Published:Updated:

மிஸ்டர் கழுகு: கருணாநிதி ரகசியக் கட்டளை

மிஸ்டர் கழுகு: கருணாநிதி ரகசியக் கட்டளை

மிஸ்டர் கழுகு: கருணாநிதி ரகசியக் கட்டளை

மிஸ்டர் கழுகு: கருணாநிதி ரகசியக் கட்டளை

Published:Updated:
##~##

''ஸ்ரீரங்கம் பயணம் ஷேமமா?'' என்று, கழுகார் வந்ததும் கேட்டோம். 

''சத்தியமங்கலத்தில் இருந்து செண்பக மலர் வந்ததால் ஷேமம்!'' என்றபடி சொல்ல ஆரம்பித்தார் கழுகார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்ற பிறகு இரண்டாவது முறையாக ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதர் கோயிலுக்கு வந்து இருக்கிறார். ஒரே வித்தியாசம்... இந்த முறை சசிகலா இல்லை. அரக்குநிற பட்டுப் புடைவை அணிந்து ரெங்கா கோபுரம் அருகே வந்து இறங்கியவருக்கு கோவில் சார்பில் தங்கக் குடத்தில் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. காலில் செருப்பு அணியாமல் சிறிது தூரம் நடந்து சென்றார்.  

அவர் கோயிலுக்குத் தானமாக வழங்கிய பாட்டரி காரில் ஏறி, ஒவ்வொரு சன்னதியாகச் சென்று வழிபட்டார். முதலாவதாக கருடாழ்வார் சன்னதிக்கு சென்று வழிபட்டு, பிறகு பெரிய பெருமாளைத் தரிசித்தார். அப்போது சரியாக மாலை 5.39 மணி.

மிஸ்டர் கழுகு: கருணாநிதி ரகசியக் கட்டளை

'இந்த நேரம்தான் மாசி மாத பௌர்ணமியின் தொடக்கம் என்பதால், அந்த நேரத்தை முதல்வர் தேர்ந்து எடுத்தார்’ என்று கோயில் பட்டர்கள் தெரிவித்தனர். ரெங்கநாதருக்கு சிவப்பு நிற பட்டு வேட்டியும், தாயாருக்குப் பச்சை நிற பட்டுப் புடவையும் சார்த்தி வழிபட்டார். தாயார் சன்னதியில் வழிபாட்டை முடித்துக் கொண்டு சக்கரத்தாழ்வார், ராமானுஜர் சன்னதிகளில் வழிபாடுகள் செய்தார். ராமானுஜர் சன்னதியில் துளசி மாலையைக் கையில் வைத்துக்கொண்டு, 108 முறை நமோ நாராயணா மந்திரத்தை உச்சரித்து வழிபட்டார். சமீப காலமாக முதல்வருக்கு ஆன்மிக ஆலோசனைகளை வழங்கி வரும் தேவாதி சுந்தர் என்பவர், ஸ்ரீரங்கத்துக்கு அன்று காலையிலேயே வந்து அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார்.''

''இவர் புதியவரா?''

''ம்! ரெங்கநாதர் சன்னதியில் ஜெயலலிதா தனக்கு வழங்கப்பட்ட துளசித் தீர்த்தத்தை அருந்திவிட்டு, அங்கே வழிபட வந்திருந்த மூன்று பெண்களுக்கு ஒரு பை நிறைய அன்பளிப்புப் பொருட்களை வழங்கினார். கோயில் பட்டர்களுக்கு பட்டு வேட்டியும் திருச்சியில் உள்ள ஐந்து கோயில்களின் நாகஸ்வர வித்வான்களுக்கு வேட்டியுடன் தலா 5,000 ரூபாய் நன்கொடையும் அளித்து மகிழ்ந்தார். கோயில் உண்டியலில் தாராளமாகக் காணிக்கை செலுத்தியவர், பாட்டரி காரில் ஏறி பிரகாரத்தில் உள்ள அனைத்து சன்னதிகளையும் சுற்றிவிட்டு தனது காரில் ஏறி வெள்ளைக் கோபுரம் வழியாக கோயிலை விட்டு வெளியேறினார்.''

''ஓ!''

''முதல்வருக்கு வரவேற்பு அளிப்பதற்காக கோயில் யானை, 'ஆண்டாள்’ அலங்காரம் செய்யப்பட்டு நின்றது. யானைக்கு வழங்க கரும்புகளும் தயாராக இருந்தன. ஆனால், பாதுகாப்பு கருதி முதல்வர் யானையைக் கண்டுகொள்ளாமல் சென்றார். ரெங்கநாதரை வழிபடுவதற்கு உகந்த மலர் செண்பகம். அந்த மலர் திருச்சியில் கிடைக்காததால், கோயிலுக்கு வழக்கமாக மலர் சப்ளை செய்பவர், இரவோடு இரவாக ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் சென்று அங்கே அலைந்து திரிந்து கிடைத்த அத்தனை செண்பக மலர்களையும் முதல்வருக்காக அள்ளிக் கொண்டு வந்தார்.  கோயிலுக்கு முதல்வர் வருவ தற்கு சற்று முன்புதான் பூ வந்து சேர்ந்தது. அதுவரை படபடப்புடன் காத்திருந்த பட்டர்களும், அறநிலையத் துறை உயர் அதிகாரிகளும் அதன் பிறகுதான் ரிலாக்ஸ் ஆனார்கள். நட்சத்திரப்படி மார்ச் 7-ம் தேதி ஜெ-வுக்குப் பிறந்த தினம் என்பதால் இந்தக் கொண்டாட்டமாம்!''

''அன்றைய தினம் சசிகலா எப்படி இருந்தார்?''

''முதல்வருக்கு அவர் வாழ்த்துச் சொன்னாரா எனத் தெரியவில்லை! சசிகலாவைத்தான் பெங்களூரு படுத்தி எடுக்கிறதே. சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக கடந்த இரண்டு வாரங்களாக சுதாகரன், இளவரசியுடன் பெங்களூருவிலேயே தங்கி, நீதிபதியின் கேள்விகளுக்கு 'ஆமை வேகத்தில்’ விளக்கம் அளித்து வருகிறார் சசிகலா. ஏழு நாட் களாகக் கேள்விகள் கேட்கப்பட்டும் எண்ணிக்கை முன்னூறைத் தாண்டாததால், 'இனி வேகமெடுத்தே ஆக வேண்டும்’ என்ற முனைப்பில் கடந்த 7-ம் தேதி கோர்ட்டுக்கு விறுவிறுவென வந்தார் நீதிபதி மல்லிகார்ஜூனையா.

ஆனால் சசிகலா, சுதாகரன், இளவரசி மூவரும் வரவில்லை. மூவர் சார்பாக ஆஜரான சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், 'கடந்த மார்ச் 2-ம் தேதி சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் மீடியாவுக்கும் வக்கீல் களுக்கும் ஏற்பட்ட கொடூர மோதல் காரணமாக, குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. அதனால் அவர்கள் இன்று ஆஜராகவில்லை. மேலும், நேரில் ஆஜராவதில் இருந்து அவர்களுக்கு விலக்கு  அளிக்க வேண்டும்’ என்று மனுத்தாக்கல் செய்தார். காலமே இப்படி ஒரு காரணத்தை அவர்கள் கையில் கொடுத்துள்ளது.

இதற்கு அரசுத் தரப்பு வக்கீல் சந்தோஷ் சவுட்டா கடும் ஆட்சேபம் தெரிவிக்க, நீதிபதி மல்லிகார் ஜுனையா, 'இது போன்ற சின்னச்சின்னக் காரணங் களைக் காட்டி, வழக்கை தாமதிக்கக் கூடாது. எனவே மூவரும் மார்ச் 14-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவு போட்டார். அன்று ஆஜராகப்போகும் சசிகலா, பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் குறித்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதால், அதற்கான பதில்களைத் தயாரிக்கும் வேலைகளில் மும்முரம் ஆகிவிட்டாராம்!''

''தி.மு.க. பக்கம் வாரும்!''

மிஸ்டர் கழுகு: கருணாநிதி ரகசியக் கட்டளை

''இப்போது, தி.மு.க-வில் படபடப்பும் பதற்றமும் அதிகமாக இருக்கிறது.  இந்த உள்காய்ச்சலுக்குக் காரணம் சங்கரன்கோவில் இடைத்தேர்தல். ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் என்பதில் தி.மு.க-வுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இரண்டாவது இடத்தை வைகோ பிடிப்பார் என்று வரும் செய்திகள் கருணாநிதியை வருத்தமடைய வைத்துள்ளன. 'அதை மட்டும் நடக்க விட்டுறாதே. தி.மு.க. அல்லது அ.தி.மு.க. என்பதுதான் தமிழ்நாட்டு நிலைமையா இருக்கணும். வைகோ, இரண்டாவது இடத்துக்கு வந்துட்டா, இனிமே நீங்க அரசியலே பண்ண முடியாது’ என்று அழகிரியிடம் கருணாநிதி கரகரத்துச் சொன்னாராம். 'அண்ணன், தம்பி ரெண்டு பேரும் சண்டை போட்டு வெளிஆளை வளர விட்டுடாதீங்க’ என்பது கருணாநிதி இட்ட கட்டளை. அதுவரை சுணக்கமாக இருந்த அழகிரி துள்ளி எழுந்ததும், இருவரும் ஒரே மேடையில் பேசியதும் அதற்குப் பிறகுதான். 'இப்போது, அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு தி.மு.க-விலேயே ஆதரவு இல்லை. ஆனாலும் வைகோவை வளரவிடக் கூடாது என்பதற்காக இவரை ஜெயிக்க வையுங்கள்’ என்று சொல்கிறாராம் அழகிரி. 'கார்டனைப்பற்றி கவலைப்படாதீர்கள். கலிங்கப்பட்டியை வளரவிடாதீர்கள்’ என்பதுதான் கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின் ஆகிய மூவருக்கும் ஒன்லைன் அஜெண்டா!''

''இதிலாவது ஒன்று சேர்ந்தார்களே?''

''அதனால்தான் சங்கரன்கோவில் தொகு திக்கு உட்பட்ட வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியின் தேர்தல் பொறுப்பு ஸ்டாலினின் வலதுகரமான எ.வ.வேலுவிடம் தரப்பட்டுள்ளது. ஒரு வாரம் ஆகிவிட்டது. அவர் அந்தப் பகுதியில் தனது ஆட்களுடன் வந்து ஆபீஸ் திறந்து, நித்தமும் வீடு வீடாகப் போக ஆரம்பித்து விட்டார். கலிங்கப்பட்டிக்குப் பக்கத்தில் இருக்கும் திருவேங்கடத்தில் கே.என்.நேரு டேரா போட்டுள்ளார். குறிஞ்சாக்குளத்தில் பொன்முடி இருக்கிறார்.  திண்டுக்கல் பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், பொங்கலூர் பழனிச்சாமி போன்ற மாஜி அமைச்சர்கள் மொத்தப்பேரும் சங்கரன்கோவிலை வலம் வர ஆரம்பித்துள்ளார்கள். 'தி.மு.க. தனது மாஜிக்கள் அத்தனை பேரையும் இறக்கி விட்டிருப்பது தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்கு அல்ல. ம.தி.மு.க. வேட்பாளரை முந்திவிட வேண்டும் என்பதற்காகத்தான்’ என்று சொல்கிறார்கள். இந்த பாலிடிக்ஸே ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்துவிடும்’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!''

''கருணாநிதியும் சங்கரன்கோவில் செல்கிறாரே?''

''ம்... அவரது பங்களிப்பும் உண்டு. 'வைகோ, இரண்டாவது இடத்துக்கு வரக்கூடாது, தி.மு.க-வுக் கும் அ.தி.மு.க-வுக்குமான வித்தியாசம் குறைவாக இருக்க வேண்டும்’ - இந்த இரண்டும்தான் கருணா நிதியின் ரகசியக் கட்டளைகள்!'' என்றபடி கழுகார் எஸ்கேப்!

படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக், வி.ராஜேஷ்

''ஆவுடையப்பன் ஓகே!''

மிஸ்டர் கழுகு: கருணாநிதி ரகசியக் கட்டளை

சூலூர் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வான தினகரனின் திருமணம் கடந்த 7-ம் தேதி விஜயகாந்த் தலைமையில் கோவை அருகே நடந்தது. திருமண மேடையில் செம கலகலப்பாக இருந்தார் விஜயகாந்த். மணமகனுக்கு மணமகள் மாலை அணிவிக்கையில், 'நல்லாக் குனிங்க மாப்ள’ என்று நக்கலாக நாக்கைத் துருத்தி தோளில் தட்டிக் கலாய்த்தார். மண்டபத்துக்கு வெளியே போடப்பட்டிருந்த மேடையில் ஏறியதும் தனது வழக்கமான அரசியல் கச்சேரியைத் துவக்கி ஜெயலலிதாவைத் திட்டித் தீர்த்தார்.

ஆளும் கட்சி பண்றதை எல்லாம் அமைதியா உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறார் சபாநாயகர். கடந்த ஆட்சியில சபாநாயகரா இருந்த ஆவுடையப்பன் எதிர்க்கட்சித் தலைவருக்கு அதிகநேரம் பேச வாய்ப்பு கொடுத்தார். ஆனா, இந்த ஆட்சியில் அது நடக்கிறதில்லை'' என்று சொல்லி லைட்டாக தி.மு.க. சார்பு நிலை எடுத்தார்!

 தாவப் போகிறாரா அனிதா?

மிஸ்டர் கழுகு: கருணாநிதி ரகசியக் கட்டளை

திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ-வான அனிதா ராதாகிருஷ்ணன், 'அ.தி.மு.க-வுக்கு மீண்டும் தாவப் போகிறார்’ என்ற வதந்தி இறக்கை கட்டிப் பறக்கிறது. ஆனால் அனிதாவோ, தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்துகொண்டு மௌனம் காக்கிறார். சங்கரன்கோவில் இடைத் தேர்தல் பணிக்குச் செல்லாமல் அவர் ஒதுங்கி இருப்பதைப் பார்த்த தி.மு.க. தலைமை, அவரிடம் விளக்கம் கேட்குமாறு மத்திய அமைச்சர் அழகிரியிடம் சொன்ன தாம்.  அனிதாவிடம் செல்போனில் பேசியிருக்கிறார் அழகிரி. 'நிச்சயமாக நான் தி.மு.க-வில்தான் இருப்பேன். என்னை வைத்து சிலர் அரசியல் பண்றாங்க’ என்று சமாளித்தாராம்.  

'''தி.மு.க-மாவட்ட செயலாளர் பெரியசாமியுடன் இணைந்து அரசியல் பண்ணவும் அவர் விரும்பவில்லை. எதிர்த்து அரசியல் செய்யவும் முடியவில்லை’ என்பதால் திணறுகிறார் அனிதா என்கிறார்கள்.''

மிஸ்டர் கழுகு: கருணாநிதி ரகசியக் கட்டளை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism