Published:Updated:

கிரிமினல்களை அடக்கி அசத்துவாரா அகிலேஷ்

பி.பி. எகிறவைக்கும் உ.பி. கொண்டாட்டங்கள்

கிரிமினல்களை அடக்கி அசத்துவாரா அகிலேஷ்

பி.பி. எகிறவைக்கும் உ.பி. கொண்டாட்டங்கள்

Published:Updated:
##~##

த்தரப் பிரதேசத்திலும் வாரிசு அரசியலுக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது. சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற சமாஜ்வாடிக் கட்சி, மாநி லத்தை ஆளும் அதிகாரத்தை  அகிலேஷ் சிங் யாதவ் கையில் கொடுத்துள்ளது. இதை, மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு விட்டார் முலாயம் சிங் யாதவ்!

 அகிலேஷ்க்கு 38 வயது. உ.பி-யின் இளம் முதல்வர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அகிலேஷின் அரசியல் பின்னணி என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மைசூரில் இன்ஜினியரிங் படிப்பும், ஆஸ்திரேலி​யாவில் மேற்படிப்பும் முடித்தவர் அகிலேஷ். 2000-ம் ஆண்டு முதன்முறையாக கன்னோஜில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது, முலாயம் போட்டியிட்டு ஜெயித்த தொகுதி. ஒரு கட்டத்தில், சமாஜ்வாடிக் கட்சியின் சாணக்கியன் என்று வர்ணிக்கப்பட்ட அமர்சிங் வெளியேறிய நேரத்தில், கட்சிக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள். அந்தநேரம் அமர்சிங் வகித்துவந்த அத்தனைப் பொறுப்புகளையும் தன்தோளில் தாங்கிக் கொண்டார் அகிலேஷ். பொறுப்பு ஏற்ற நாளில் இருந்து, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற பிரபலக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அகிலேஷ§க்கு மறைமுகமாக உதவ ஆரம்பித்தார்கள். அகிலேஷ் வெற்றிக்கு இவர்களின் உழைப்பும் திட்டமிடலும் பின்னணியில் இருக்கிறது. சமாஜ்வாடிக் கட்சிக்கு, 'கிரிமினல்களின் ஆதரவுக் கட்சி’ என்று இருந்த இமேஜை உடைக்க, இந்த மாணவர்களைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண் டார் அகிலேஷ். எளிமையான உடையுடன் சைக்கிளில் கிராமம் கிராமமாகச் சென்றார் அகி லேஷ். இந்த அணுகுமுறை மக்களைக் கவரவே, ஆளும் கட்சியான மாயாவதி மீது இருந்த கோபத்தில், மக்கள் இவரை எளிதில் ஜெயிக்கவைத்து விட்டார்கள்.

கிரிமினல்களை அடக்கி அசத்துவாரா அகிலேஷ்

கட்சி வட்டாரத்தில் என்ன சொல்கிறார்கள்?

''அகிலேஷ், முதல்வர் ஆனதில் கட்சியின் சீனியர்கள் பலருக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும்

கிரிமினல்களை அடக்கி அசத்துவாரா அகிலேஷ்

ஆஜம்கான், சிவ்பால் சிங் தவிர வேறு யாருக்கும் இதுபற்றி வெளிப்படையாகப் பேசுவதற்குத் தைரியம் கிடையாது. இவர்களில், ஆஜம்கான் கட்சியின் முஸ்லிம் முகமாகக் கருதப்படுபவர். 43 முஸ்லிம் எல்.எல்.ஏ-க்கள் ஜெயிப்பதற்கு ஆஜம்கானும் ஒரு காரணம்.

அடுத்து முலாயம் சிங்கின் உடன்பிறந்த தம்பி சிவபால்சிங். அகிலேஷின் எம்.பி. தொகு​தியை சிவ்பாலுக்கு விட்டுக்கொடுத்து, அவரைப் போட்டியிட வைப்பதாகவும், வாய்ப்பு கிடைக்கும்போது மத்திய அமைச்சர் பதவி வாங்கிக் கொடுப்பதாகவும் உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. அகிலேஷ§க்கு மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு எதுவும் இல்லை என்பதால், எதிர்க்கட்சிகள்கூட, இவர்குறித்து கருத்து சொல்லாமல் அடக்கியே வாசிக் கிறார்கள்'' என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானதும் வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரில் உ.பி-யில் நடந்த வன்முறை வெறியாட்டங்கள் மக்களை அச்சப்படுத்தி உள்ளன. குண்டர்கள் பல இடங்களிலும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். துப்பாக்கிக் குண்டுகள் பொழிந்து நான்கு இடங்களில் நடந்த கொண்டாட்டங்களில், ஒரு சிறுவன் பலியாகி விட்டான். மேலும் பல இடங்களில் சமாஜ்வாடிக் கட்சியினர் வெறியாட்டம் போட, தடுத்த ஒரு போலீஸ்காரரின் யூனிஃபார்ம் கிழித்து எறியப் பட்டது. பஸ்தி ஜெயிலில்கூட, விசாரணைக் கைதிகள் கோலாகலமாகக் கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது, ஜெயில் அதிகாரிகளுடன் ஏற்பட்ட தகராறு, கலவரத்துக்கு வழி வகுத்துவிட்டது. கலவரத்தை அடக்க போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தவே, விசாரணைக் கைதி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

ஆனால், இந்தச் சம்பவம் பற்றி பேசிய அகிலேஷ், ''நடந்த கலவரத்துக்கும் எங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சியின் பெயரைக் கெடுப்​பதற்காக, திட்டமிட்டு நடத்தப்படும் சதி வேலை இது. சட்டம் ஒழுங்கைக் கெடுக்க முயல்பவர்கள் நம் கட்சிக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கடுமையாகவே எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஒட்டுமொத்த எம்.எல்.ஏ-க்களில் 48 சதவிகிதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருப்பதும், 'கிரிமினல் கட்சி’ என்று அழைக்கப்படும் சமாஜ் வாடிக் கட்சி ஆட்சியைப் பிடித்திருப்பதும் சாதா ரண மக்களுக்கு மிரட்சியை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி-யின் தலையெழுத்தை அகிலேஷ் மாற்று​​வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க​வேண்டும்!

- ஆர்.ஷஃபி முன்னா,

படங்கள்: பவண்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism