ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

ஸ்ரீ உஷா பூவராகவன், படியூர் (திருப்பூர்).

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

கருணாநிதி ஆட்சி... ஜெயலலிதா ஆட்சி... இரண்டுக்கும் நான்கு வித்தியாசங்கள் கூற முடியுமா?

தி.மு.க.வில் அமைச்சர் பதவி ஏற்றால், ஐந்து ஆண்டுகளுக்கு நிம்மதி. அ.தி.மு.க-வில் அப்படி இல்லை!

அமைச்சர்கள், அதிகாரிகள் எப்போதும் கரு ணாநிதியை சந்திக்கலாம். இங்கு, ஜெயலலிதா நினைத்தால் மட்டுமே யாரும் அவரைப் பார்க்க முடியும்!

தி.மு.க. ஆட்சியில் கோபாலபுரத்தைச் சுற்றியே ஒரு டஜன் அதிகார மையங்கள். ஜெயலலிதா துணிச்சலாக அதிகார மையங்களைத் துரத்தி அடித்துவிட்டார்.

தி.மு.க. அமைச்சர்கள் அளவுக்கு அதிகமாக ஆடித்தீர்த்தார்கள். அ.தி.மு.க. அமைச்​சர்கள் அவஸ்தைப்​படுகிறார்கள்.

கருணாநிதி ஆட்சியில் தவறுகள் கமுக்கமாக நடந்தன. ஜெயலலிதா ஆட்சியில் பச்சையாகத் தெரிந்து​விடுகிறது.

 ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

கழுகார் பதில்கள்

நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் இன்றைய சூழலில் எந்தக் கட்சியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்?

##~##

புத்தனின் போதனைதான் நினைவுக்கு வருகிறது.

'வழிகள் வான்வெளியில் இல்லை. அது நம் இதயத்திலேயே இருக்கிறது’ என்றான் புத்தன். பிரதிபலன் பார்க்காமல் நல்லது செய்ய நினைக்கும் இளைஞர்களின் சிந்தையில் இருந்து புதிய கட்சிகள் புறப்பட வேண்டும். 'பாதையைத் தேடாதே... உருவாக்கு’ என்பது இளைஞர்​களுக்குச் சொல்லப்படும் அடிநாதமான கருத்துக்களில் ஒன்று.

 வி.பரமசிவம், சென்னை.

கழுகார் பதில்கள்

'ஊழல் மூலம் உலகை அசர வைத்​ததில் முதல் இடம் கருணாநிதிக்கு’ என்று ஜெய​லலிதா சொல்வது இருக்கட்டும். கழுகார் யாரைச் சொல்கிறார்?

இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டு ஊழல் வழக்குகளை உதார​ணமாகச் சொல்ல​லாம்.

'போஃபர்ஸ்’ ராஜீவ்காந்​​தியும் 'ஸ்பெக்ட்ரம்’ ராசாவும்!

செ.அ.ஷாதலி, கோனுழாம்​பள்ளம்.

கழுகார் பதில்கள்

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்க சி.பி.ஐ-க்குப் பயிற்சி அளிக்கப்படுகிறதாமே?

இவர்களின் பயிற்சி முடிவதற்குள் பணம், சுவிஸில் இருந்து பறந்துவிடும்.

 காந்தி லெனின், திருச்சி.

கழுகார் பதில்கள்

மகிந்த ராஜபக்ஷேவுக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான 'பாரதரத்னா’ விருதை வழங்க வேண்டும் என்கிறாரே சுப்ரமணியன் சுவாமி?

கழுகார் பதில்கள்

  இந்தியாவுக்குச் சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுவதுதான் 'பாரதரத்னா’ விருது. இன்றைய காங்கிரஸ் அரசாங்கத்தின் எண்ணத்தை நிறைவேற்றிய காரணத்தால், ராஜபக்ஷே இதற்குத் தகுதியானவர்தானே! சுப்ரமணியன் சுவாமி சரியாகத்தானே பரிந்துரை செய்துள்ளார். 'இந்தியாவுக்கான யுத்​தத்தை நாங்கள் முன்னெடுத்தோம்’ என கோத்தபய ராஜபக்ஷே இந்தி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்த ஆதாரம் ஒன்றே போதுமே. 'இலங்கைத் தரப்பில் மூன்று பேரும் இந்தியத் தரப்பில் மூன்று பேரும் இருந்து தினமும் நடந்ததைப் பகிர்ந்து கொண்டோம்’ என்றும் சொன்னார் கோத்தபய. சுவாமி சொல்வதற்கு இப்படி எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. சோனியா தன்னுடைய நன்றி உணர்ச்சியை எப்படியாவது காட்டுவார்!

 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

கழுகார் பதில்கள்

'இந்தியா’ என்ற பெயரை மாற்றி வைத்தால், நம்நாடு எந்தப் பிரச்னையும் இல்லாமல் அமைதியாக வாய்ப்பு உள்ளதா?

'அமெரிக்கா’ என்று பெயர் வைத்துக்கொண்டு அவர்கள் அமைதியாகவா இருக்கிறார்கள்? 'சீனா’ என்று வைத்துக்கொண்டவர்கள் சுகமாகவா இருக்கிறார்கள்? எந்தத் தலைவலியும் பெயரில் இல்லை. தலைவர்களிடம் இருக்​கிறது!

 போத்தனூர் புலிச்சோழன், கோயம்புத்தூர்.

கழுகார் பதில்கள்

தலைவர்களின் புத்திரர்களுக்குப் புத்திமதி சொல்ல நேர்ந்தால் நீங்கள் முதலில் புகட்டுவது எது?

பதவி உங்கள் அப்பாவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல!

 எம்.கல்யாணசுந்தரம், கோயம்புத்தூர்.

கழுகார் பதில்கள்

'கச்சத்தீவை மீட்பதால் பலன் இல்லை. அதைச் சுற்றிய பகுதிகளில் மீன்வளம் இல்லை’ என்று, காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறுகிறாரே?

கடலுக்கு அடியில் மீன்வளம் இல்லை என்ற அளவுக்கு ஞானம் பெற்றுவிட்டாரே! நமக்கு வாய்த்த தலைவர்கள் எவ்வளவு தகுதியானவர்கள்!

 அ.இராஜப்பன், கருமத்தம்பட்டி.

கழுகார் பதில்கள்

ஜெயலலிதாவின் இப்போதைய 'சிம்மசொப்பனம்’ யார்?

'சொப்பனம்’ காணவிடாமல் தடுக்கும் மின் வெட்டு!

கழுகார் பதில்கள்

'எங்கள் நிறுவனத்துக்குத் தொடர்பு இல்லை!’

கடந்த 8.2.2012 ஜூ.வி. இதழில், 'ராவணன் - படம் எடுத்து ஆடிய பத்துத் தலைகள்’ என்று வெளியிட்டு இருந்த கட்டுரை குறித்து, நமக்கு ஒரு விளக்கம் அனுப்பி இருக்கிறார், கோவையைச் சேர்ந்த ஸ்ரீ கருடா புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பி.கிருஷ்ணகுமார்.

அதில், 'அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலு​மணியின் பதவி பறிபோனதற்குக் காரணம், எங்களது நிறுவனத்துடன் இருந்த தொடர்பு என்ற வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எங்களது நிறுவனத்துக்கும் எஸ்.பி.வேலுமணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கேபிள் டி.வி. துறையில் இருந்த நாங்கள், கடந்த ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வந்தோம். எங்களைப் போலவே 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கோவையில் உள்ளன. ஆனாலும், வருமானத்தில் பெரும் பகுதியை விளம்பரத்துக்கு நாங்கள் செலவிடுவதால், எங்கள் நிறுவனம் பெரிய நிறுவனம் போல் தோற்றம் அளிக்கிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.