Published:Updated:

பேட்ஜ் குத்திவிட்டு பேலன்ஸ் பண்ணினார்!

பேட்ஜ் குத்திவிட்டு பேலன்ஸ் பண்ணினார்!

பேட்ஜ் குத்திவிட்டு பேலன்ஸ் பண்ணினார்!

பேட்ஜ் குத்திவிட்டு பேலன்ஸ் பண்ணினார்!

Published:Updated:
##~##

சினம் கொண்ட இரண்டு பேர் சீற்றத்தைக் குறைத்து அடங்கிய காட்சி சேலத்தில் நடந்தது! 

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்று இளைஞர் அணிப் பொறுப்பாளர்களை ஸ்டாலின் தேர்வு செய்துவந்த நிலையில், சேலத்தில்  மட்டும் வீரபாண்டி ஆறுமுகம் தன்னிச்சையாக நேர்காணல் நடத்தினார். இதனால், வீரபாண்டி ஆறுமுகத்துக்கும் ஸ்டாலினுக்கும் இடையே பனிப்போர் நடந்து வந்த நிலையில், கடந்த 6-ம் தேதி இளைஞர் அணி பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் நடத்த சேலம் வந்தார் ஸ்டாலின்.  பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் நேர்காணல். இதில் கலந்துகொண்டு ஆச்சர்யத்தை உருவாக்கினார் வீரபாண்டி ஆறுமுகம். எதிரும் புதிருமானவர்கள் என்று கருதப்படும் இவர்கள் இருவரும் இந்த மேடையில் அதிக நெருக்கம் காட்டி​னார்கள். ஸ்டாலினுக்கு வீரபாண்டி ஆறுமுகம் 'பேட்ஜ்’ குத்திவிட்டது கண்கொள்ளாக் காட்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேட்ஜ் குத்திவிட்டு பேலன்ஸ் பண்ணினார்!

முதலில் மைக் பிடித்ததும் அவர்தான். ''இளைஞர் அணிப் பொறுப்பாளர்கள் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை அறிந்துகொண்டு ஸ்டாலினின் வழிகாட்டலின்படி பணியாற்ற வேண்டும். தமிழ் நாட்டிலேயே இளைஞர் அணிப்பொறுப்பாளர் பதவிக்கு அதிகப்படியாக சேலம் மாவட்டத்தில் 1600-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருப்பது மாவட்டக் கழகத்துக்கு பெருமை. ஒவ்வொரு நகர, பேரூர், ஒன்றிய துணை அமைப்பாளர்களும் நான்கு பேரைத் தேர்வு செய்வார்கள். மாவட்ட நிர்வாகத்திலும் அதே முறையில் தேர்வு நடக்கும்'' என்றார்.

ஆனால், அடுத்து பேசிய ஸ்டாலின், ''முன்பு நகர, பேரூர், ஒன்றியப் பொறுப்​பாளர்களை மாவட்டச் செயலாளரே தேர்ந்தெடுப்பார். ஆனால் இப்போது, யாருடைய சிபாரிசும், பரிந்துரையும் இல்​லாமல் நேரடியாக நாங்களே நேர்காணல் நடத்துகிறோம். இங்கு வந்திருக்கும் 1,626 உறுப்பினர்களையும் தனித்தனியே அழைத்து நேர்காணல் நடத்தி, 259 பேரைத் தேர்வு செய்வோம்.  கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லுங்கள். பயப்பட வேண்டாம். நான் மட்டும்தான் கேள்வி கேட்பேன். என்னுடன் வீரபாண்டியார் உட்பட பலரும் இருப்பார்கள். அவர்கள் யாரும் உங்களிடம் கேள்வி கேட்க மாட்டார்கள்'' என்றார்.

முதலில், வீரபாண்டி ஒன்றியத்தைச் சேர்ந்தவர்​களுக்கு அழைப்பு வந்தது. நேர்காணல் முடிந்து வெளியே வந்த சதீஷ் என்பவரை மடக்கி​னோம். ''எங்கிருந்து வந்திருக்கீங்க? என்ன தொழில் பண்றீங்க? இளைஞர் அணி எங்கே தொடங்கப்பட்டது? தி.மு.க. எப்போது ஆட்சியைப் பிடித்தது? என்று பல கேள் விகளைக் கேட்டார். அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்லி இருக்கிறேன்'' என்றார் சந்தோஷமாக.

அடுத்து வந்த பலர், ''ஆரம்பத்தில் சென்ற சிலரிடம் மட்டும்தான் கேள்வி கேட்டார். அடுத்துச் சென்ற யாரிடமும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. பேரும், ஊரும் மட்டும் கேட்டுவிட்டு அனுப்பி விட்டார்கள்.  இந்த நேர்காணல் எல்லாம் கண் துடைப்பு. வீரபாண்டியார் ஒரு பட்டியலும், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஒரு பட்டியலும் கொடுத்து இருக்கிறார்கள். அவற்றில் இருந்துதான் ஆட்களைத் தேர்வு செய்வார்​களாம். அடுத்த வாரம் தேர்வானவர்கள் பெயர் வெளியிடுவார்களாம். அதை வைத்துதான் யாருடைய கை ஓங்கி இருக்கிறது என்பதை அறிந்து​ கொள்ள முடியும்'' என்றார்கள்.

அதையும் பார்த்துடுவோம்!  

- வீ.கே.ரமேஷ்

படம்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism