Election bannerElection banner
Published:Updated:

170 எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவல்; 5 மாநிலங்களில் ஆட்சியிழப்பு - பெரிதும் பாதிக்கப்பட்ட காங்கிரஸ்

சோனியா, ராகுல், பிரியங்கா
சோனியா, ராகுல், பிரியங்கா

கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 170 சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு கட்சிகளில் சேர்ந்ததாக அறிக்கை வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஏ.டி.ஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தச் சங்கம், ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், கடந்த ஐந்து ஆண்டுகளில், கட்சி மாறிய எம்.எல்.ஏ-க்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ்
காங்கிரஸ்
Twitter/@RahulGandhi

கடந்த 2016 முதல் 2020-ம் ஆண்டு வரையிலான காலகட்டம் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், தாங்கள் சார்ந்திருந்த கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு மாறி தேர்தலைச் சந்தித்தது தெரியவந்திருக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிக அளவிலான உறுப்பினர்கள் வெளியேறி வேறு கட்சிகளுக்குச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸைச் சேர்ந்த 170 எம்.எல்.ஏ-க்கள், அந்தக் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வுக்கு தாவி தேர்தலைச் சந்தித்துள்ளனர்.

இந்தக் காலகட்டத்தில், பல்வேறு கட்சிகளிலிருந்து 182 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் இணைந்திருக்கின்றனர். அதேநேரத்தில், பா.ஜ.க-வைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் வேறு கட்சிகளில் இணைந்துள்ளனர். 38 பேர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளனர். 25 பேர் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைந்திருப்பதும், இந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரியவருகிறது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி
சோனியா காந்தி, ராகுல் காந்தி

இந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறியதால், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், கோவா, அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. எம்.எல்.ஏ-க்களின் கட்சித் தாவல்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட கட்சி காங்கிரஸ்தான் என்கிறது ஆய்வு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு