Published:Updated:

ராகுல் மோசம்... அத்வானி சூப்பர்!

நாடாளுமன்ற ஸ்கேன் ரிப்போர்ட்

ராகுல் மோசம்... அத்வானி சூப்பர்!

நாடாளுமன்ற ஸ்கேன் ரிப்போர்ட்

Published:Updated:
##~##

'என்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் அமர்த்​துங்கள். உங்களுக்காக டெல்லியில் உயிரைக் கொடுத்துப் போராடி அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றித் தருகிறேன்’ என்றுதான் அத்தனை வேட்பாளர்களும் வாய் கிழியப் பேசுவார்கள். அவர்களே எம்.பி-யாக மாறிய பிறகு என்ன செய்​கிறார்கள்? 

இப்போது நடந்துவரும் மன்மோகன் சிங் ஆட்சியில், இதுவரை நடந்து முடிந்த ஒன்பது கூட்டத் தொடர்களை ஸ்கேன் செய்து தகவல்களை அள்ளித் திருகிறார் கோவை​யைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒன்பதாவது கூட்டத் தொடர் வரையில் 213 நாட்கள் சபை நடந்துள்ளது. மக்களவை தி.மு.க. எம்.பி-க்களில், கட் அடிப்​பதில் முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறார் சிவகுமார் (எ) ஜே.கே.ரித்தீஷ். இவர் 134 நாட்கள் ஆப்சென்ட். அடுத்து, கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி-யான ஆதிசங்கர்... 111 நாட்கள் ஆப்சென்ட். ஏ.கே.எஸ். விஜயன், சுகவனம், எஸ்.ஆர். ஜெயதுரை போன்றவர்களும் கிட்டத்தட்ட பாதி நாட்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

ராகுல் மோசம்... அத்வானி சூப்பர்!
ராகுல் மோசம்... அத்வானி சூப்பர்!

மு.க.அழகிரி, நெப்போலியன், ஜெகத்ரட்சகன் போன்​றவர்கள் மந்திரிகளாக இருப்பதால், அவர்களின் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் வெளிப்படையாகப் பகிரப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்பாக செயல்படும் எம்.பி-க்களும் தி.மு.க-வில் இருக்கிறார்கள். டி.கே.எஸ். இளங்கோவன் 198 நாட்கள் ஆஜராகி, 32 விவாதங்களில் பங்கேற்று 15 கேள்விகள் கேட்டிருக்கிறார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி-யான டி.ஆர்.பாலு 174 நாட்கள் ஆஜராகி 21 விவாதங்களில் பங்கேற்று 94 கேள்விகள் கேட்டிருக்கிறார். குறைவான நாட்கள் கலந்து கொண்டாலும் சுகவனம் 487 கேள்விகள் கேட்​டிருக்​கிறார்.

தமிழக காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் 60 முதல் 97 சதவிகிதம் வரை ஆஜர். அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.பி-க்களின் செயல்​பாடு​களும் பரவாயில்லை. ஓ.எஸ்.மணியனைத் தவிர, மற்ற அத்தனை பேரும் 60 சதவிகித நாட்களுக்கு மேல் ஆஜராகி, காரசாரமாகக் கேள் விகள் கேட்டிருக்கிறார்கள். திருமாவளவன் 41 சதவிகித நாட்கள் மட்டுமே ஆஜராகி 18 விவாதங்களில் கலந்துகொண்டு ஏழே கேள்விகள்தான் கேட்டிருக்​கிறார்.

சோனியா மற்றும் ராகுலின் மக்களவை செயல்பாடுகள் எப்படியாம்?

உத்தரப் பிரதேச மாநில ரேபரேலி தொகுதியின் எம்.பி​-யான சோனியா காந்தி பாதி நாட்கள்கூட அவைக்கு வர வில்லை. எந்த விவாதத்திலும் கலந்து கொள்ளவில்லை, ஒரு கேள்வியும் கேட்கவில்லை. அமேதி தொகுதி எம்.பி-யான ராகுல் காந்தி, அம்மாவைவிட மோசம். 41 சதவிகித நாட்கள் மட்டுமே ஆஜரானவர், ஒரே ஒரு விவாதத்தில் கலந்து கொண்டார். ஆனால், எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ராகுலைவிட 10 வயது இளையவரான ஃபெரோஸ் வருண் காந்தி, 68 சதவிகித நாட்கள் ஆஜராகி, இரண்டு விவாதங்களில் பங்கேற்று 419 கேள்விகளும் கேட்டிருக்​கிறார்.

ராகுல் மோசம்... அத்வானி சூப்பர்!

ஆனால், காந்திநகர் தொகுதி எம்.பி-யான லால்கிஷன் அத்வானி, 84 வயதிலும்கூட 97 சத​விகித நாட்கள் அவை நட வடிக்​கை​களில் கலந்துகொண்​டதோடு, 28 விவாதங்களிலும் பங்கு பெற்றிருக்கிறார்.

'தனித் தெலுங்கானா’ கேட்டுப் போராடும் சந்திரசேகர ராவ் ஆஜரானது, ஒன்பது சதவிகித நாட்களே. மறந்தும்கூட அவர் கேள்வி எதுவும் கேட்டுவிடவில்லை. அவர் பாணியில் விஜயசாந்தி 12 சதவிகித நாட்கள் மட்டுமே ஆஜரானார். இதுவரை வாய் திறக்கவில்லை.

ராகுல் மோசம்... அத்வானி சூப்பர்!

இத்தனை சிரமங்களுடன்(?) மக்கள் பணி ஆற்றும் நம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என்னவெல்லாம் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பதை இனி பார்க்கலாம்.

மாதச் சம்பளம் 50 ஆயிரம் ரூபாய். தொகுதி அலவன்ஸாக ஒவ்வொரு மாதமும் 40 ஆயிரம் ரூபாய். அவையில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நாளும், 'சிட்டிங் ஃபீஸ்’ 2,000 ரூபாய். கூட்டத் தொடர் நடைபெறும் காலங்களில் விமானப் பயணம் இலவசம். உதவியாக வரும் நபருக்கு, நான்கில் ஒரு பங்குக் கட்டணத்தைச் செலுத்தினால் போதும். ரயிலில் முதல்வகுப்பு படுக்கை வசதி இலவசம். உதவியாளருக்கு இரண்டாவது வகுப்பு படுக்கை வசதி இலவசம். இவர்களுக்கு டெல்லியில் அரசு குவார்ட்டர்ஸ் உண்டு. அலுவலகம் மற்றும் வீட்டில் வைத்துக்கொள்வதற்காக இரண்டு லேண்ட்லைன் போன்கள் வழங்கப்படும். அதில் வருடத்துக்கு 50 ஆயிரம் அழைப்புகள் இலவசம். இதுதவிர, மொபைல் போன், இன்டர்நெட் வசதி. அது சரி, பதவியில் இருக்கும் வரைதானே இத்தனை சுகவாசமும் என்று நினைக்காதீர்கள். அதற்குப் பிறகும் ஒவ்வொரு மாதமும் 20,000 ரூபாய் பென்சனும், கணிசமான சலுகைகளும் உண்டு.

என்ன... உங்களுக்கும் எம்.பி. ஆகும் ஆசை வந்துடுச்சா?

- எஸ்.ஷக்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism