Published:Updated:

ஆர்.எஸ்.எஸ்.சை தடை செய்ய வேண்டும்: மாயாவதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆர்.எஸ்.எஸ்.சை தடை செய்ய வேண்டும்: மாயாவதி
ஆர்.எஸ்.எஸ்.சை தடை செய்ய வேண்டும்: மாயாவதி

ஆர்.எஸ்.எஸ்.சை தடை செய்ய வேண்டும்: மாயாவதி

ஆர்.எஸ்.எஸ்.சை தடை செய்ய வேண்டும்: மாயாவதி

லக்னோ: மதவாதத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்துபரிஷத், பஜ்ரங்தள் போன்ற மத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதரீதியாக செயல்படும் ஆர்.எஸ்.எஸ். விஸ்வ இந்துபரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக மதங்களின் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்படுகின்றன. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க யாருக்கும் துணிச்சல் இல்லை.

சாதி ரீதியான ஊர்வலங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் மதவாதத்தை தூண்டும் செயலும் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது தான். எனவே ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்துபரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்குமா?

எங்கள் கட்சியின் சாதி ரீதியான ஊர்வலம், கூட்டம் போன்ற இயக்கங்கள் சமுதாயங்களுக்கு, சாதிகளுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்காகத் தான். இப்போது எங்கள் கட்சி சாதி ரீதியான கூட்டங்களுக்கு பதிலாக சர்வமத கூட்டங்களை நடத்தி வருகிறது.

2 வருட சிறை தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பாரதிய ஜனதாவும், காங்கிரசும் மதத்தின் வழியாகவே வாக்குவங்கியை கவர நினைக்கிறது. அந்த கட்சிகளின் தலைவர்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள பைசாபாத் மற்றும் அயோத்தியா ஆகிய இடங்களில் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருப்பதே இதற்கு உதாரணம். இதன்மூலம் அவர்கள் தேர்தலுக்கு முன் ஒரு மதவாத பதற்றத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகிறார்கள்.

##~~##
நரேந்திர மோடி இந்து தேசியவாதி என்று கூறுவதை ஏற்க முடியாது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. எந்த தலைவரும் இந்து தேசியவாதி என்று கூறிக்கொள்வதை ஏற்கமுடியாது.
ஆந்திர மாநிலத்தை பிரிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதேபோல உத்தரபிரதேசத்தையும் 4 மாநிலங்களாக பிரிக்க வேண்டும். இந்திய எல்லை பகுதியில் சீனா ஊடுருவலை தடுக்க மத்திய அரசு மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று மாயாவதி கூறினார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு