Published:Updated:

சி.பி.ஐ.க்கு மேலும் அதிகாரம்: மத்திய அரசு ஒப்புதல்

சி.பி.ஐ.க்கு மேலும் அதிகாரம்: மத்திய அரசு ஒப்புதல்
சி.பி.ஐ.க்கு மேலும் அதிகாரம்: மத்திய அரசு ஒப்புதல்
சி.பி.ஐ.க்கு மேலும் அதிகாரம்: மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: சி.பி.ஐ.க்கு மேலும் அதிகாரம் அளிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சி.பி.ஐ அமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சி.பி.ஐ.க்கு மேலும் அதிகாரம் அளிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளி்த்துள்ளதாக தெரிவித்தார்.

ரூ.504 கோடி மதிப்பில் 80 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆராய்ச்சி பிரிவு ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜிசாட்-15, ஜி சாட்-16 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.

நிலக்கரித்துறைக்கு புதிய வழிகாட்டு ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் நிலக்கரி விலையை அரசின் கோல் இந்தியா நிறுவனம் இனி நிர்ணயிக்கும் என்றும் அவர் கூறினார்.

##~~##
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை மேற்கொள்ள வழிகாட்டு ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.
தேசிய உர நிறுவனத்தில் அரசின் 7.64 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறிய சிதம்பரம், தற்போது தேசிய உர நிறுவனத்தின் 97.64 சதவீத பங்குகள் மத்திய அரசிடம் உள்ளது என்றார்.
தேசிய உர நிறுவனத்தின் 3.74 கோடி பங்குகள் விற்பனைக்கு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இயற்கை எரிவாயு விலை 4.2 டாலரிலிருந்து 8.4 டாலராக அதிகரிக்கப்படும் என்றும் சிதம்பரம் கூறினார்.