Published:Updated:

2014 தேர்தலில் தொங்கு பாராளுமன்றம்; அதிமுக அதிக இடங்களை கைப்பற்றும்: கருத்துக்கணிப்பில் தகவல்!

மும்பை: வருகிற 2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தொங்கு பாராளுமன்றமே அமையும் என்றும், தமிழகத்தில் திமுகவை விட அதிமுக அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த 'இடெல்வெய்ஸ் செக்யூரிட்டிஸ்' என்ற நிதி சேவை நிறுவனம் இந்த கருத்துக்கணிப்பை நடத்தி உள்ளது. தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 10 பெரிய மாநிலங்களின் அரசியல் சூழ்நிலை குறித்து இந்த ஆய்வு நடந்தது.

தேர்தலில் சாதியின் பங்கு, கூட்டணியின் முக்கியத்துவம், ஆட்சி முறை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் இந்திய அரசியலை சாதியே தீர்மானிக்கிறது என்று தெரியவந்துள்ளது. மேலும் கூட்டணி பல்வேறு நிர்பந்தங்களின் அடிப்படையில் உருவாகிறது என்றும், ஆட்சி முறை தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் ஆதிக்கம் செலுத்தவில்லை என்றும் தெரியவந்தது.

இந்த கணிப்பின் அடிப்படையில் 2014-ம் ஆண்டு தேர்தலுக்குப்பின் மத்தியில் தொங்கு பாராளுமன்றம்தான்

2014 தேர்தலில் தொங்கு பாராளுமன்றம்; அதிமுக அதிக இடங்களை கைப்பற்றும்: கருத்துக்கணிப்பில் தகவல்!

அமையும் என்று தெரியவந்துள்ளது.

2009 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 206 இடங்களிலும், பா.ஜனதா 116 இடங்களையும் கைப்பற்றிய நிலையில், 2014 ல் பா.ஜனதா கட்சி 145 முதல் 155 இடங்கள் வரை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

வழக்கம்போல் உயர் சாதியினர் மத்தியில் பா.ஜனதாவுக்கு ஆதரவு காணப்படுவதாகவும், இஸ்லாமியர்கள், தலித் மற்றும் ஆதிவாசிகள் இடையே காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு காணப்படுவதாகவும் அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

##~~##
தமிழகத்தில் திமுகவைவிட அதிக இடங்களையும், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைவிட இடதுசாரி கூட்டணி அதிக இடங்களையும் கைப்பற்றும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.