Published:Updated:

”மக்கள் அழைத்தார்கள்... அதனால் வந்தேன்!”

சமஸ்: படங்கள்: வீ.நாகமணி

”மக்கள் அழைத்தார்கள்... அதனால் வந்தேன்!”

சமஸ்: படங்கள்: வீ.நாகமணி

Published:Updated:
##~##
திரடியான பேச்சுக்களால் அரசியல் அரங்கத்தை அதிரவைக்கிறார் அன்புமணி ராமதாஸ். ''திராவிட இயக்கங்களால் தமிழ்நாட்டுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா, வைகோ... இவர்கள் எவருமே தமிழர்களே இல்லை. தமிழர் தலைவர் ராமதாஸ் மட்டும்தான்'' என்பது இவரது புது குண்டு! 'புதிய அரசியல்... புதிய நம்பிக்கை’ என்பது இவரது புது முழக்கம். என்ன திட்டத்தில் இருக்கிறது பா.ம.க? மனம் திறக்கிறார் அன்புமணி ராமதாஸ்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அது என்ன 'புதிய அரசியல்... புதிய நம்பிக்கை’?''

''கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தைச் சீரழித்து வருகின்றன. இலவசக் கலாசாரம், சினிமா கலாசாரம், சாராயக் கலாசாரம். இவை மூன்றுதான் தமிழன் கண்ட பலன்கள். போதும்... திராவிடக் கட்சிகளால் மக்கள் அடைந்த பலன்கள் போதும். தமிழகத்தை ஆளும் எல்லாத் தகுதிகளும் பா.ம.க-வுக்கு இருக்கின்றன; எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மக்களை நோக்கிப் போகிறோம். பா.ம.க-வின் இந்தப் புதிய பயணத்துக்குப் பெயர்தான் 'புதிய அரசியல்... புதிய நம்பிக்கை’. இனி, எங்கள் அரசியல் 'சயின்டிஃபிக் பேஸ்டு’ அரசியலாக இருக்கும்; 'மைக்ரோ பிளானிங்’ அரசியலாக இருக்கும். நவீன யுகத்துக்கான அரசியலாக இருக்கும்!''

''நவீன யுகத்துக்கான அரசியல் என்கிறீர்கள்... ஆனால், உங்களுடைய சாதிய அரசியல் சரிதானா?''

”மக்கள் அழைத்தார்கள்... அதனால் வந்தேன்!”

''சாதி வேண்டாம் என்றுதான் நாங்களும் நினைக்கிறோம். சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பா.ம.க-வின் இலக்கு. ஆனால், சாதி இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா? இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் சாதிரீதி யாகத்தான் அடிமைப்படுத்தப்பட்டனர். அதனால், சீர்திருத்தத்தை அங்கே இருந்துதான் தொடங்க வேண்டும்.''

''இடையில் கொஞ்ச நாட்கள் பா.ம.க-வைச் சாதி அடையாளத்துக்கு அப்பாற்பட்ட கட்சியாக்குவது தொடர்பாகப் பேசினீர்கள். ஆனால், இப்போது கட்சியில் மீண்டும் வன்னியர் முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. பா.ம.க. குழப்பத்தில் இருக்கிறதா?''

''அப்படி எல்லாம் இல்லை. அடிப் படையில் அடித்தட்டு மக்களுக்கான கட்சி பா.ம.க. தமிழகத்திலேயே அதிகக் குடிசை கள் உள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட் டம். தமிழகத்தில் மனித வளக் குறியீட்டில் கடைசி ஐந்து இடங்களில் இருக்கும் மாவட்டங்கள் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர். கல்வி வளர்ச்சியில், உள்கட்டமைப்பில்... எல்லாவற்றிலும் வட தமிழகம் பின்தங்கி இருக்கிறது. யார் இங்கு பெரும்பான்மை மக்கள்? வன்னியர்கள். அவர்களுக்காகப் போராடுவது சாதி அரசியல் ஆகாது. அதைச் சமூக நீதி அரசியல் என்றே கொள்ள வேண்டும்!''

''பிற கட்சிகளை நீங்கள் குறை கூறுகிறீர்கள். ஆனால், உங்கள் கட்சியும் அதே வாரிசு அரசியல் பாதையில்தானே பயணிக்கிறது?''

''என் அப்பா கஷ்டப்பட்டவர். கடுமையான வறுமையில் வளர்ந்தவர். ஆடு, மாடு மேய்த்து, சாணி பொறுக்கி, மூட்டை தூக்கி... இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுதான் டாக்டருக்குப் படித்தார். ஆனால், நான் அப்படி எல்லாம் இல்லை. ஏற்காட்டில், ஆங்கிலோ இந்தியன் ஸ்கூலில் படித்தேன். அப்போது என் கனவு பைலட் ஆவது. நான் டாக்டர் ஆனதுகூட அப்பாவுடைய விருப்பம்தான். அப்போது எல்லாம் சாதி, சமுதாயம், கஷ்ட - நஷ்டம் எதுவுமே எனக்குத் தெரியாது.ஸ்கூலிலும் ஹாஸ்டலிலும் ஆங்கிலத்தில் பேசிப் பழகிய எனக்கு, வீட்டுக்கு வரும்போது தமிழ் வார்த்தைகளே புதிதாக இருக்கும். படிப்பு முடிந்ததும்

ஒன்றரை வருஷம் நல்லாழம் கிராமத்தில் பணியாற்றினேன். அப்போதுதான் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தது. சாதியப் பாகுபாடுகள் புரிய ஆரம்பித்தன. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். குழந்தைகள் பிறந்ததும் அவர்கள் படிப்புக்காக திண்டிவனத்தில் இருந்து சென்னை வந்தேன். கட்டுமானத் தொழிலில் இறங்கினேன். மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது மட்டும் ஓடிக் கொண்டே இருந்தது. என்னைப் பொறுத்த அளவில் 'பசுமைத் தாயகம்’ அதற்குப் போதுமான தாக இருந்தது. ஆனால், லட்சோப லட்ச மக்களும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் நான் பொறுப்புக்கு வர வேண்டும் என்று அழைத்தபோது... என்னால் தவிர்க்க முடியாமல் போய்விட்டது!''

''அப்படியென்றால், மக்கள் அழைத்ததால்தான் அரசியலுக்கு வந்தீர்களா?''

''ஆமாம். அதை இன்றைக்கு நினைத்தாலும் என் கண்கள் கலங்கும். ஒருநாள் மனைவியுடன் காரில் சென்றேன். வழியில் காரை நிறுத்தி என் காருக்கு முத்தமிட்டு, பாசத்தை வெளிக்காட்டினார்கள் மக்கள். என் மனைவியிடம்

கேட்டேன், 'இவர்களுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்?’ '' (கண் கலங்குகிறார்).

''உங்கள் தந்தை, 'என் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்தால், என்னைச் சவுக்கால் அடியுங்கள்’ என்று அறிவித்தவர். அப்படிப்பட்டவர் உங்களுடைய அரசியல் பிரவேசத்துக்கு எப்படிச் சம்மதித்தார்?''

''ஒரு ரகசியம் சொல்லவா? நாளைக்கு நான் மந்திரி பதவி ஏற்கிறேன் என்றால், இன்றைக்கு இரவுதான் அப்பா சம்மதிக்கிறார். அதுவும் எப்படி? கட்சியின் அத்தனை தலைவர்களும் ஒருமித்த குரலில் 'தம்பியைப் பதவியில் அமர்த்துங்கள்’ என்று அப்பாவிடம் வலியுறுத்தியபோது.

இந்தியாவிலேயே 'எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு, அரசியலுக்கு வந்த ஒரே தலைவர் அப்பா. தான் முதல்வர், பிள்ளைகள் துணை முதல்வர், மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்று குடும்பத்தையே பதவியில் அமர்த்தியவர் அல்ல அவர். இந்த வாக்குறுதியையும் அவர் காப்பாற்றி இருப்பார். கட்சியினரின் வற்புறுத்தலால்தான் மீறினார்.''

''மது, புகைப் பழக்கத்துக்குத் தடை, டிஸ்கொதே, பப் ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடு, பிடிக்காத திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகள் மீது தாக்குதல்... இவை எல்லாம் தமிழகத்தின் 'கலாசாரக் காவலர்’களாக உங்களைக் காட்டிக்கொள்ளும் முயற்சியா?''

''அறிவுரை சொன்னால், கேட்கிற நிலையில் இன்றைய தலைமுறை இல்லை. உலகிலேயே நடிகனுக்குப் பால் அபிஷேகமும் பீர் அபிஷேகமும் நடத்தும் ரசிகர் கூட்டம் இங்குதான் இருக்கிறது. நாட்டிலேயே புற்றுநோயாளிகள் அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் இருக்கிறது. உலக சுகாதார மையம் சொல்கிறது, 'அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மது அருந்தாத இளைஞர்களே இருக்க மாட்டார்கள்’ என்று. அந்த நிலைக்குத் தமிழகம் சென்றுவிட நாங்கள் அனு மதிக்க மாட்டோம்.''

''உங்களுக்குப் புகை, மதுப் பழக்கம் உண்டா?''

''ம்ஹூம்... தொட்டதே இல்லை.''

”மக்கள் அழைத்தார்கள்... அதனால் வந்தேன்!”

''தமிழர் என்ற சொல்லுக்கு, பா.ம.க. புதிய வரையறை வகுக்கிறதா?''

''ஆமாம். தமிழ் பேசுவதாலேயே வந்தேறிகளை எப்படித் தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

”மக்கள் அழைத்தார்கள்... அதனால் வந்தேன்!”

திராவிடர்கள் என்றால் யார்? திராவிடக் கட்சிகள், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், தமிழர்கள் எல்லோரும் திராவிடர்கள் என்று சொல்கின்றன. அப்படி என்றால், ஆந்திரத்திலோ, கர்நாடகத்திலோ, கேரளத்திலோ, திராவிட என்ற பெயரில் ஒரு கட்சியாவது இருக்க வேண்டுமே... இருக்கிறதா? கிடையாது. ஆந்திரத்தில் ரெட்டி, நாயுடு தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. கேரளத்தில் நாயர், மேனன் தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. கர்நாடகத்தில் லிங்காயத்துகள், ஒகேலிக்கர்கள் தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. தமிழகத் தில் மட்டும்தான் இந்த அக்கிரமம். காரணம், இங்கு திராவிடர்கள் என்ற பெயரில் ஆட்சி யில் ஒட்டிக்கொள்பவர்கள் எவரும் தமிழர் கள் இல்லை என்பதுதான்.''

''அடுத்தடுத்த தேர்தல் தோல்விகள் மூலம் என்ன கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள்?''

''திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது தவறு. இனி ஒருபோதும் அந்தத் தவறைச் செய்ய மாட்டோம்.''

''இதை உறுதியாக எடுத்துக்கொள்ளலாமா?''

''சத்தியமாக!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism