Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

Published:Updated:
கழுகார் பதில்கள்

சுரேஷ்நம்பி, திருவாரூர். 

கழுகார் பதில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெங்களூருவில் பத்திரிகையாளர்களைத் தாக்கிய வழக்கறிஞர்கள் குறித்து?

கழுகார் பதில்கள்

வழக்கறிஞர்கள் தங்கள் திறமையை கோர்ட்டில் காட்ட வேண்டும். ரோட்டில் அல்ல!

கிருபாகரன், ராமநாதபுரம்.

கழுகார் பதில்கள்

'சென்னை சூளைமேடு துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை’ என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சொல்கிறாரே?

##~##

இதை, கச்சத்தீவில் உட்கார்ந்து சொல்வதைவிட சென்னை காவல்துறையில் ஆஜராகி அவர் சொல்ல வேண்டும். 24 ஆண்டுகளுக்கு முன்னால் பட்டப்பகலில் துப்பாக்கியை எடுத்துச் சுட்டதாக வழக்குப் பதிவாகி உள்ளது. எத்தனையோ முறை சென்னைக்கு வந்து போனார். டெல்லியில் பிரதமர், ஜனாதிபதி, சோனியா கலந்து கொண்ட விருந்தில் பழரசக் கோப்பையுடன் நின்றார். இந்தியாவின் சட்டம் - ஒழுங்கைக் கவனிக்க வேண்டிய உள்துறை அமைச்சரும் அருகில் இருந்தார். இவரை இதுவரை போலீஸ் வளைக்காததன் பின்னணி, அலட்சியமா அல்லது மத்திய அரசு மீதான பயமா?

 விஜய்வேல், மேல்மருவத்தூர்.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதி மீறலுக்கு ரூ 500தான் அபராதம் விதிக்க முடியும் என்கிறாரே குரேஷி?

ஒரு வோட்டுக்கு 2000 முதல் 5000 வரை கொடுப்பவர்களால் 500 தர முடியாதா? அபராதத்​துக்கு 500 ரூபாயை எடுத்துவைத்துக்கொண்டு வாக்காளர்களுக்கு கொடுத்தால் போகிறது.

 சு.சுப்பிரமணியன், கன்னியாகுமரி.

கழுகார் பதில்கள்

அரசுப் பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் ஊடுருவி​விட்டார்கள் என்று திக்விஜய்சிங் சொல்வது உண்மையா?

'தொண்டு நிறுவனங்களைக் கண்காணிக்க வேண்டும்’ என்று மன்மோகன்சிங் சொன்னதை ஆர்.எஸ்.எஸ். மனப்பூர்வமாக வழிமொழிந்து உள்ளது. ஒருவேளை திக்விஜய்சிங் சொல்வது மன்மோ​​கனையா?

 ஆ.துரைசாமி, திருப்பூர்.

கழுகார் பதில்கள்

பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் வழங்குவதாக ஜெயலலிதா அறிவித்திருப்பது நல்ல விஷயம்தானே?

ஜெனரேட்டர் கொடுக்கும் வேகத்தைப் பார்த்தால், ஆகஸ்ட் மாதம்கூட மின்சாரம் கொடுக்க மாட்டாரோ?

தேவேந்திரன், ஊட்டி.

கழுகார் பதில்கள்

நல்ல வேலைக்குப் போவது மட்டுமே இன்றைய இளைஞர்களின் லட்சியமாக ஆகிவிட்டதே?

'ஒரு நல்ல மனிதன், வசதி இருக்கும் பாதையைத் தேட மாட்டான். மாறாகக் கடமை இருக்கும் பாதை​யைத்தான் தேடுவான்’ - என்பது யாரோ சொன்ன நல்வழி!

எஸ்.ராஜேஷ்குமார், வாணியம்பாடி.

கழுகார் பதில்கள்

12-ம் தேதி தொடங்க இருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் அமைதியாக நடக்குமா?

அமைதியாக நடக்கும் அளவுக்கு நாட்டில் எந்த நல்ல விஷயமும் மத்திய அரசாங்கத்தால் நடந்து விடவில்லையே!

122 செல்போன் நிறுவன உரிமங்களை ரத்து செய்ததன் மூலமாக மன்மோகனின் பிரதமர் பதவிக்கு அடி கொடுத்தது உச்ச நீதிமன்றம். சோனியாவின் தலைமை, ராகுலின் புதுஅவதாரம் ஆகியவை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது உத்தரப் பிரதேச மக்களால். கட்சி ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் காங்கிரஸின் முகமுடி கிழிந்திருக்கும் போது தொடங்கும் கூட்டத் தொடர் அமைதியாக எப்படி இருக்கும்?

 குமார.லெட்சுமணன், காரைக்குடி.

கழுகார் பதில்கள்

வடநாட்டுக் கொள்ளையர் இங்கு அதிகமானது ஏன்?

வடநாட்டில் இருந்து வந்த கொள்ளையர் என்று கேளுங்கள்! வடநாட்டில் இருந்து வேலைக்கு வரும் அத்தனை இளைஞர்களையும் கொள்ளையராகப் பார்க்கும் கொடும்காலம் இது. ஒரு காலத்தில் ஈழத் தமிழர்களையும் அதன்பிறகு இஸ்லாமிய மக்களையும் ஒட்டு மொத்தமாக சந்தேகக் கண்ணுடன் பார்த்ததைப் போல, இப்போது  அப்பாவி வட இந்திய இளைஞர்களைப் புறக்கணித்துவிடக் கூடாது.

'தமிழ்நாட்டுக்குப் போனால் ஜாலியாகத் திருடலாம்’ என்று கொள்ளையருக்குத் தைரியம் கொடுத்தது தமிழக போலீஸ்தானே? அரசியல்வாதிகளின் பாதுகாப்பிலும், மூத்த அதிகாரிகளுக்கு முறைவாசல் செய்யவும், மாமூல் தரும் கொள்ளையரைக் காப்பாற்றவும், கட்டப்பஞ்சாயத்து செய்யவும், ரியல் எஸ்டேட் தொழில் பண்ணவும்தான் சில போலீஸ்காரர்களுக்கு நேரம் இருக்கிறது. இவர்கள் இப்படி நீர்த்துப்போனது தெரிந்துதான் கொள்ளையர், தமிழ்நாட்டைத் தேடி வருகிறார்கள். இம்மாதிரியான சில போலீஸாரின் மனோபாவம்தான் 'என்கவுன்டர்’ செய்யப்பட வேண்டும்.

குற்றச் சம்பவம் நடந்ததை உடனடியாகக் கண்டுபிடித்​தவருக்கு மெடல் குத்துவதை நிறுத்துங்கள்.

கழுகார் பதில்கள்

சம்பவம் நடக்காமல் தடுப்ப​வருக்கு அணிவியுங்கள்!

 கரிகாலன், கயத்தாறு.

கழுகார் பதில்கள்

'ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் சொல்லி இருப்பதைக் கவனித்தீரா?

காலம் கடந்தாவது குமரியார் உள்ளத்தில் இருந்து தமிழன் குரல் ஒலித்துள்ளது. இன்னொரு வரலாற்று நிகழ்வையும் குமரி அனந்தன் நினைவுபடுத்தி உள்ளார். 'கொடூர சம்பவங்கள் பலவற்றுக்கும் காரணமான ஹிட்லருக்கு நண்பர் என்பதால், முசோலினியைச் சந்திக்க நேரு மறுத்தார்’ என்கிறார் அனந்தன்.

மன்மோகன், நிச்சயமாக நேரு அல்ல!

 கலைஅரசன், தஞ்சாவூர்.

கழுகார் பதில்கள்

சீனாவின் பொருளாதார வளர்ச்சி திடீரென சரிவடைய என்ன காரணம்?

பெரும்பாலும் ஏற்றுமதியை நம்பியே சீனாவின் பொருளாதாரம் உள்ளது. அவர்களிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் நிலைமை சரி இல்லை. எனவேதான் சீனாவுக்குச் சரிவு.

வினோத்குமார், கோவை

கழுகார் பதில்கள்

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்​காவில் வளரும் ஒரு சிறுத்தைக் குட்டியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் தத்தெடுத்து உள்ளாரே?

நல்ல விஷயம். அவரது அப்பா ராமதாஸைத் தலைவராக்கிய போரா ட்டத்தில் உயிரிழந்த 21 குடும்பங்​களையும் கூட தத்தெடுக்கலாமே!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism