Published:Updated:

விஸ்வநாதன்>> வழக்கும்... வாபஸும்!

விஸ்வநாதன்>> வழக்கும்... வாபஸும்!

விஸ்வநாதன்>> வழக்கும்... வாபஸும்!

விஸ்வநாதன்>> வழக்கும்... வாபஸும்!

Published:Updated:
##~##

'போலீஸ் ஐ.ஜி-யான ஏ.கே.விஸ்வநாதன் மீது பதிவான வழக்குக்கு, போதிய முகாந்திரங்களோ, ஆதாரங்களோ இல்லை' என்று நீதிமன்றத்தில் 'க்ளீன் சர்ட்டிஃபிகேட்' கொடுத்து, இரண்டு வருட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை. 

'வருமானத்தை மீறி ஏ.கே.விஸ்வநாதன் சொத்து குவித்ததாகவும், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பகுதியில் வாங்கப்பட்ட 500 ஏக்கர் நிலத்தில் அவருடைய சொந்தங்களுக்குப் பங்கு இருப்பதாகவும் 2009-ல் பதிவு செய்த வழக்கை தீர விசாரித்தோம். அந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று தற்போது தெரிய வருகிறது. எனவே, அவர் மீதான விசாரணையைக் கைவிட தமிழக அரசு முடிவு செய்துவிட்டது' என்று லஞ்ச, ஊழல் ஒழிப்புத்துறையின் டி.எஸ்.பி-யான ஸ்டீஃபன் ஜேசுபாதம் கடந்த 22-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பவர்ஃபுல்லாக இருந்த ஓர் அதிகாரியின் கோபத்துக்கு

விஸ்வநாதன்>> வழக்கும்... வாபஸும்!

ஏ.கே.விஸ்வநாதன் ஆளானார். வருமானத்தை மீறி சொத்துக் குவித்ததாக அவர் மீது வழக்குப் பதிவாக இதுவே முக்கிய காரணம். அதோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போலீஸாரால் தாக்கப்பட்ட விவகாரத்தில், காவல்துறையின் முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக அவர் கோர்ட் படியேற வேண்டிய நிர்பந்தமும் உண்டானது. இதை வைத்து, அவரை பதவியில் இருந்தே தூக்குவதற்கான வேலைகளையும் சிலர் செய்தார்கள்.

'வருமானத்தை மீறி தான் சொத்து எதுவும் சேர்க்கவில்லை’ என்று ஏ.கே.விஸ்வநாதன் எவ்வளவோ வாதாடியும், தி.மு.க. ஆட்சி​யில் அவருக்கு நியாயம் கிடைக்காமலே இருந்தது'' என்று இதன் பின்னணியைச் சொல்லும் காவல்துறை வட்டாரம், ''ஆட்சி மாறிய பிறகு, யார் யாரெல்லாம் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உள்ளானார்கள் என்று கோப்புகள் புரட்டப்பட்டன. அதில், ஏ.கே.விஸ்வநாதன் தொடர்பான வழக்கும் எடுத்து கவனிக்கப்பட்டது.

தி.மு.க. ஆட்சியின் உயர்ந்த பீடத்தோடு தனக்கு இருந்த நெருக்கத்​தால், குறிப்பிட்ட பவர்ஃபுல் அதிகாரி நடத்திய அதிரடி ஆட்டங்களில் இதுவும் ஒன்று என்று அ.தி.மு.க. ஆட்சியின் தலைமைக்கு எடுத்துச் சொல்லப்​பட்டது.

அதைத் தொடர்ந்து, அதே லஞ்ச, ஊழல் ஒழிப்புத் துறையின் அதிகாரிகளை முடுக்கிவிட்டு, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டது. அதன் இறுதி விளைவாகத்தான் வழக்கு வாபஸ் வாங்கப்பட்டுள்​ளது'' என்றும் குறிப்பிடுகிறார்கள்.

''கோர்ட்டில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், கடமையையும் பொறுப்​பையும் தட்டிக்கழித்து, பழியை அடுத்தவர்கள் மீது சுமத்தித் தப்பிக்கப் பார்த்தார்கள் இரண்டு முக்கிய அதிகாரிகள். அப்போது மிக முக்கியப் பதவிகளில் இருந்த இருவரும், இப்போது டம்மி இடங்களுக்குத் தூக்கி அடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தி.மு.க. ஆட்சிக்கு எப்படி​யெல்லாம் சாதகமாகச் செயல்பட்டார்கள் என்ற விவரங்கள் தோண்டித் துருவப்படுகின்றன'' என்றும் எக்ஸ்ட்ரா தகவல் கொடுக்கிறார்கள் காக்கித்துறையினர்.

ஆட்சித் தலைமையின் உச்சத்தைக் கைப்பாவை ஆக்கி கிடுகிடு ஆட்டம் போட்ட அதிகாரி​களின் மீதும் சீக்கிரமே சீரியஸ் நட​வடிக்கை இருக்கும்!

-  நமது நிருபர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism