Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

Published:Updated:
கழுகார் பதில்கள்

எஸ்.ராமசாமி, நாமக்கல்.

கழுகார் பதில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உ.பி. தேர்தல் முடிவு?

  'உ.பி. காங்கிரஸ் கட்சிக்கு நல்ல தலைவர் இல்லாததுதான் தோல்விக்குக் காரணமா?’ என்று சோனியாவிடம் கேட்டார்கள்.

'தலைவர்கள் நிறையப் பேர் இருப்பதுதான் தோல்விக்குக் காரணம்’ என்று சொல்லி இருக்கிறார். பொதுவாகவே காங்கிரஸ் கட்சியில் எல்லாருமே தலைவர்கள்தான். அதுதான் உ.பி.யில் தோல்விக்குக் காரணம். மேலும், மக்கள் செல்வாக்குப் படைத்தவர் களை தலைவர்களாக டெல்லி மேலிடம் எப்போதும் அங்கீகரித்ததும் இல்லை!

 மனோஜ்கிருஷ்ணா, ராசிபுரம்.

கழுகார் பதில்கள்

வதேரா..?

கழுகார் பதில்கள்
##~##

மருமகன் தொடங்கி வைத்ததை மருமகன் முடித்து வைக்கிறார். ரேபரலி தொகுதியில் நேரு குடும்பத்தின் செல்வாக்கை முதன்முதலில் நிறுவியவர் ஃபெரோஸ். 1952, 1957 தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகுதான் அது, நேரு குடும்பத்தின் தொகுதி ஆனது. அடுத்து, இந்திரா நின்றார்... வென்றார். இரண்டு முறை சோனியா வென்றார். எனவே, அவர்களின் அசைக்க முடியாத கோட்டை இது.

இந்தத் தொகுதியில்தான் இம்முறை பிரியங் காவும், அவரது கணவர் வதேராவும், அவர்களது இருவாரிசுகளும் அதிகமாகப் பிரசாரம் செய்தார்கள். 'சோனியாவின் காலடியில் வெற்றியை சமர்ப்பிப்பேன். அதற்குப்பிறகு அவர் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்’ என்று துண்டு போட்டார் வதேரா. ஆனால், ரேபரலி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தோற்றுவிட்டது. வதேரா வராமல் இருப்பதே நல்லது என்பதை ரேபரலி அறிவித்துவிட்டது!

 கார்த்திகை வளவன், வண்டலூர்.

கழுகார் பதில்கள்

'அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யும் தமிழக அரசின் கொள்கை முடிவில் யாரும் தலையிட முடியாது’ என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளதே?

  பொதுவாகவே நீதிமன்றங்கள் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கின்றன என்ற வாதம் ஆட்சியாளர்களால் வைக்கப்படுகிறது. இதனால் அரசாங்கம் செயல்படுவதில் பலநேரங்களில் தட ங்கல் ஏற்படுகிறது என்பது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கவலை! ஆனால்,  அரசாங்கம் எடுப்பது  'தவறான முடிவு’ என்பதை உணர்ந்தால்... நீதிமன்றங்கள் மட்டும் அல்ல, தனி மனிதனும் கேள்வி கேட்கலாம்.

'குழந்தைகள் நல மருத்துவமனைதான் அமைப் போம்’ என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருக் கிறார். மருத்துவமனைக்கான உள்கட்டமைப்பு கோட்டூர்புரம் நூலக கட்டடத்தில் கிடையாது. எனவே, எதையாவது சொல்லி அந்த நூலகத்தைப் பூட்டுவதுதான் அரசின் நோக்கமாகத் தெரிகிறது. இந்த மாதிரியான வீண்பிடிவாதங்களை விடுத்து, ஆக்கபூர்வமான காரியங்களைச் செய்வதில், முதல்வர் ஜெயலலிதா தனது சிந்தனையைத் திருப்ப வேண்டும்!

 சிவராமகிருஷ்ணன், தஞ்சாவூர்.

கழுகார் பதில்கள்

'இலங்கையின் மனிதஉரிமை மீறல் குறித்த தீர்மானத்தில் முடிவு எடுக்கும் முன் தமிழகத்தின் கருத்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்’ என்ற வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் வாக்குறுதியை நம்பலாமா?

  கிருஷ்ணாவுக்கு மறதி ஜாஸ்தி. எனவே பத்திரத்தில் எழுதி வாங்கிவிடுவது நல்லது!

 சாரதா, கரூர்.

கழுகார் பதில்கள்

உலக மகளிர் தினத்தையட்டி ஒளவையார், கண்ணகி சிலைகளுக்கு தி.மு.க. மகளிர் அணியினர் மரியாதை செய்துள்ளனரே?

தவறு செய்தவன் மன்னனே என்றாலும், பயம் இல்லாமல் தட்டிக்கேட்க அரண்மனைக்குச் சென்றவள் கண்ணகி!

'இந்த நெல்லிக்கனியை நான் சாப்பிடுவதை விட நீங்கள் சாப்பிடுவதுதான் பொருத்தமானதாக இருக்கும்’ என்று மன்னன் மதிக்கும் அளவுக்கு வாழ்ந்தவள் ஒளவை!

ஒளவையின் அறிவும் கண்ணகியின் தார்மீகக் கோபமும் வழிமொழியத்தக்கது. எனவே, மரியா தைக்குத் தகுதி ஆனவர்களே!

எஸ்.ஏ.காதர், விழுப்புரம்.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

தமிழகத்தில் அதிக நாட்கள் மின்துறை அமைச்சராக இருந்து நற்பெயர் எடுத்த பண்ருட்டி ராமச்சந்திரனின் திறமையை தமிழக அரசு பயன்படுத்திக்கொண்டால் என்ன?

  பண்ருட்டியார் கட்சி மாறுவாரா என்று நேரடியாகவே கேளுங்களேன்!

 ஸ்ரீ உஷா பூவராகவன், படியூர் (திருப்பூர்).

கழுகார் பதில்கள்

டாஸ்மாக் இல்லாத தமிழகத்தைக் காண முடியாதா?

திருப்பதியில் மட்டும், மதுபானக் கடைகளை மூடினால் என்ன என்று பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக் கிறது. இதைப்போல ஆன்மீகத் தலங்கள், பாரம்பர்ய நகரங்களில் டாஸ்மாக் கடை களைப் பரிட்சார்த்த முறையில் மூடலாமா என்று முதலில் யோசிக்கலாம்!

 த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

கழுகார் பதில்கள்

தமிழன் என்று சொல்வது, இந்தியன் என்று சொல்வது. கழுகாருக்கு எதில் பெருமை அதிகம்?

  மனிதன் என்று சொல்வது! நீங்கள் சொல்லும் இரண்டும் பிறப்பால் வருவது. நான் சொல்வது, குணத்தால் வருவது. முன்னதை அடைய மெனக்கிட வேண்டியது இல்லை. ஆனால், நல்ல மனிதன் என்று பெயர் வாங்க தியாகம் செய்தாக வேண்டும்.

 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

கழுகார் பதில்கள்

'பொதுவாழ்வில் ஜெயலலிதாவை நான்தான் ஈடுபட வைத்தேன். அவரை முதல்வராகவும் ஆக்கினேன். அதற்குப் பிரதிபலனாக என்னை அவர் கைது செய்துள்ளார்’ என்று எம்.நடராஜன் சொல்கிறாரே?

  ஜெயலலிதா தன்னை அ.தி.மு.க.வில் ஐக்கியப்படுத்திக் கொண்டபோது, நடராஜனுக்கும் அவருக்கும் அறிமுகம் இல்லை. ஜெயலலிதா முதல் தடவை முதல்வர் ஆனபோது, நடராஜன் கார்டனில் இல்லை. வெளியேறி விட்டார். எனவே, இரண்டுமே பிழையான பெருமை!

 ர.ஷண்முகப் பிரியா, திருப்பூர்- 5.

கழுகார் பதில்கள்

சட்டத்தின் முன் அனைவரும் சமம். மின்சாரம் என்று வந்தால் மட்டும் சென்னைக்கு ஒரு நியாயம். வெளியூருக்கு இன்னொரு நியாயமா?

  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று புத்தகத்தில் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் அப்படி இல்லையே. வித்தியாசம் இருக்கிறதே. அதுபோலத்தான் மின்சார விஷயத்திலும் நடக்கிறது. நம்முடைய ஆட்சியாளர்கள் எல்லாவற்றையும் ஒரே மாதிரித்தான் செய்வார்கள். வித்தியாசம் காட்ட மாட்டார்கள்.

 ஜி. அர்ஜுனன், திருப்பூர்.7.

கழுகார் பதில்கள்

தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீரென கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பி இருக்கிறாரே. மர்மம் என்ன?

  கூடங்குளத்தை ஆதரிப்பது அவரது நிலைப்பாடு. ஆனால், இத்தனை மாதங்கள் கழித்து அவர் ஆதரவு குரல் கொடுப்பதில்தான் மர்மம் இருக்கிறதோ என்ற சந்தேகம் கிளப்புகிறது. 'திறக்கப் போகிறார்கள். நான் சொன்னதால் திறந்தார்கள்’ என்று சொல்லிக் கொள்ள அது பயன்படலாம்!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism