Published:Updated:

சேலத்தில் பா.ஜ.க பிரமுகர் படுகொலை: 2 மாவட்டத்தில் முழு அடைப்பு

சேலத்தில் பா.ஜ.க பிரமுகர் படுகொலை: 2 மாவட்டத்தில் முழு அடைப்பு
சேலத்தில் பா.ஜ.க பிரமுகர் படுகொலை: 2 மாவட்டத்தில் முழு அடைப்பு

சேலம்: சேலத்தில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளரை மர்ம நபர்கள் வீடு புகுந்து வெட்டி கொலை செய்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சேலம், திருப்பூர் மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

சேலத்தில் பா.ஜ.க பிரமுகர் படுகொலை: 2 மாவட்டத்தில் முழு அடைப்பு

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருப்பவர் சேலம் ஆடிட்டர் ரமேஷ். இவருக்கு சுபா என்ற மனைவியும், ப்ளஸ் ஒன் படிக்கும் சுமிர்தி என்ற மகளும் இருக்கிறார். இவரது வீடு சேலம் மரவனேரி ஃபர்ஸ்ட் கிராஸிலும், அலுவலகம் மரவனேரி செகன்ட் கிராஸிலும் இருக்கிறது.

ஆடிட்டர் ரமேஷ் நேற்று (19.07.13) இரவு 10 மணிக்கு வீட்டில் இருந்து நடந்தே தனது அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். அவரை பின் தொடர்ந்து ஒரு மர்ம கும்பல் வந்திருக்கிறது. ரமேஷ் தன் அலுவலக தகவை திறந்து உள்ளே போகும்போது, அந்த மர்ம கும்பல் ரமேஷின் தலை, கழுத்து, வயிறு என பல இடங்களில் வெட்டி இருக்கிறது. சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் ஆடிட்டர் ரமேஷ் உயிரிழந்தார்.

சேலத்தில் பா.ஜ.க பிரமுகர் படுகொலை: 2 மாவட்டத்தில் முழு அடைப்பு

இதை அறிந்ததும் பா.ஜ.க., இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் கட்சியினர் சேலம் நகரம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியலிலும், கல் வீசி பஸ் கண்ணாடிகளையும் உடைத்தனர். உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி.சி. பாபுவும், டி.ஐ.ஜி. சஞ்சய்குமாரும் சேலம் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தனர்.

சேலத்தில் பா.ஜ.க பிரமுகர் படுகொலை: 2 மாவட்டத்தில் முழு அடைப்பு

போலீஸார் ரமேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டார்கள். ஆனால் கட்சிக்காரர்கள் உடலை தொடவிடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பாட்டார்கள். இதனால் சற்று நேரம் போலீஸாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஸ்ட்ரெக்ச்சரில் ரமேஷின் உடலை ஏற்றும் போது உடல் நழுவி கீழே விழுந்தது. இறுதியாக போலீஸார் ரமேஷின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றார்கள்.

##~~##
இந்த கொலை சம்பவத்தை கண்டித்து இன்று காலையில் இருந்து சேலம், திருப்பூர் மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
இந்த சம்பவத்தால் சேலம் நகரம் முழுவதும் பெரும் பதற்றமும், பரபரப்பாகவும் காணப்படுகிறது.
வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்