Published:Updated:

மிஸ்டர் கழுகு: தா.கி. வழக்கு அப்பீல் அபாயம்!

சங்கரன்கோவில் செக்...

மிஸ்டர் கழுகு: தா.கி. வழக்கு அப்பீல் அபாயம்!

சங்கரன்கோவில் செக்...

Published:Updated:
##~##

''சங்கரன்கோவிலை தனது மானப்பிரச்னையாக முதல்வர் நினைக்கத் தொடங்கிவிட்டார்''- என்ற பீடிகையுடன் பேச ஆரம்பித்தார் கழுகார்! 

''சங்கரன்கோவில் தொகுதி அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத கோட்டைதான். தி.மு.க. பெருவாரியான வெற்றியையும் அ.தி.மு.க. படுதோல்வியையும் சந்தித்த 96-ம் ஆண்டு தேர்தலில்கூட அ.தி.மு.க. சார்பில் கருப்பசாமி சுலபமாக ஜெயித்தார். எனவே, அ.தி.மு.க-வின் வெற்றியில் சந்தேகமில்லை என்றாலும் வாக்கு வித்தியாசம் குறையக்கூடாது என்று ஜெயலலிதா நினைக்கிறார். எனவே, முக்கிய அமைச்சர்கள் நான்கைந்து பேரைத் தவிர மற்ற அனைவரையும் சங்கரன்கோவிலுக்குப் போகச் சொல்லிவிட்டார்''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அங்கேதானே இருக்கிறார்களாம்?''

''சென்னையில் நான்கைந்து பேர் இருந்தால் போதும். மற்றவர்கள் அனைவரும் சங்கரன்கோவில் வேலைகளில் மும்முரமாக இறங்க வேண்டும் என்று ஜெயலலிதா சொல்லிவிட்டார். அந்த நான்கைந்து பேரும் சுழற்சி முறையில் தேர்தல் வேலைகளில் பங்கேற்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் உத்தரவு. இதுதான், ஜெயலலிதா பயப்படுகிறாரோ என்ற சந்தேகத்தையும் கிளப்பி உள்ளது!''

மிஸ்டர் கழுகு: தா.கி. வழக்கு அப்பீல் அபாயம்!

''ம்!''

''ஆளும்கட்சி என்பதால் ஈஸியா ஜெயிக்கலாம் என்று அ.தி.மு.க-வில் கடைக்​கோடி தொண்டன் முதல் மேல்​மட்ட நிர்வாகிகள் வரையிலும் நினைக்கிறார்கள். ஆனால் அது 'குதிரைக் கொம்பாக இருக்கும்’ என்பது சிலரது கருத்து. 'ஆட்சி மாற்றம் நிகழ்ந்தும் எந்தக் காட்சி மாற்றமும் நிகழவில்லை’ என்று பொதுமக்கள் பேச ஆரம்பித்திருப்பது இப்போது, அ.தி.மு.க-வினரின் தூக்​கத்தை கலைத்திருக்கிறது. இந்த நேரத்தைப் பயன்படுத்தி குளத்தில் மீன் பிடிப்பதுபோல், 'நான் முந்தி நீ முந்தி’ என்று தி.மு.க-வும் அதைப் பின்னுக்குத் தள்ளும் வேகத்தில் ம.தி.மு.க-வும் முனைப்புடன் களத்தில் நிற்கிறது. சட்டமன்றத்தில் ஜெயலலிதா விட்ட சவாலை எதிர்கொண்டு, அந்த சவாலையே ஓட்டாக்குவதற்காக தே.மு.தி.க-வும் மல்லுக்கு நிற்கிறது. இந்த மூன்று பேரும் வேகவேகமாக வேலை பார்த்து ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகளைப் பிரிப்​பார்கள் என்று நினைத்தாலும் கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு கட்சி அதிக வாக்குகளை வாங்கிவிடக் கூடாதே என்ற பயம் முதல்வருக்கு இருக்கிறதாம்!''

''அதனால்தான் மந்திரிகளின் டேராவா?''

''தேர்தல் வேலைகள் தொடங்கியதும் 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்களை தேர்தல் பொறுப்​பாளர்களாக நியமித்தார் ஜெயலலிதா. அமைச்சர்கள் புடைசூழ வேட்பாளர் முத்துச்செல்வி வேட்புமனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து, தேர்தல் பணிக்காக தொகுதிக்குள் நுழைந்த அமைச்சர்கள் கோகுல இந்திரா, சிவபதி ஆகியோரின் பாதுகாப்பு வாகனம் விதிகளுக்கு மாறாக சுற்றியதாக அதிகாரி​களால் பிடித்துச் செல்லப்பட்டது. தேர்தல் விதி முறைகளை மீறும் செயல்கள் அவ்வப்போது தேர்தல் கமிஷன் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த தேர்தலின் போது அ.தி.மு.க-வினர் செய்த வேலையை இப்போது களத்தில் நிற்கும் மற்ற கட்சினர் செய்கிறார்கள். 'அமைச்சர்கள் பிரசாரம் செய்ய வரக்கூடாது. அப்படி அவர்கள் வந்தால் ஏழை, எளிய படிக்காத மக்கள் அவர்களின் அதிகாரத்தை கண்டு பயப்படுவார்கள்’ என்று தே.மு.தி.க புகார் செய்திருக்கிறது. அரசியல்வாதிகளின் கார்கள் தொகுதிக்குள் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் அதிகாரிகளின் கார்களும் பின்தொடர்கிறது. 'ஆளும் கட்சிதானே எப்படியும் ஜெயித்து விடலாம்’ என்று நினைத்துக் கொண்டிருந்த அ.தி.மு.க-வினர் கூட, இப்போது இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள். இந்த நிலைமை ஜெயலலிதாவுக்குச் சொல்லப்பட்டது!''

''அவர் ரியாக்ஷன் என்னவாம்?''

''அமைச்சர்கள் அனைவரையும் ஒரு இடத்தில் கூட்டிவைத்து, தேர்தல் வேலைகள் தொடர்பாக ஆலோசனை செய்ய முதல்வர் உத்தரவு இட்டார். கடந்த 16-ம் தேதி, கோவில்பட்டியிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒட்டுமொத்த அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள் என்கிற தகவல் வெளியில் கசிந்துவிட, தென் மாவட்ட மீடியாக்கள் இதை பெரிய செய்தியாகப் பிரசுரித்தன. கோவில்பட்டி மாதிரியான சின்ன ஊருக்குள் 30 மந்திரிகள் ஒரே நேரத்தில் வந்தால் என்ன ஆகும்? நிலவரம் கலவரம் ஆனது. இந்தத் தகவல் தேர்தல் கமிஷன் கவனத்துக்கும் போனது!''

''அப்புறம்?''

''அப்புறம் என்ன? ஐந்து அமைச்சர்கள் வரு​கை​யுடன் கூட்டம் முடிந்தது. அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், செந்தூர்​பாண்டியன், செல்லப்பாண்டியன், ராஜேந்திரபாலாஜி  ஆகியோர் மட்டும் போனால் போதும் என்று ஜெயலலிதா  சொல்லி விட்டாராம். நெல்லை, தூத்துக்​குடி மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், கட்சினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்​டமாக அது மாறிப்போனது. வெளிமாவட்ட அமைச்​சர்கள் ஆங்காங்கே ஹோட்டல்களில் தங்கிக்கொள்ள, அவர்கள் ஆட்கள் மட்டும் வந்தார்கள். 'கண் கொத்திப் பாம்பு போல அதிகாரிங்க கவனிக்கிறாங்க. மாற்றுக் கட்சிக்காரங்க நம்முடைய அசைவுகளை அவ்வப்போது அதிகாரிங்ககிட்ட செல்போனில் சொல்றாங்க. எனவே, நீங்க உங்க கார்ல கொடியை கட்டிட்டுப் போகாதீங்க. கிராமம், வார்டுகளுக்குப் போகும்போது மொத்தமா  உட்கார்ந்து சாப்பிடாதீங்க. தேர்தல் கமிஷனோட விதியை நாம் மதிக்க வேண்டும். குறுக்கு வழியில் போகவேண்டிய அவசியம் நமக்கு இல்லை. நம்மை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. உலக மக்கள் அனைவரும் பாராட்டும் வகையில் நாம் வெற்றி பெறுவோம். இந்த தேர்தல் மட்டுமல்ல வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் அமோக வெற்றி பெறுவோம்’ என்று படக்கென பேசி முடித்துக் கொண்டாராம் செங்கோட்டையன். இதில் ஒரு காமெடி....!''

''அதையும் சொல்லும்!''

''எப்படிச் செயல்பட வேண்​டும் என்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கட்சிக்காரர்களுக்கு வகுப்பு எடுத்துள்ளார். முடிக்கும் போது, 'நமது வேட்பாளர் முத்துலெட்சுமியை அமோகமாக வெற்றிபெறச் செய்ய வேண்டும்’ என்றார். உடனே எழுந்த வேட்பாளர், 'என்னுடைய பெயர் முத்துச்செல்வி’ என்று அமைச்சர் காதில் சொன்னார். 'ஸாரி நமது வேட்பாளர் முத்துச்செல்வியை வெற்றிபெறச் செய்யுங்கள்’ என்று நெளிந்திருக்கிறார்.

'அம்மாவின் ஆட்சி எப்போதுமே சட்டத்தின்படி நடக்கும் ஆட்சி. இப்போது, தேர்தல் ஆணைய அதிகாரிகள் விதிக்கும் உத்தரவுகளை நாம் மதித்து நடக்க வேண்டும். எதிர்க்கட்சியினர் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். எந்த கெட்டபெயரும் ஆட்சிக்கு வந்துவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பகுதிக்கும் எந்த அமைச்சர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர் என்பதைப் பின்னர் அறிவிக்கிறோம். அதன்படி அவர்களோடு சேர்ந்து வொர்க் பண்ணுங்க’ என்றார். அதைத் தொடர்ந்து 'முக்கிய நிர்வாகிகள் மட்டும் தனி அறைக்கு வாங்க. மற்றவங்க கிளம்புங்க’ என்று அமைச்சர் செங்கோட்டையன் மைக்கில் உத்தரவு போட்டார். முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட ரகசியக் கூட்டம் முடிந்து, அனைவரும் கிளம்பும் வரையிலும் 'எங்காவது பணப் பட்டுவாடா நடக்கிறதா சாப்பாடு வழங்கப்படுகிறதா’ என அதிகாரிகள் கேமராவோடு சுற்றிக்கொண்டு இருந்தனர். வரும் 29-ம் தேதி முதல், அமைச்சர்கள் படை தொகுதி முழுவதும் வலம் வரப் போகிறதாம். இடைத்தேர்தலில் வெற்றி பெற ஒட்டு மொத்த அமைச்சர்களுமே படையெடுக்க வேண்டியது இருக்கிறது என்றால் நிலைமை கொஞ்சம் சீரியஸ்தான்...’ என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள் தொகுதி​வாசிகள். எனவே....!''

''சொல்லும்!''

மிஸ்டர் கழுகு: தா.கி. வழக்கு அப்பீல் அபாயம்!

''தி.மு.க-வின் தேர்தல் பிரசாரப் பணிகள் அனைத்தையும் பார்க்க இருக்கிறார் அழகிரி. அவருக்கு செக் வைக்க ஆளும் மேலிடம் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது. அழகிரியின் தளபதிகளாக இருந்து பல்வேறு வழக்கு​களில் கைதானவர்கள் அனைவரும் வெளியே வந்துவிட்ட நிலையில் அவரது ஆட்கள் மீது மறுபடியும் வழக்குகளைப் போட்டு இழுத்தடிப்பது ஒர்க் அவுட் ஆகாது என்று ஜெயலலிதா நினைக்கிறார். எனவே இம்முறை சிக்கல் நேரடியாக அழகிரிக்கே வரலாம்!''

''அப்படியா?''

''அழகிரி கைதுக்கு காரணமான இருக்கப்போகும் வழக்கு, முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை சம்பவம். கீழ்கோர்ட் அளித்த தீர்ப்பின்படி, அழகிரி உட்பட கைதான அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். இந்த வழக்கை தமிழக அரசுதான் அப்பீல் செய்தாக வேண்டும். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தீர்ப்பு வந்ததால் மேல்முறையீடு செய்யவில்லை. இப்போது, அந்த அஸ்திரம் ஜெயலலிதா கையில் இருக்கிறது. அதை ஏவும் நேரம் வந்துவிட்டதாக முதல்வர் நினைக்கிறாராம். சில நாட்களுக்கு முன், நீதித்துறை பிரமுகர்களுடன் முதல்வர் இந்த வழக்குத் தொடர்பாக ஆலோசனை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ஃபைலை தூசி தட்டி எடுப்பதன் மூலமாக சங்கரன்கோவில்

மிஸ்டர் கழுகு: தா.கி. வழக்கு அப்பீல் அபாயம்!

தொகுதியில் அழகிரியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தலாம் என்றும் தி.மு.க. மற்றும் கருணாநிதியின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடலாம் என்றும் ஜெயலலிதா நினைக்கிறாராம். அநேகமாக இன்னும் ஒரு வாரத்தில் அப்பீல் அபாயம் ஆரம்பம் ஆகலாம்!'' என்று கொஞ்சம் இடைவெளி விட்ட கழுகாரிடம், ''பெங்களூரு தகவல் ஏதாவது உண்டா?'' என்றோம்!

''தண்டபாணி என்பவர் சசிகலாவுக்கு நெருக்கமாக வலம் வருகிறார். இவர் ஏற்கெனவே போயஸ்கார்டனில் முக்கியமானவராக வலம் வந்தவராம். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட தண்டபாணி, அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இவர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கரிடம் உதவியாளராக இருந்தவர். ஹரிபாஸ்கர், இப்போது​வரை கார்டனுக்கு நெருக்கமாக இருப்பது அனைவருக்கும் தெரியும். கார்டனுக்குப் போகும் போதெல்லாம் இவரையும் அழைத்துப் போவாராம் ஹரிபாஸ்கர். சசிகலா பெங்களூரு வரும்போது எல்லாம் அவருடனே காரில் வருவது, அவரது சந்தே

கங்களுக்குப் பதில் சொல்வது என்று கூடவே இருக்கிறார். கோர்ட்டில் சசிகலாவுக்குப் பின்னால் அமர்ந்து அத்தனையையும் குறிப்பெடுத்து வைத்துக் கொள்கிறார் இவர். இவரது நடவடிக்கை மத்திய மாநில உளவுத் துறையால் மட்டுமல்ல சசிகலா சொந்தங்களாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன!'' என்றபடி பறக்க ஆரம்பித்தார் கழுகார்!

 படங்கள்: சு.குமரேசன், ஏ.சிதம்பரம்

 சிக்கியது தடயம்!

திருப்பூரில் ஆலூக்காஸ் ஜூவல்லரியில் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளைக் கொள்ளை அடித்த சம்பவத்தில் போலீஸுக்கு முக்கியத் தடயம் கிடைத்துள்ளது. நகைக் கடைத் தெருவில் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் சில  மர்ம உருவங்கள் சிக்கி இருக்கிறதாம். மங்கலான வெளிச்சத்தில், கைகளில் செல்போன் வைத்திருக்கிறார்கள். அங்குள்ள ஒயின் ஷாப்பில் மர்ம ஆசாமிகள் சரக்கு அடித்ததை நேரில் பார்த்தவர்கள் சாட்சி சொல்லி இருக்கிறார்கள். ஓட்டல் ஒன்றில் அந்த ஆசாமிகள் சாப்பிட்டதையும் உறுதி செய்துவிட்டார்கள். கொள்ளை நடப்பதற்கு முன்பு, அந்த ஏரியாவில் இருந்து பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடன் மர்ம ஆசாமிகள் செல்போனில் அவ்வப்போது பேசி உத்தரவுகளைப் பெற்றுச் செயல்பட்டார்களாம். பொறி​வைத்துக் காத்திருக்கிறது, திருப்பூர் போலீஸ்.  

மிஸ்டர் கழுகு: தா.கி. வழக்கு அப்பீல் அபாயம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism