Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

Published:Updated:
கழுகார் பதில்கள்

எஸ்.ஜெயகாந்தன், புன்செய்புளியம்பட்டி.

கழுகார் பதில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷிய நட்புறவு விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து?

கழுகார் பதில்கள்

அவர் அமெரிக்காவை ஆதரிக்கத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது ரஷ்யாவுக்குத் தெரியாதா?

 க.சுல்தான் ஸலாஹீத்தீன், காயல்பேட்டை.

கழுகார் பதில்கள்

'அடித்தட்டு மக்களுக்கு நலத்திட்டங்கள் போய்ச் சேராதது வருத்தம் அளிக்கிறது’ என்கிறாரே நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி?

##~##

இப்படிச் சொல்லி வருத்தப்பட வேண்டியது நாம். அப்படி ஆகிவிடாமல் செயல்பட வேண்டியது பிரணாப். அதைச் செய்யாமல் நம்மைப்போல வருத்தப்படுபவருக்கு எதற்கு லட்சம் கோடியை நிர்வகிக்கும் நிதிஅமைச்சர் பதவி? ஒவ்வோர் ஆண்டும் அடித்தட்டு மக்களை மனதில்கொண்டுதான் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அவர்களுக்காகத்தான் செலவு செய்யப்படுகிறது. ஆனால், அந்த மக்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். அதிகாரத்தில் இருந்தபடி ஒதுக்கீடு செய்யப்படும் பணம் அடித்தட்டுக்கு வரும்போது அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் தமக்கெனத் தனியாக ஒதுக்கப்பட்டு விடுகிறது. அதைக் கண்டுபிடித்து அடைக்கும் காரியத்துக்கு கொஞ் சமாவது உதவக்கூடியவைதான் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா ஆகிய சட்டங்கள். பிரணாப் வீண் கவலைகளை விடுத்து இந்த இரண்டு அஸ்திரங்களை தடங்கல் இல்லாமல் ஏவுவதற்கான முயற் சிகளை முதலில் முன்னெடுக்கட்டும்!

 சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

கழுகார் பதில்கள்

கழுகார் மண்டையைக் குடையும் விஷயம் எது?

தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்ல எதிர்காலம் உண்டா? கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நல்ல காலம் இருப்பதாகத் தென்படவில்லை. ஒன்றை மாற்றிவிட்டு இன்னொன்றைக் கொண்டுவருவது மாற்றம் அல்ல. சரியானதைக் கொண்டுவருவதுதான் மகத்தான மாற்றமாக இருக்க முடியும்!

 சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

கழுகார் பதில்கள்

'தனித்துப் போட்டியிட்டு இருந்தால் ஆளும் கட்சியாக இருப்போம் என்கிறாரே ராமதாஸ்?

ராமதாஸின் லாஜிக் புரியவே இல்லையே! 'பலமான கூட்டணியை அமைத்திருந்தால் ஆட்சியைப் பிடித்திருப்போம்!’ என்று சொல்லி இருந்தால் அர்த்தம் இருந்திருக்கும். ஆனால், ராமதாஸ் உல்டாவாகச் சொல்கிறார். சமீப கால​மாகவே அவரது பேச்சு உல்டா​வாக இருக்கிறது. காரணம் தெரிகிறதா?

 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

கழுகார் பதில்கள்

தி.மு.க அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்புக்களை விசாரிப்பதற்காக, வரும் பட்ஜெட் கூட்டத்தில் தனிநீதிமன்றம் அமைக்கும் அறிவிப்பை ஜெயலலிதா வெளியிடப் போகிறாராமே. இது தேவையா?

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடகாவில் நடக்கிறது. அழகிரி உள்ளிட்ட தி.மு.க.வினர் மீதான தா.கிருஷ்ணன் கொலை வழக்கு ஆந்திராவில் நடந்​தது. காஞ்சி ஜெயேந்திரர் மீதான கொலை வழக்கை புதுச்சேரி விசா​ரித்து வருகிறது. தமிழகத்தைச் சுற்றி இருக்கும் கர்நாடகா, ஆந்திரா, புதுவை ஆகிய மூன்று மாநிலங்களிலும் நமது புகழ்(!) பரவிவிட்டது. மிச்சம் இருப்பது, கேரளா மட்டும்தான். அங்கு நடக்க ஒரு வழக்கு வேண்டாமா? அதுவாக இது இருக்கட்டுமே!

 தி.கருணாநிதி, விழிதியூர்.

கழுகார் பதில்கள்

'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்ற பாரதியின் கனவு பலிக்குமா?

இப்போது கப்பலில் வந்து அடிக்கிறான். பஸ்ஸில் வந்து பலி வாங்க வேண்டும் என்பதுஉமது ஆசையா?

 ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

கழுகார் பதில்கள்

இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் 'புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?’ என்ற பாடல் பாடப்பட்டது பற்றி?

புத்தன், ஏசு, காந்தி - மூவரும் பொதுவுடைமைச் சித்தாந்தத்துக்கு எதிரிகள் அல்லவே. 'எல்லார்க்கும் எல்லாம்’ என்பதையே ஒவ்வொருவரும் அவரவர் கோணத்தில் சொன்னார்கள். இவர்கள் உடுத்திய உடைகளின் நிறங்கள் வேறாக இருக்கலாம். உள்ளத்​தால் ஒருவரே!

 எஸ்.அருள்சாமி, நாட்டரசன்கோட்டை.

கழுகார் பதில்கள்

'ஒரு வருடம் சிறையில் வைத்தாலும் அமைதி காப்பேன்’ என்கிறாரே எம்.நடராஜன்?

அவரால் முடிந்தது அதுதானே!

 காந்தி லெனின், திருச்சி.

கழுகார் பதில்கள்

எளிமையும் கடுமையான உழைப்பும் இக்கால அரசியலில் வெற்றி பெறுமா?

வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

எளிமை என்பது எல்லோரும் காந்தியின் உடையை உடுக்க வேண்டும் என்பது அல்ல. ஊதாரித்தனமும் ஆடம்பரமும் இல்லாத தன்மையே எளிமை!

கடுமையான உழைப்பு என்பது வினோபாவே போல இந்தியாவை காலால் நடந்து அளப்பது மட்டுமே அல்ல. பொதுமக்களுக்கு எப்போது எங்கெல்லாம் பிரச்னையோ அங்கெல்லாம் சென்று தனது இருப்பைப் பதிவு செய்வது. இத்தகைய அரசியல் தலைவர்கள் தேவை. அத்தகையவர்களை வரவேற்க பொதுமக்களும் முன்வர வேண்டும்!

 ஆர்.கே.லிங்கேசன் மேலக்கிருஷ்ணன்புதூர்.

கழுகார் பதில்கள்

எது அதிர்ச்சி வைத்தியம்?

எதிர்க் கட்சியின் தேர்தல் அறிக்கையைக் கிழித்த ராகுலை கிழித்த உ.பி. முடிவுகள்!

 மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.

கழுகார் பதில்கள்

அ.தி.மு.க, தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க. - இதில் எந்தக் கட்சிக்கு சங்கரன்கோவில் தேர்தல் மிக முக்கியமானது?

நான்கு தரப்புக்குமே!

விஜயகாந்துக்கு விட்ட சவாலை ஜெயலலிதா சமாளிக்க வேண்டும். ஜெயலலிதாவின் சவாலை விஜயகாந்த் எதிர்கொள்ள வேண்டும்.

அரசியலில் தன்னை வைகோ நிலைநிறுத்த வேண்டும். வைகோவைவிட கூடுதல் வாக்கு​களை​யாவது கருணாநிதி வாங்கிக் காட்ட வேண்டும். முன்னே போனால் கடிக்கிறது. பின்னே வந்தால் உதைக்கிறது... மாதிரியான நிலைமைதான் நான்கு கட்சிகளுக்கும்!

 ஆனந்தம், எஸ்.நடராஜன், காரைக்கால்.

கழுகார் பதில்கள்

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக சசிகலா வாக்குமூலம் கொடுத்திருப்பது எதனால்?

அதனால்!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism