Published:Updated:

தடையை மீறி ஆர்ப்பாட்டம்: பா.ஜ.க.வினர் கைது

விகடன் விமர்சனக்குழு
தடையை மீறி ஆர்ப்பாட்டம்: பா.ஜ.க.வினர் கைது
தடையை மீறி ஆர்ப்பாட்டம்: பா.ஜ.க.வினர் கைது

விழுப்புரம்: சேலத்தில் பா.ஜ.க. மாநில செயலாளர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம்: பா.ஜ.க.வினர் கைது

சேலத்தில் நேற்று இரவு பா.ஜ.க. மாநில செயலாளர் ரமேஷ் சில மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க.வினர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம்: பா.ஜ.க.வினர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் கூறியதையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர், சாலையில் படுத்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

##~~##
இதனால் சென்னை, திருச்சி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
ஆ.நந்தகுமார்

படங்கள்: தே.சிலம்பரசன்