Published:Updated:

ஹீரோ அகிலேஷ்... ஜீரோ ராகுல்!

ப.திருமாவேலன்

ஹீரோ அகிலேஷ்... ஜீரோ ராகுல்!

ப.திருமாவேலன்

Published:Updated:
##~##

காங்கிரஸ் கட்சி தனது உயிர்நாடியாக எப்போதும் சொல்வது உத்தரப்பிரதே சத்தைத்தான். அதன் நாடித்துடிப்புமெள்ள மெள்ளக் குறைந்துகொண்டே வந்தது. 'டாக்டர்’ ராகுல் வந்தார். லேப்டாப் ஆபரேஷன் செய்தார். லப் டப் நின்று விட்டது. ஆபரேஷன் சக்சஸ்; பேஷன்ட் டைடு!

 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்கொண்ட தோல்வியை 'மரண அடி’ என்று சொல்வதுகூட சாதாரணமான வார்த்தைதான். உயிர்ப்பிக்க முடியாத தோல்வி என்பதே பொருத்தம். ஏனென்றால், இதற்கு முந்தைய சட்டமன்றத் தேர்தலிலும் ராகுல் தன்னுடைய பரிவாரங்களுடன் வலம் வந்தார். 403 உறுப்பினர்களைக்கொண்ட உ.பி. சட்டமன்றத் தொகுதிகளில் அப்போது 22 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸால் ஜெயிக்க முடிந்தது. இப்போது ஐந்து ஆண்டு கள் கழித்து 28 தொகுதிகளை காங்கிரஸ் வென்றுள்ளது. ''கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளோம்'' என்கிறார் ராகுல். ஐந்து ஆண்டுகளுக்கு 6 தொகுதிகள் கூடினால், ஆட்சி அமைக்கத் தேவையான 202 தொகுதிகளை வந்தடைய ராகுலுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படுமோ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹீரோ அகிலேஷ்... ஜீரோ ராகுல்!

இந்தியாவின் 'மினி பொதுத் தேர்தல்’ என்று சொல்லப்படும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும்போது, காங்கிரஸ் தலைமை அலுவலகமான 24, அக்பர் சாலையில் இருந்தார் ராகுல். ''உ.பி. முழுக்க நானே பிரசாரம் செய்தேன். எனவே தோல்விக்கு நானே பொறுப்பேற் கிறேன். இது எனது அரசியலுக்குக் கிடைத்த மிகப் பெரிய பாடம். கட்சியின் அடித்தளம் பலவீனமாக இருந்ததை இந்தத் தேர்தல் உணர்த்திவிட்டது!'' என்று தனது தாடியை நீவியபடியே ராகுல் சொன்னார். இதைச் சிறிது தூரத்தில் நின்றபடி பிரியங்கா கவனித்துக்கொண்டு இருந்தார். ராகுல் பேசி முடித்ததும், கைத்தாங்கலாக அவரை அழைத்துச் சென்றார் பிரியங்கா.

அரசியலில் வெற்றி-தோல்விகள் இயல்புதான். அதுவும் மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து, டெல்லி காங்கிரஸ் தலைமை எப்போதும் கண்ணீர்விட்டதே இல்லை. ஆனால், இந்த முறை நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் ராகுலின் தலைமைக்கான தகுதி குறித்த வாக்கெடுப்பாகப் பார்க்கப்பட்டது. உடலாலும் மனதாலும் பலவீனம் அடைந்துவிட்ட சோனியா வகிக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் என்ற பதவியையும்  வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கத் தெரியாமலும் தனது அமைச்சரவைச் சகாக்களை முடுக்கிவிட முடியாமலும் இருக்கும் மன்மோகன் சிங் வகிக்கும் பிரதமர்

ஹீரோ அகிலேஷ்... ஜீரோ ராகுல்!

நாற்காலியையும் ஒரே நேரத்தில் வகிக்கும் தகுதியை ராகுல் அடைந்துவிட்டாரா என்பதை அளவிடுவதற்கு நடத்தப்பட்டதே உ.பி. தேர்தல்!

இதில் அவருக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம், சோனியாவைவிட, மன்மோகனைவிட 'நான் வித்தியாசமான வன்’ என்பதை ராகுல் இன்னமும் காட்டவில்லை என்பதுதான்.

அகில இந்தியா முழுக்கவும் 'ஊழலுக்கு எதிரான யுத்தம்’ நடந்துகொண்டு இருக்கிறது. அண்ணா ஹஜாரே அதற்கு ஒரு தூண்டுதல். இது இளைஞர்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது. இளம் தலைவராக அடையாளம் காணப்பட்ட ராகுல் இதற்கு எதிராக இருந்தார். நிம்மதியாக ஒரு கிழவனைப் போராட்டம் நடத்தவிடாமல் தடுத்தது மத்திய அரசு. ராகுலின் முகத்திரை அப்போதுதான் முதன்முதலாகக் கிழிந்தது. அவர் இன்னொரு சோனியா, மன்மோகனா கவே இருந்தார் என்பது வெளிச்சத் துக்கு வந்தது.

ஆனால், உ.பி. மக்களிடம் 'நான் இன்னொரு முலாயம் சிங் அல்ல’ என்பதை அகிலேஷ் அடையாளம் காட்டினார். உ.பி. அரசியலில் மாயாவதிக்கும் முலாயம் சிங்குக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. பணம் என்றால் மாயாவதி... பயம் என்றால் முலாயம். மூன்று முறை முதல் வராகத் தொடர்ந்தும் 'குண்டர் கள் கட்சி’ என்றே பெயர் எடுத்தார். அப்பா எடுத்துவைத்திருந்த அத்தனை கெட்ட பெயரையும் மாற்ற இரண்டு ஆண்டுகள் உழைத்தார் அகிலேஷ். அவர் அரசியல் பேசவில்லை. மாநிலத்தின் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே பேசினார். உ.பி. மக்களுக்கு ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. இன்று 38 வயது அகிலேஷ், இந்தியாவின் மிகப் பெரிய மாநிலத்தின் முதல்வர்!

இந்த இலக்கினைக்கூட எட்ட முடியாத ராகுல் முன், அதைவிடப் பெரிய சவால் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவின் பிரதமர் பதவி! இந்தப் பதவிக்கு மன்மோகனா, ராகுலா? யாரை சோனியா முன்னிறுத்தப் போகிறார் என்று முடிவுக்கு வர இன்னும் ஆறு மாத அவகாசம் தேவை. ஆனாலும், காங்கிரஸை மீண்டும் ஆட்சியில் உட்காரவைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ராகுல் தலையில்தான் தூக்கிவைக்கப்பட்டு உள்ளது.

ஹீரோ அகிலேஷ்... ஜீரோ ராகுல்!

கிராமங்களுக்குச் செல்வது, குடிசைகளில் தங்குவது, டீக்கடையில் டீ குடிப்பது, மின்சார ரயில்களில் பயணிகளோடு பயணிப்பது போன்ற ஸ்டன்ட்டுகள் ராகுலைத் தலைவர் ஆக்காது. அது தினப் பத்திரிகைகளின் பெட்டிச் செய்தி மட்டுமே. 'நாட்டின் அரசியல் அமைப்பு முறையை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டேன்!’ என்று ராகுல் சொல்வது உண்மையானால், அவரது செயல்பாடுகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஊழல்வாதிகளால் நிரம்பி வழிகிறது காங்கிரஸ் கட்சி. டெல்லித் தலைமையில் ஆக்கவும் அழிக்கவும் அதிகாரம் பெற்றவர்களில் 80 சதவிகிதம் பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். இவர்களை மாற்ற ராகுல் நினைத்தால், அவர்கள் ராகுலையே அங்கிருந்து

ஹீரோ அகிலேஷ்... ஜீரோ ராகுல்!

வீழ்த்திவிடுவார்கள். மாநிலங்களில் தனிப்பெரும் செல்வாக்குடன் காங்கிரஸ் தலைவர்கள் வளர்வது டெல்லித் தலைமைக்கு நல்லதல்ல என்ற நினைப்பு காலம் காலமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சி மாநிலங்களில் வளராமல் போவதற்கு மிக முக்கியக் காரணம் இதுதான். உ.பி-யில்கூட யார் முதல்வர் என்பதை ராகுல் அறிவிக்காமல் இருந்ததற்கும் இதுவே காரணம். காங்கிரஸ் வரலாற்றில் முதன்முறையாக 'மாநில மக்களின் மனநிலை’ என்ற வார்த்தையைப் பெரும் தோல்விக்குப் பிறகு பயன்படுத்தி இருக்கிறார் ராகுல்.

மாநிலத் தலைமையை வீழ்த்தும் காரியத்தை பாட்டி இந்திரா ஆரம்பித்தார். மாநில மக்களின் மனநிலையைக் கவனத்தில் கொள்ளாமல் அப்பா ராஜீவ் செயல்பட்டார். இந்த இரண்டையும் சேர்த்தே  சோனியா பின்பற்றினார். மூவரின் தவறு களில் இருந்து திருத்திக்கொள்ள  ராகுலைத் தூண்டுகிறது உ.பி. செய்வாரா இந்த ஆர்.ஜீ?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism