Published:Updated:

அ.தி.மு.க.வில் இணைந்தார் பரிதி இளம் வழுதி!

விகடன் விமர்சனக்குழு
அ.தி.மு.க.வில் இணைந்தார் பரிதி இளம் வழுதி!
அ.தி.மு.க.வில் இணைந்தார் பரிதி இளம் வழுதி!
அ.தி.மு.க.வில் இணைந்தார் பரிதி இளம் வழுதி!

சென்னை: தி.மு.க முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் பரிதி இளம்வழுதி இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார்.

பல ஆண்டுகாலமாக தி.மு.க.வில் இருந்து வந்த பரிதி இளம்வழுதி, கடந்த தி.மு.க. ஆட்சியில் விளம்பரம் மற்றும் செய்தித்துறை அமைச்சராக இருந்தார்.

தி.மு.க.வில் முக்கிய பிரமுகராக திகழ்ந்து வந்த பரிதி இளம்வழுதி, துணைப் பொதுச் செயலாளர் ஆனார்.

இந்த நிலையில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சி பொறுப்பில் இருந்து விலகினார் பரிதி. ஆனால், தி.மு.க.வில் இருந்து விலகவில்லை.

சில காலமாக தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட பரிதி இளம்வழுதி, இன்று திடீரென போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அ.தி.மு.க.வில் இணைந்தார்.

##~~##
அவரை வரவேற்ற முதல்வர் ஜெயலலிதா, பரிதிக்கு அ.தி.மு.க உறுப்பினர் அட்டையை வழங்கி வாழ்த்தினார்.