Published:Updated:

எதிர்ப்புக்கிடையே எரிவாயு விலையை இருமடங்கு உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்!

விகடன் விமர்சனக்குழு
 எதிர்ப்புக்கிடையே எரிவாயு விலையை இருமடங்கு உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்!
எதிர்ப்புக்கிடையே எரிவாயு விலையை இருமடங்கு உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்!
 எதிர்ப்புக்கிடையே எரிவாயு விலையை இருமடங்கு உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்!

புதுடெல்லி: மின் துறை மற்றும் உரத் துறை அமைச்சகத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே, இயற்கை எரிவாயு விலையை ஏறக்குறைய இரு மடங்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் மட்டுமல்லாது, மின் கட்டணமும்,  யூரியா விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில், பெட்ரோலிய அமைச்சகத்தின் யோசனையை ஏற்று, இயற்கை எரிவாயு விலையை ஏறக்குறைய இரண்டு மடங்காக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சி.ரங்கராஜன் கமிட்டி உருவாக்கிய வழிமுறைப்படி, 3 மாதங்களுக்கு ஒருதடவை, உள்நாட்டு இயற்கை எரிவாயு விலையை மாற்றி அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த விலை உயர்வு, பொதுத்துறை, தனியார் என அனைத்து தரப்பினரும் உற்பத்தி செய்யும் இயற்கை எரிவாயுக்கும் பொருந்தும்.

இதன்படி, 4.2 டாலராக உள்ள இயற்கை எரிவாயு விலை, 8.42 டாலராக உயரும். இந்த விலை உயர்வு, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

முன்னதாக இந்த விலை உயர்வினால் மின் கட்டணம், யூரியா விலை உயரும் என்பதால் சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் சார்பில் இந்த விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை பிரதமர் பொருட்படுத்தவில்லை.

##~~##
இந்நிலையில் இயற்கை எரிவாயு விலை உயர்வால், மின் கட்டணம் உயரும் அபாயம் எழுந்துள்ளது. தற்போது, மின்சார உற்பத்தி செலவு, யூனிட்டுக்கு 2 ரூபாய் 93 காசுகளாக உள்ளது. இயற்கை எரிவாயு விலை உயர்வு அமலுக்கு வந்த பிறகு, மின் உற்பத்தி செலவு யூனிட்டுக்கு 6 ரூபாய் 40 காசுகளாக உயரும். இதனால் மின் கட்டணம் உயரும் அபாயம் உள்ளது. அதுபோல், யூரியா உற்பத்தி செலவும் அதிகரிக்கும் என்பதால், அதன் விலையும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.