Published:Updated:

மேகமூட்டம்: கொடநாடு சென்ற ஜெயலலிதா ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் தவிப்பு!

கோவை: மேக மூட்டம் காரணமாக கொடநாடு சென்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் தவித்து, பின்னர் கோவை சென்றது. 

கொடநாட்டில் ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாடு புறப்பட்டு சென்றார். சென்னை போயஸ் கார்டனில் இருந்து இன்று காலை 10 மணிக்கு காரில் மீனம்பாக்கம் விமான நிலையம் புறப்பட்ட அவர், பின்னர் அங்கிருந்து கொடநாட்டுக்கு ஹெலிகாப்டர் மூலமாக வந்தார்.

##~~##
ஆனால், கொடநாடு பகுதியில் மேகமூட்டம் அதிகம் இருந்ததாலும், வானிலை சரியில்லாததாலும், ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் தவித்தது. பின்னர் கோவைக்குச் சென்றது ஹெலிகாப்டர். அங்கிருந்து முதல்வர் கார் மூலம் கொடநாடு வருவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொடநாட்டில் சில வாரங்கள் அங்கு ஓய்வு எடுக்கும் முதல்வர் ஜெயலலிதா,அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.