Published:Updated:

அ.தி.மு.க.வில் இணைந்தார் பா.ம.க பொன்னுசாமி!

அ.தி.மு.க.வில் இணைந்தார் பா.ம.க பொன்னுசாமி!
அ.தி.மு.க.வில் இணைந்தார் பா.ம.க பொன்னுசாமி!
அ.தி.மு.க.வில் இணைந்தார் பா.ம.க பொன்னுசாமி!

சென்னை: பா.ம.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார்.

பா.ம.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி, கடந்த சில மாதங்களாக கட்சியின் மீது கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதாவை இன்று பொன்னுசாமி சந்தி்த்து அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு அ.தி.மு.க உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா வழங்கினார்.

அ.தி.மு.க.வில் இணைந்தது குறித்து பொன்னுசாமி கூறுகையில், அரசியலுக்கு தன்னை கொண்டு வந்தது ராமதாஸ் என்றும் அந்த நன்றியை மறக்க மாட்டேன் என்றும் கூறினார்.

##~~##
பா.ம.க.வில் இருந்து தாம் விலகிய போது, தன் விலகலுக்கான காரணத்தை கட்சி மேலிடம் கேட்காதது வருத்தமளிக்கிறது என்றார் பொன்னுசாமி.
முதல்வர் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையைக் கண்டு தன்னை அ.தி.மு.க.வில் தம்மை இணைத்துக் கொண்டதாகவும் பொன்னுசாமி கூறினார்.