Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

எஸ்.அருள்சாமி, நாட்டரசன்கோட்டை.

கழுகார் பதில்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஈரான் அணுகுண்டு தயாரிப்பதும் அதை சீனா பகிரங்கமாக ஆதரித்துள்ளதும் இந்தியாவுக்குப் பாதிப்பை உண்டாக்குமா?

அணுகுண்டு தயாரிப்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே பாதிப்புதானே?

''அணு சக்தித் தொழில்துறை வளர்ச்சி, பல நாடுகளின் கரங்களில் ஏராளமான அணுப் பிளவுப் பொருட்களைக் குவிக்கும். அவற்றில் இருந்து அணுகுண்டு தயாரிப்பது என்பது ஒப்பீட்டு அளவில் மிக எளிதான செயலாக மாறிவிடும்'' என்று எச்சரித்தார் பாபா. அவரது பெயரால்தான் பாபா அணுசக்தி ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. 1955-ம் ஆண்டு அணு சக்தியின் அமைதிப் பயன்பாடு என்ற கருத்தரங்கைத் தொடங்கி வைத்து தலைமை உரை ஆற்றும்போது அவர் இப்படிச் சொன்னார். இன்று, அனைத்து நாடுகளின் கைகளிலும் அணு சக்தி குவிந்துவிட்டது.

கழுகார் பதில்கள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவுத்துறைகள் தான் இத்தகைய தவறான தகவல்களை பரப்புவதாக ஈரான் சொல்லி வருகிறது. அமெரிக்கா சொல்வது பொய்யாக இருந்தால், அனைத்து நாடுகளுக்கும் நல்லதுதான். ஈரானை, சீனா ஆதரிப்பது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் மட்டும்தான். இது, நிச்சயமாக இந்தியாவைக் கவலைப்பட வைக்கும்.

 மா.ஜெகதீசன், சீர்காழி.

கழுகார் பதில்கள்

விலை இல்லா மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் கொடுப்பதற்குப் பதிலாக இன்வெர்ட்டர் கொடுக்கலாமே?

அடுத்த தடவையும் வோட்டு போட்டால்... கொடுப்பார்!

 தி.கருணாநிதி, விழிதியூர்.

கழுகார் பதில்கள்

தி.மு.க.வில் இருந்து வைகோ விலகிய நேரத்தில் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று, கருணாநிதி சொன்னாராமே... உண்மையா?

##~##

தனக்கு எதிரான சூழ்நிலை கிளம்பும் போதெல்லாம் 'அரசியலை விட்டு விலகுகிறேன்’, 'தலைமைப் பதவி தேவை இல்லை’ என்று சொல்வது கருணாநிதியின் வழக்கம் என்பது மூத்தவர்கள் அனைவருக்கும் தெரியும். அது எத்தனையோ முறை நடந்துள்ளது. வைகோ விலகல் நேரத்திலும் நடந்தது.

'அரசியலை விட்டு விலகுகிறேன் என்று நீங்கள் சொல்லுங்கள். வைகோவை உங்களிடம் அழைத்து வருகிறேன்’ என்று ஒருவர் ஆலோசனை சொன்னார். அதை ஏற்று கருணாநிதி அப்படி அறிவித்தார். 'இது உங்களை அழைத்து வருவதற்காக நடத்தப்படுவது. எனவே, உணர்ச்சிவசப்பட்டுவிடாதீர்கள்’ என்று இன்னொருவர் வைகோவிடம் சொன்னார். இரண்டு நாட்கள் இப்படியே ஓடின. 'தலைவா விலகாதே’ என்று கருணாநிதி வீட்டு முன்னால் ஒருவர் தீக்குளிக்க வந்ததாகத் தகவல் வெளியானது. கருணாநிதி மீண்டும் ஆக்டிவ் ஆனார்.

கருணாநிதிக்கு ஆலோசனை சொன்னவரும், வைகோவைத் தடுத்தவரும் இப்போதும் தி.மு.க.வில் ஆக்டிவ் ஆக இருக்கிறார்கள்.

 டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

கழுகார் பதில்கள்

கட்சியில் களை எடுக்கும்போது ஜெயலலிதா போல் கருணாநிதியால் ஏன் உறுதியாக நடந்து கொள்ள முடிய வில்லை?

யாரையாவது நீக்க நினைக்கும்போது, அவர்கள் குடும்பத்தில் யாராவது ஒருவரை அழைத்து வந்துவிடுகிறார்கள். கருணாநிதியால் என்ன செய்ய முடியும்?

 அ.ராஜா ரஹ்மான், கம்பம்.

கழுகார் பதில்கள்

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தி அ.தி.மு.க.வுக்குச் சிக்கலை உருவாக்க எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்ந்தால் என்ன?

தி.மு.க., ம.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க. ஆகியவை ஓர் அணிக்கு வராது என்பது தெரிந்த விஷயம்தானே? எதிர்க்கட்சிகள் அனைத்தும் பிரிந்து கிடப்பதுதானே ஆளும்கட்சிக்குச் சாதகம். பென்னாகரம் இடைத்தேர்தலில் வென்ற தி.மு.க. வாங்கிய வாக்குகளைவிட எதிர்த்து நின்றவர்கள்  கூடுதலாக வாங்கி இருந்தார்கள். தமிழகத்தில் இப்போதைய சூழ்நிலையில் பொதுவேட்பாளர் என்பது சாத்தியம் இல்லை.

 சுப்பு வேதையா சித்திரவேலு, கருப்பம்புலம்.

கழுகார் பதில்கள்

சரியாகச் சொன்னால் பரிசு தர்றேன்... சங்கரன்கோவிலில் இரண்டாவது இடம் யாருக்கு?

க்ளுவாகச் சொல்கிறேன்! அந்தக் கட்சியின் பெயரில் 'திராவிட’ என்ற வார்த்தை இருக்கும்!

கழுகார் பதில்கள்

பி.சூடாமணி, சென்னை-93.

ஜெயலலிதா வழக்கில் ஆஜரான வக்கீல் ஆச்சார்யாவை அந்த வழக்கில் இருந்து விலக்க கர்நாடக அரசு முனைப்புக் காட்டியது பி.ஜே.பி.க்கு ஏற்பட்ட கரும்புள்ளியா?

நிச்சயமாக! இந்தக் குற்றச்சாட்டை மீடியாக்க ளிடம் பகிரங்கமாக ஆச்சார்யா சொன்ன பிறகும் பி.ஜே.பி. சார்பில் அது மறுக்கப்படவில்லை என்பது இந்த சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது.

 ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

கழுகார் பதில்கள்

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் மத்திய அரசின் தீவிரவாதத் தடுப்பு மையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்களே?

இந்த விஷயத்தை இரண்டாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

முதலாவது, தீவிரவாதத் தடுப்பு மையம் வேண்டுமா? வேண்டாமா? என்பது. வேண்டாம் என்று எந்த மாநில அரசும் சொல்லாது.

இரண்டாவது, மாநில அரசின் அதிகார எல்லைக் குள் தலையிடும் வகையில் இத்தகைய மையம் அமைக்க வேண்டுமா என்பது. இதில் மத்திய அரசு தவறான முறையில் செயல்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது என்பது மாநில அரசின் உரிமையும் கடமையும். அதில் நேரடியாக மத்திய அரசு தலையிட முடியாது. அனைத்து மாநில அரசுகளுடன் கலந்து பேசி இந்த சட்டத்தைத் தயாரி த்திருக்க வேண்டும். எஜமான மனோபாவத்தில் மத்திய அரசு செயல்பட்டதாக மாநில முதல்வர்கள் சொல்வதில் அர்த்தம் உள்ளது.

அதற்காக, தீவிரவாதத் தடுப்பு மையம் தேவை இல்லை என்ற முடிவை யாரும் எட்டிவிடக் கூடாது.

 கலியமுருகன், வில்லியனூர்.

கழுகார் பதில்கள்

மாணவர்களின் ஒழுங்கின்மைக்குக் காரணம் என்ன?

எது நாகரீகம் என்று உணராத பெற்றோர்கள், நல்ல நெறிகளைக் கற்பிக்காத பாடத்திட்டம், முன்மாதிரியாக நடந்து கொள்ளாத ஆசிரியர்கள், கல்வியைத் தனியாருக்குத் தாரை வார்த்துவிட்ட அரசாங்கம்... இப்படி எத்தனையோ காரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். கூட்டுக் குடும்ப அமைப்பு முறையின் சிதைவில்தான் சமுதாயத்தின்  ஒழுக்கமின்மை தளிர்க்கிறது. ஆசிரியருக்கு எதிராக அது மாணவனைக் கத்தியைத் தூக்க வைக்கிறது. போதையின் பாதைக்குத் திருப்புகிறது. சக தோழனையையே சுட்டுக்கொலை செய்யத் தூண்டு கிறது. வீட்டை சிறையாக நினைக்கிறது. சொந்தங்கள் அன்னியர்களாக மாறுகிறார்கள். திருமணங்கள் உடனடியாகக் கசக்கின்றன. ஆசிரியர்கள் மாணவி யரைக் காதலிப்பதும், மாணவனுக்கு டீச்சர் லவ் லெட்டர் கொடுப்பதுமாகத் தொடர்கிறது. வயதானவர்கள் சிறுமியரைப் பலாத்காரம் செய்வதில் முடிகிறது. ஆங்காங்கே நடக்கின்ற... செய்திகளாக வருகின்ற அவலங்கள் இவை. கலாசார ஒழுங்கின்மைக்கு எதிரான யுத்ததை பெற்றோர்கள் நடத்தி ஆகவேண்டும். இதை வேறு யாரும் செய்ய முடியாது. வேறு எவருக்கும் இந்த அக்கறை இருக்காது!

 இரா.வளவன், கோவை.

கழுகார் பதில்கள்

இந்திய மீனவர்களைச் சுட்ட இத்தாலியர்களை எந்த நாட்டுச் சட்டத்தின்படி விசாரிக்க வேண்டும்?

எந்த வழக்காக இருந்தாலும் 'குற்றம் நடந்த இடத்தின்’ சட்டப்படி விசாரிக்க வேண்டும் என்பது தானே சட்டம்? எனவே, இந்தியச் சட்டப்படி இங்குதான் விசாரிக்க வேண்டும்!

தன்னுடைய நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர், இன்னொரு நாட்டில் கைது செய்யப்பட்டார்கள் என்றதும், அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச் சரே இங்கு வருவதும், கேரளாவுக்கே சென்று அந்த மாநில முதலமைச்சரைப் பார்ப்பதுமான காட்சிகள் நமக்குப் பொறாமையாக உள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இத்தகைய அக்கறை எப்போதாவது இருந்திருக்கிறதா?

 ராஜசேகரன், ஸ்ரீவைகுண்டம்.

கழுகார் பதில்கள்

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு என்ன முடிவை அறிவிக்கும்?

அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னதாக ஜெயலலிதாவும் கருணாநிதியும் தங்களது நிலைப் பாட்டை அறிவிக்க வேண்டும். கூடங்குளம் திறக்கப் பட வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்விக்கு நேரடியான தங்களது பதிலைப் பதிவு செய்ய வேண்டும்!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்