர் நடராஜன். அந்தக்

எஜமானி ஜெ. வேலைக்காரி சசி!

காலகட்டத் தில்தான் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டக் கொந்தளிப்பு பிறந்தது. தஞ்சைப் பகுதி மாணவர் தலைவராக இவர் இருந்தார். தஞ்சைக் கீழ வீதிக்கும் சாமந்தான் குளத்துக்கும் இடையில் உள்ள சந்தில் இருந்த ஒரு கட்டடத்தில் தன்னுடைய ரகசியக் கூட்டங்களை நடத் திக்கொண்டு தலைமறைவாக இருந்தார். அவரது அப்பா மருதப்பா மண்ணையார் நடந்திவந்த நெல் மண்டியில் போலீஸ் புகுந்தது. 'தி.மு.க-வின் தூண்டுதலின் பேரில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகச் சதி செய்கிறார்கள்’ என்று அனைத்து ஊர்களி லும் போலீஸாரால் மாணவர்கள் தேடப் பட்டபோது, தஞ்சையில் நடராஜனையும் தேடினார்கள். கைது செய்தார்கள். சுமார் 50 ஆண்டுகளாக நடராஜனுக்கு நிலைமை மாறவில்லை.

தஞ்சை மாவட்டம், விளார் கிராமத்தில் பிறந்த நடராஜன், தூய அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு கல்லூரிப் படிப்புக்காகத் தஞ்சை வந்தார். அந்தக் காலகட்டத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டபோது, அவருக்கு அறிமுகம் ஆனார் நடராஜன். தமிழ் ஆர்வம் காரணமாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இறங்கினார். தமிழகத்துக்குள் ராணுவத்தை வரவழைக்கக் காரணமாக இருந்த அந்தப் போராட்டத்தை நடத்தியது, தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு. அப்போது சென்னை சட்டக் கல்லூரி கெல்லீஸ் விடுதியில் கூடிய ஒரு குழுவினர் தான் பிற்காலத்தில் பிரபல அரசியல் தலைவர்களாக வளர்ந்தார்கள். வைகோ, காளிமுத்து, எல்.கணேசன், துரைமுருகன், க.பா.அறவாணன், கணேசமூர்த்தி ஆகியோ ருடன் நடராஜனும் ஒருவர். இவரது வளர்ச்சி விநோதமாக மாறிப்போனது!

படித்துவிட்டு குடும்பச் சூழ்நிலை காரணமாக பேராவூரணிக்கு அடுத்த பெருமகளூர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஆனார் நடராஜன். ஆனால், ஒரத்தநாடு தொகுதியில் தனக்காகத் தேர்தல் வேலை பார்க்க வர வேண்டும் என்று எல்.கணேசன் சொன்னதால், வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்தார். அந்தத் தேர்தலில்தான் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. ''தி.மு.க-வுக்காக உழைத்த இளைஞர்களுக்கு பி.ஆர்.ஓ. பணிகள் கொடுக்கலாம் என்று கலைஞருக்கு ஆட்களைத் தேர்வுசெய்து கொடுத்தேன். 'இதில் ஏன் உன் பெயர் இல்லை?’ என்று கேட்ட கலைஞர், என்னை யும் பி.ஆர்.ஓ. ஆக்கினார்!'' என்று சொல்வார் நடராஜன். இதனால்தான் நடராஜன்-சசிகலா திருமணத்தையே கருணாநிதி நடத்திவைக்கும் அளவுக்கு நெருக்கம் இருந்தது. அப்போது பி.ஆர்.ஓ. ஆனவர்தான் கருணாநிதியின் நிழலாக மாறிய ராஜமாணிக்கம்!

நடராஜனும் ராஜமாணிக்கமும் கல்லூரிக் காலம் முதல் நெருக்கமான நண்பர்கள். ராஜமாணிக்கத்தைப் படிக்கவைக்க ஆரம்ப காலத்தில் செலவு செய்தவரும் நடராஜன்தான். இருவரின் மனைவி பெயரும் சசிகலாதான். ஆனால், பதவி உயர்வுகள் ராஜமாணிக்கத்துக்குக் கிடைக்க கருணாநிதி வழி செய்தார். இந்த வருத்தம் நடராஜனுக்குத் துளிர்த்தது. அ.தி.மு.க. பக்கமாகத் தனது பார்வையைச் செலுத்தினார். ஜெயலலிதா வுக்கு அருகில் சசிகலா சேர்ந்தார். இந்த அடிப்படையில் பார்த்தால், தமிழ்நாட்டின் கடந்த பல ஆண்டு கால அரசியலை  இரண்டு பி.ஆர்.ஓ-க்கள் நடத்தியதாக இருக்கிறது. இன்னமும் இருக்கிறது!

எஜமானி ஜெ. வேலைக்காரி சசி!

பெருமகளூர் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக நடராஜன் வாங்கிய சம்பளம் 210 ரூபாய். கடந்த மாதத்தில் தனது மூன்று கார்களையும் ஏலம்விட்டதால் அவருக்குக் கிடைத்த பணம் 50 லட்சம். அதனை 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்’ அமைப் பதற்காக வழங்கினார் நடராஜன். இப்போது அவர் மீதான வழக்கு அந்த நிலம் தொடர்பாகத்தான் போடப்பட்டு உள்ளது. திருச்சி சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.

இன்றைக்கு சசிகலாவின் உறவுகள் ஜெயலலிதாவுக்குக் கசந்தாலும் முதலில் அவரால் புறக்கணிக்கப்பட்டவர் நடராஜன் தான். சசிகலாவைத் தன்னிடம் இருந்து பிரித்துவிடுவார், தன்னுடைய பதவிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று ஜெய லலிதாவால் கருதப்பட்டவர் நடராஜன். அதற்கேற்ப தன்னுடைய அரசியல் லாபியைத் தமிழகத்தில் எப்போதும் தக்கவைத்துக்கொண்டார். இவரது வேர்கள் டெல்லியிலும் இருந்தன. திடீரென உ.பி-யில் கன்சிராமின் உடன்பிறவா சகோதரர்போல வலம் வருவார். சமீபத்தில்கூட பிரணாப் முகர்ஜியின் உறவினரைத் தனது விழாவுக்கு அழைத்துவந்திருப்பதாக நடராஜன் சொல் லிக்கொண்டார். அவரது செயலைவிட, சொல்லுக்கு அதிகமான பப்ளிசிட்டி கிடைத்ததுதான் ஜெயலலிதாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

அவர் அ.தி.மு.க-வில் இல்லை. ஆனால், அவரைக் கட்சியில் பலரும் நண்பர்களாக வைத்துக்கொண்டார்கள். இதை அறிந்து தான் நடராஜனை நீக்குவதாக அறிவித்தார் ஜெயலலிதா. ஆனாலும், நடராஜன் சும்மா இருக்கவில்லை என்பது முதல்வருக்கு வந்த ரிப்போர்ட். ''பெங்களூரு வழக்கில் அந்த அம்மாவுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். அப்போது கட்சியை வழிநடத்தும் ஆட்கள் யாரும் அங்கே இல்லை. எனவே, அது வரை அமைதியாக இருப்போம்!'' என்று நடராஜன் பேசியதாக உளவுத் துறையின் அறிக்கை முதல்வர் கவனத்துக்குச் சென்றது.

''ஜெயலலிதாவுக்காக அனைத்துக்கும் பொறுப்பேற்க சசிகலா தயாராகிவிட்டார். ஆனால், இதைத் தடுப்பதே நடராஜன்தான்!'' என்று இன்னோர் அறிக்கையும் தரப்பட்ட தாம். ''சொத்துக் குவிப்பு வழக்கில் வாக்குமூலம் தரும்போது 'எனக்கு எதுவும் தெரியாது. போயஸ் கார்டனில் நான் வெறும் வேலைக்காரியாகத்தான் இருந்தேன்’ என்று சொல். 'என் பெயரில் வாங்கப்பட்டது அனைத்தும் நான் பணம் கொடுத்து வாங்கியது அல்ல. போடச் சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டேன்’ என்று சொன்னால் போதும்!'' என்றும் நடராஜன் சொன்னதாக அடுத்த ரிப்போர்ட்டை உளவுத் துறை வைத்துள்ளது. சுற்றிவளைத் துப் பார்த்தால், தன்னை மட்டும் மாட்டி விட்டு, சசிகலா குடும்பத்தினரைத் தப்ப வைக்க நடராஜன் திட்டமிடுகிறார் என்றே ஜெயலலிதா தரப்பு நினைத்தது. மேலும், சசிகலா குடும்பத்தில் நடராஜனைத் தவிர வேறு யாரும் வெளிப்படையாக வந்து அரசியல் செய்ய முடியாதவர்கள். பணம், அதிகாரம், தடாலடிக் காரியங்கள் பார்ப்பார்களே தவிர, பொலிடிக்கல் லாபி பண்ணக்கூடிய வல்லமை நடராஜனுக்கு மட்டும்தான் உண்டு. இந்த அடிப்படையில்தான் அவரைக் கைது செய்யும் காரியத்தை ஜெயலலிதா தொடங்கினார்.

எஜமானி ஜெ. வேலைக்காரி சசி!

''சசிகலாவுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை'' என்று திரும்பத் திரும்பச் சொல்லிவந்தார் நடராஜன். ஆனால், சமீபத்தில் நடந்த தஞ்சைக் கூட்டத்தில் ''நெடுமாறன் அய்யா மற்றும் என் மனைவி இருவரது பேச்சை மட்டும்தான் நான் கேட்பேன்!'' என்று பகிரங்கமாக அறிவித்தார். ''இதற்குப் பிறகு, நடராஜனை அமைதியாக இருக்க சசிகலா தரப்புக்குச் செய்தி சொல்லி அனுப்பினார் ஜெயலலிதா. ஆனால், 'எங்கள் பேச்சை நடராஜன் கேட்க மாட்டார்’ என்று சசிகலா தரப்பு சொல்லி அனுப்பிவிட்டது. அதனால்தான் நேரடியாகவே கைது நடவடிக்கையை ஜெயலலிதா தொடங்கினார்!'' என்றும் சொல்கிறார்கள்.

''எனக்கும் அ.தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இல்லை. நான் யாரையும் சந்திக்கவில்லை. யாருக்கும் எந்த ஆலோசனையும் சொல்லவில்லை. ஆனால், திட்டமிட்டு என்னைக் கைதுசெய்கிறார்கள்!'' என்று திரும்பத் திரும்பச் சொல்கிறாராம் நடராஜன்.

சின்ன வயதில் தனக்குக் காது குத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தனது அத்தை வீடான காசவளநாடு பகுதிக்கு ஓடிப்போனவர் நடராஜன். அவர் இப்போது சொல்வது உண்மையா... அல்லது ஜெயலலிதாவுக்குக் காது குத்தும் முயற்சியா?