Published:Updated:

மோசமான வானிலையால் 3 மணி நேரம் தாமதமாக கொடநாடு வந்தார் ஜெயலலிதா

விகடன் விமர்சனக்குழு
மோசமான வானிலையால் 3 மணி நேரம் தாமதமாக கொடநாடு வந்தார் ஜெயலலிதா
மோசமான வானிலையால் 3 மணி நேரம் தாமதமாக கொடநாடு வந்தார் ஜெயலலிதா

நீலகிரி: மோசமான வானிலை காரணமாக கொடநாட்டில் முதல்வர் ஜெயலலிதா பயணம் செய்த ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் தவித்ததையடுத்து, கோவை திரும்பியது. கோவை விமான நிலையத்தில் இருந்து முதல்வர், கார் மூலம் கொடநாடு வந்தார்.

மோசமான வானிலையால் 3 மணி நேரம் தாமதமாக கொடநாடு வந்தார் ஜெயலலிதா

ஓய்வுக்காக தமிழக முதல்வர் இன்று காலை சென்னையில் இருந்து கொடநாடு புறப்பட்டார். காலை 11 மணியளவில் கோவை வந்த ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொடநாடு சென்றார். ஆனால், கொடநாடு பகுதியில் மேகமூட்டம் அதிகம் இருந்ததாலும், வானிலை சரியில்லாததாலும், ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

கொடநாடு பங்களாவை சுற்றி 3 ரவுண்ட் அடித்த ஹெலிகாப்டர் தரையிறக்க முடியாததையடுத்து, மீண்டும் கோவை விமான நிலையத்தில் தரை இறங்கியது. அங்கிருந்து கார் மூலம் முதல்வர் ஜெயலலிதா கொடநாடு வந்து சேர்ந்தார்.

சாலை வழியாக முதல்வர் ஜெயலலிதா வருவதையடுத்து, கோவை விமான நிலையத்தில் இருந்து கொடநாடு வரை சாலை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் கோவையில் இருந்து சுமார் 2 மணி நேரத்தில் ஜெயலலிதா கொடநாடு வந்து சேர்ந்தார்.

##~~##

ஓரிரு வாரங்கள் கொடநாட்டில் தங்கி ஓய்வு எடுக்கும் முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொள்வார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ச.ஜெ.ரவி