Published:Updated:

பரிதி சென்றதால் தி.மு.க.வுக்கு இழப்பில்லை: மா.சுப்பிரமணியன்

பரிதி சென்றதால் தி.மு.க.வுக்கு இழப்பில்லை: மா.சுப்பிரமணியன்
பரிதி சென்றதால் தி.மு.க.வுக்கு இழப்பில்லை: மா.சுப்பிரமணியன்
பரிதி சென்றதால் தி.மு.க.வுக்கு இழப்பில்லை: மா.சுப்பிரமணியன்

சென்னை: பரிதி இளம்வழுதி விலகி சென்றதால் தி.மு.க.வுக்கு எந்த இழப்பும் கிடையாது என்றும் தி.மு.க.வில் இருந்து ஒருவர் போனால் நாலு பேர் வருவார்கள் என்றும் தி.மு.க. இளைஞர் அணி பொது செயலாளர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தி.மு.க. முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் பரிதி இளம்வழுதி அ.தி.மு.க.வில் சேர்ந்தது குறித்து சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், தி.மு.க. இளைஞர் அணி பொது செயலாளருமான மா.சுப்பிரமணியன் கூறுகையில், பரிதி இளம்வழுதி தி.மு.க.வில் இருந்தவரை கட்சி அவருக்கு எந்த குறையும் வைக்கவில்லை என்றார்.

பரிதி இளம்வழுதிக்கு 7 முறை எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் 6 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றார் என்றும் சுப்பிரமணியன் கூறினார்.

தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக்கப்பட்ட பரிதி இளம்வழுதிக்கு கட்சியில் துணை பொதுச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பராகவும், கலைஞரால் மிகவும் பாராட்டப்பட்டராகவும் இருந்த பரிதி, 2011ஆம் ஆண்டுக்கு பிறகு தி.மு.க.வில் இருந்து ஒதுங்கியே இருந்தார் என்று கூறிய சுப்பிரமணியன், இப்போது பரிதி அரசியல் புகலிடம் தேடி சென்றுள்ளார் என்றார்.

##~~##
பரிதி இளம்வழுதி விலகி சென்றதால் தி.மு.க.வுக்கு எந்த இழப்பும் கிடையாது என்றும் தி.மு.க.வில் இருந்து ஒருவர் போனால் நாலு பேர் வருவார்கள் என்றும் அவர் கூறினார்.
தி.மு.க. எம்.பி. கே.பி.ராமலிங்கம் கூறுகையில், அ.தி.மு.க.வில் பரிதி இளம் வழுதி இணைந்ததன் மூலம் கட்சிக்கு துரோகம் இழைத்து விட்டார் என்றார்.
ஒரு நல்ல தொண்டன் கட்சிக்கு தான் என்ன செய்தோம் என்றே நினைக்க வேண்டுமே தவிர கட்சி நமக்கு என்ன செய்தது என்று சுயநலமாக யோசிக்கக் கூடாது என்றும் ராமலிங்கம் கூறினார்.