Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

பொன்விழி, அன்னூர்.

கழுகார் பதில்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

  சிப்பாய்க் கலகத்தின்போது ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த இந்தியர் யார்?

கழுகார் பதில்கள்

  1857-ம் ஆண்டு நடந்த இந்திய சுதந்திர யுத்தத்தை 'சிப்பாய்க் கலகம்’ என்று சிலர் கொச்சைப்படுத்தினார்கள். எனவே, அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது தவறு. 'விடுதலைக்கான இந்திய யுத்தம்’ என்று அதை அடையாளப்படுத்தியவர் வீர சாவர்க்கர். அதைப் பல பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளே கலகம் என்று சொல்லவில்லை. கிழக்கிந்தியக் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராக இருந்த எல்லன்பரோ, 'நிலவக்கூடிய சூழ்நிலையைப் பார்க்கும்போது இந்த ஆயுத மோதல்கள் முறையான யுத்தத்தைப்போலக் காணப்பட்டதே தவிர... கலகத்தைப் போல அல்ல’ என்றுதான் அறிக்கை கொடுத்தார். எனவே, நாம் திரும்பத் திரும்ப 'சிப்பாய்க் கலகம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது.

அந்த யுத்தத்தை நடத்திய அத்தனை இந்தியரும், பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்கள்தான். 'எரிமலை அல்லது இந்திய சுதந்திரப் போர்’ என்ற தலைப்பில் வீர சாவர்க்கர் எழுதிய புத்தகத்தைப் படித்தால், முழுமையாக உணர்வீர்கள்.

வி.ஜி.சத்தியநாராயணன், நங்கநல்லூர்.

கழுகார் பதில்கள்

  ரயில்தான் வேகமாகப் போகும் என்றால், ரயில்வே மந்திரியின் பதவியும் அதைவிட வேகமாகப் போய்விட்டதே?

  'எனக்கு நாடுதான் முக்கியம், அப்புறம்தான் கட்சி’ என்று வெளிப்படையாகச் சொல்பவரை எந்தக் கட்சித் தலைவர் வைத்திருப்பார்? அதுவும் மம்தா மாதிரியான ஆட்களிடம் இது பலிக்குமா? 'நான் நல்லவர்’ என்பதைக் காட்டிக்கொள்வதற்காக மம்தா எடுத்த அநியாயமான நடவடிக்கை இது. இத்தகைய மனோபாவங்கள் அரசியலுக்கும் ஆட்சிக்கும் ஆபத்தானவை!

புஷ்பவள்ளி, திருமானூர்.

கழுகார் பதில்கள்

  பூமி அழியும் என்பது உண்மையா?

  பூமி தோன்றிய காலத்தில் இருந்தே இந்தப் பொய், உயிர் வாழ்கிறது. இது நிலவில் வாழ முயற்சிக்கும் காலம்!

'புவியில் இருந்து நிலவுக்கு’ என்ற நாவலை ஜூல்ஸ்வெர்ன் என்பவர் 1865ல் எழுதினார். அப்போது அதைப் பலரும் கிண்டல் அடித்தார்கள். ஆனால், ராக்கெட் பற்றிய தொழில்நுட்ப அறிஞர்கள் அதில் இருந்து உத்வேகம் பெற்றார்கள். பெரிய பீரங்கி வழியாகச் செல்லும் குண்டுக்குள் விண்வெளி வீரர் ஒருவர் இருப்பதாகவும் அந்தக் குண்டு நிலவை அடைவதாகவும் அந்த நாவலின் கற்பனை போகும். ஆனால், உண்மையில் சோவியத் நாடு லூனா -3 என்ற திட்டத்தின் மூலமாக நிலவின் மறுபுறத்தைப் படம் எடுத்தது. அங்கு கண்ட ஒரு கன்னக் குழிக்கு எழுத்தாளர் ஜூல்ஸ்வெர்ன் பெயரை வைத்துக் கொண்டாடியது. அடுத்து, நம்முடைய சந்திராயன்-2 திட்டம் வரப்போகிறது. வாழும் இடமாக நிலவு மாறலாம். இத்தகைய நம்பிக்கைகளின் மீது ஆர்வமாக இருங்கள். அவநம்பிக்கைகளில் அல்ல!

ஆர்.சுப்ரமணியன், கூடுவாஞ்சேரி.

கழுகார் பதில்கள்

சேது சமுத்திரத் திட்டம் என்ன ஆனது?

'ஸ்வாகா’ ஆகிவிட்டது! 'அதுதான் அண்ணாவின் கனவுத் திட்டம்’ என்று சொன்னவர்​களே, அமைதி ஆகிவிட்டார்களே!

'கடலுக்குள் மண்ணைக் கொட்டினாலும் காசைக் கொட்டினாலும் அள்ள முடியாது’ என்று, மறுபடியும் நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேறினால் இந்தியாவின் வர்த்தக நிலைமை உயரும் என்று சொன்னார்கள். ஆனால், டி.ஆர்.பாலுவுக்கு மட்டுமே பயனைக் கொடுத்து, திட்டம் பணால் ஆகிவிட்டது. இதைப் பார்த்த பிறகு உஷாராகி, கருணாநிதி ஓர் அறிக்கை விடலாம்!

போடி.எஸ்.சையது முகமது, சென்னை-93.

கழுகார் பதில்கள்

  சாதிக் பாட்ஷா இறந்து ஒரு வருடம் ஆன பிறகுகூட, மர்ம முடிச்சுகள் இன்னும் முழுமையாக விலகவில்லையே?

  சி.பி.ஐ. இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளையும் முடித்துவிட்டது என்றே சொல்கிறார்கள். ஒருவித மன அழுத்தம் காரணமாக சாதிக் பாட்ஷா தற்கொலை செய்துகொண்டார் என்ற முடிவுக்கு வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். இதை, சி.பி.ஐ. ஏன் சொல்லாமல் இழுத்தடிக்கிறது? அல்லது மறைக்கிறது? அல்லது சொல்ல மறுக்கிறது?

ஜி. அர்ஜுனன், திருப்பூர்-4.

கழுகார் பதில்கள்

  உ.பி.யில் அகிலேஷ் யாதவ் முதல்வர் ஆனதும், 'அன்றைக்கே ஸ்டாலினை முதல்வர் ஆக்கி அழகு பார்த்திருக்கலாம்’ என்று கருணாநிதி வருத்தப்பட்டு இருப்பாரா?

  கருணாநிதிக்கு அப்படி ஒரு யோசனை இப்போதும் இல்லை. அப்போது எப்படி இருந்திருக்க முடியும்?

ர.ஷண்முகப்ரியா, திருப்பூர்.5

கழுகார் பதில்கள்

  அரசு கவிழ்ந்தால் கவர்னரை வைத்து ஆட்சி நடத்துகிறோம். எம்.எல்.ஏ. ஒருவர் இறந்துபோனாலோ அல்லது பதவி பறிபோனாலோ கவர்னரையே எம்.எல்.ஏ.வாக நியமித்து இடைத்தேர்தலைத் தவிர்த்தால் என்ன?

  இல்லை... நடைமுறைக்கு சாத்தியம் ஆகாது.

மக்களாட்சியின் மகத்துவமே மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர் எம்.எல்.ஏ.வாக இருக்க வேண்டும் என்பதுதான். கவர்னர் மட்டும் அல்ல... யாரை நியமனம் செய்தாலும் அது மக்களாட்சிக்குச் செய்யும் துரோகம். இடைத்தேர்தலைத் தவிர்க்க வேண்டும் என்பது உங்களது ஆசை. அத்தகைய சூழ்நிலையில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கட்சியின் உறுப்பினரை எம்.எல்.ஏ. ஆக்கலாமா என்பதை சட்ட மேதைகள்தான் பரிசீலனை செய்ய வேண்டும்!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

'ஸ்டாலின்தான் தி.மு.க. தலைவர்’ என்று திருமாவளவன் கூறியுள்ளது குறித்து?

  திருமா, தி.மு.க. கூட்டணியில் இருக்கிறாரா? தி.மு.க.வில் இருக்கிறாரா?

வி.எஸ்.சேனாதிபதி, வேலூர்-9.

கழுகார் பதில்கள்

  ஆங்கிலேயர்களே நம்மை ஆண்டுகொண்டு இருந்திருந்தால்..?

நிலைமையில் எந்த மாறுதலும் இருந்திருக்காது. இந்தியாவின் வளத்தை வெளிநாட்டுக்குக் கொண்டுசென்று அவர்களும் பதுக்கினார்கள். இப்போதும் பதுக்கப்படுகிறது. என்ன வித்தியாசத்தை உணர்ந்திருப்போம்?

எஸ்.ஏ.காதர், விழுப்புரம்.

கழுகார் பதில்கள்

  சேனல் 4 ஒளிபரப்பிய கொடூரக் காட்சிகள் பற்றி?

  இனி உலகத்தில் எந்த மனித உயிரும் இப்படி ஒரு கொடுமையை அனுபவிக்கக் கூடாது!

அனைத்து நாடுகளும் தனித்தனித் தீவுகளாக இருந்த காலத்தில், ஹிட்லரின் கொடுமைகள் அரங்கேறின. அதனால், உலகத்தால் தடுக்கவும் முடியவில்லை. தண்டிக்கவும் இயலவில்லை. ஆனால் இன்று, உலகம் அனைத்தும் பக்கத்து வீடுகளாக மாறிய காலத்திலும் தடுக்கவும் முடியவில்லை, தண்டிக்கவும் இயலவில்லை என்றால்... தமிழனின் தலைவிதியை நினைத்து நொந்துகொள்வதைத் தவிர வேறு வழி இல்லை!

முரு.சொ.தியாகராஜன், சின்னசொக்கிகுளம்.

கழுகார் பதில்கள்

  'அண்ணா நூலகத்தைக் காக்கத் தீக்குளிப்பேன்’ என்று கருணாநிதி சொல்லி இருப்பது..?

  தீக்குளித்த தியாகிகளைக் கிண்டல் அடிப்பது!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்