Published:Updated:

அனைத்து அரசியல் கட்சிகளுக்கு அன்புமணி திடீர் அழைப்பு!

விகடன் விமர்சனக்குழு
அனைத்து அரசியல் கட்சிகளுக்கு அன்புமணி திடீர் அழைப்பு!
அனைத்து அரசியல் கட்சிகளுக்கு அன்புமணி திடீர் அழைப்பு!
அனைத்து அரசியல் கட்சிகளுக்கு அன்புமணி திடீர் அழைப்பு!

சென்னை: மத்திய அரசின் இயற்கை எரிவாயு விலை உயர்வை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு போராட முன்வர வேண்டும் என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதால் எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.4.70 வரை உயரும். மேலும் யூரியா உள்ளிட்ட உரங்களின் விலைகளும், வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலையும் கடுமையாக அதிகரிக்கக் கூடும்.

எரிவாயு விலை உயர்வால் ஏற்படும் மின்சாரக் கட்டண உயர்வும் மக்கள் மீது தான் திணிக்கப்படும். இதனால் மின் கட்டணம் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகரிக்கும் ஆபத்துள்ளது.

##~~##
கடந்த 3 ஆண்டுகளில் உரங்களின் விலைகள் 4 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், இயற்கை எரிவாயு விலை உயர்வால் உரங்களின் விலைகள் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்திற்கு சென்று விடும். விவசாயிகள் உழவுத் தொழிலையே கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு போராட முன்வர வேண்டும்" என்று அன்புமணி கூறியுள்ளார்.