Published:Updated:

கூடங்குளம் 2வது அணுஉலை 6 மாதத்தில் செயல்படும் : நாராயணசாமி

கூடங்குளம் 2வது அணுஉலை 6 மாதத்தில் செயல்படும் : நாராயணசாமி
கூடங்குளம் 2வது அணுஉலை 6 மாதத்தில் செயல்படும் : நாராயணசாமி
கூடங்குளம் 2வது அணுஉலை 6 மாதத்தில் செயல்படும் : நாராயணசாமி

சென்னை: 20 நாளில் கூடங்குளம் முதல் அணு உலையில் 400 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்றும் 2வது அணுஉலை ஆறு மாதத்திற்குள் செயல்படும் என்றும் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

சென்னையில் இன்று (20ஆம் தேதி)செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடரில் உணவு உத்தரவாத சட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

சட்டத்தை எதிர்க்கும் மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்த நாராயணசாமி, உணவு உத்தரவாத சட்டத்திற்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் உணவு உத்தரவாத சட்டம் முதலில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கூடங்குளம் 2வது அணுஉலை ஆறு மாதத்தில் செயல்படும்

##~~##
20 நாளில் கூடங்குளம் முதல் அணு உலையில் 400 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்றும் படிப்படியாக ஒரு மாதத்தில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்றும்
நாராயணசாமி தெரிவித்தார்.
கூடங்குளம் 2வது அணுஉலை ஆறு மாதத்திற்குள் செயல்படும் என்றும் கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.