Published:Updated:

17 ஆண்டுகள், 8 தேசியக்கட்சிகள்; அறியப்படாத நபர்கள் மூலம் ரூ.15,000 கோடி நன்கொடை வசூல் - ADR அறிக்கை

நன்கொடைப் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற தொகை

2020-21-ல் கொரோனா தொற்றுநோய் பரவியபோது ரூ.690 கோடி வரை நன்கொடையாகச் சேகரித்திருக்கின்றன அரசியல் கட்சிகள்.

17 ஆண்டுகள், 8 தேசியக்கட்சிகள்; அறியப்படாத நபர்கள் மூலம் ரூ.15,000 கோடி நன்கொடை வசூல் - ADR அறிக்கை

2020-21-ல் கொரோனா தொற்றுநோய் பரவியபோது ரூ.690 கோடி வரை நன்கொடையாகச் சேகரித்திருக்கின்றன அரசியல் கட்சிகள்.

Published:Updated:
நன்கொடைப் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற தொகை

கடந்த 2004-2021-க்கு இடையிலான காலகட்டத்தில், அதாவது கட்ந்த 17 ஆண்டுகளில், எட்டு தேசியக் கட்சிகள் அறியப்படாத நபர்கள் மூலம் நன்கொடையாக 15,000 கோடி ரூபாயை மேல் திரட்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக தேர்தல் சீர்திருத்தங்களில் பணியாற்றும் அரசு சாரா அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தயாரித்த அறிக்கையில், ``17 ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்குப் பெயர் குறிப்பிடாமல் 4,262 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியிருக்கிறார்கள்.

அதாவது, நன்கொடையாளர்களின் பெயர் கொண்ட ரசீதுகள் தேர்தல் ஆணையம், வருமான வரித்துறைக்கு வெளியிடாமல் நன்கொடை வழங்கியவர்கள். மேலும், வழங்கப்படும் நிதிக்கான ஆதாரங்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் தொடர்பாக, விசாரிக்கப்படாமல் தேசியக் கட்சிகளுக்கு இவ்வளவு பெரிய பணம் வருவது கவலையளிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

காங்கிரஸ் - பாஜக
காங்கிரஸ் - பாஜக

மேலும், ``அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்கப்பட்ட நன்கொடைகளில் 36 சதவிகிதத்துக்கும் அதிகமான நிதிகள் யாரிடமிருந்து வந்தவை எனக் கண்டுபிடிக்க முடியாதவை. ஜூன் 2013-ல் கட்சிகள் RTI சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டாலும், நிதி தொடர்பான முழு வெளிப்படைத்தன்மை, தற்போதைய சட்டங்களின் கீழ் கொண்டுவர சாத்தியமில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ``2020-21-ல் கொரோனா தொற்றுநோய் பரவியபோது நாடு ஸ்தம்பித்து, லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். இந்த நிலையிலும், முன்னணி அரசியல் கட்சிகள், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட ரூ.325 கோடி உட்பட, ரூ.690 கோடி வரை வருமானமாகச் சேகரித்திருக்கின்றன. மேலும், 2020-21-ம் ஆண்டில் தேர்தல் பத்திரப் பணத்தில் 77 சதவிகிதம் அதாவது ரூ.250 கோடி , 27 மாநிலக் கட்சிகளுக்குச் சென்றிருக்கிறது.

அ.தி.மு.க கூட்டணி
அ.தி.மு.க கூட்டணி

அதில், சிவசேனா, டி.ஆர்.எஸ்., ஒய்.எஸ்.ஆர்-காங்., ஆம் ஆத்மி, பி.ஜே.டி., தி.மு.க., ஜே.டி(எஸ்)., ஜே.டி(யு)., ஏ.ஜி.பி., அ.இ.அ.தி.மு.க., ஏ.ஐ.எஃப்.பி., ஏ.ஐ.எம்.ஐ.எம்., ஏ.ஐ.யு.டி.எஃப்., ஜே.எம்.எம் மற்றும் எம்.என்.எஸ் ஆகியவை முக்கியக் கட்சிகளாக வரையறுக்கப்படுகிறது. மேலும், பாஜக, காங்கிரஸ், டிஎம்சி, என்சிபி, சிபிஎம், பிஎஸ்பி, சிபிஐ மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய எட்டு கட்சிகளுக்கு ரூ.74 கோடி கிடைத்தது குறிப்பிடத்தக்கது" எனத் தெரிவித்திருக்கிறது.