Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

பொ.மாரிமுத்துக்குமார், திருச்சி-5.

கழுகார் பதில்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கவுதமாலா நாட்டில் பெட்ரோ பிமென்டல் ரியோஸ் என்ற முன்னாள் ராணுவ அதிகாரிக்கு 6,060 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதைப் பார்த்தீரா?

30 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கொடூரத்​துக்குக் கிடைத்த தண்டனை இது!

கழுகார் பதில்கள்

கவுதமாலா நாட்டில் உள்நாட்டுப் புரட்சி நடந்தது. லாஸ் தோஸ் ஏரஸ் என்ற கிராமத்துக்குள் 20 படை வீரர்களுடன் வந்த பிமென்டல், கண்ணில் பார்ப்​பவர் அத்தனை பேரையும் சுட்டுத்தள்ள உத்தரவிட்டார். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என எந்த வித் தியாசமும் இல்லாமல் சில நிமிடங்களில் 201 பேர் கொலை செய்யப்பட்டு ஒரு கிணற்றுக்குள் தூக்கிப் போடப்பட்டார்கள். இந்தக் கொடுமையை அந்த நாட்டு நீதிமன்றம் பெரும் நெருக்கடிக்கு மத்தியில் விசாரித்தது. ஒரு கொலைக்கு 30 ஆண்டுகள் வீதம் 6030 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிபதி, மனித குலத்துக்கு எதிரான குற்றம் என் பதற்​காக 30 ஆண்டுகள் சேர்த்து தண்டனை விதித்தார். இந்தக் கொலையைச் செய்தபோது பிமென்​டலுக்கு 23 வயது. இன்று 54 வயது. குற் றத்தின் கொடூரத்தை உணர்த்துவதற்காக இத்தனை ஆண்டுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும், அந்த நாட்டுச் சட்டத்தின்படி அதிகபட்சம் 50 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்தாக வேண்டும். 201 பேரைக் கொன்றவருக்கே இத்தனை தண்டனை என்றால்...?

 டி.ஜெய்சிங், கோவை-1.

கழுகார் பதில்கள்

பணம், மனிதனை எப்படியும் காப்பாற்றும் என்று சிலர் சொல்கிறார்களே?

##~##

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதனால் இவ்வளவு சிக்கல்?

உங்களது முதல் கேள்விக்கான பதில் இரண்டாவது கேள்வியிலேயே இருக்கிறது. பணம் காப்பாற்றும் என்றால் மார்ட்டினுக்கு ஏன் சிக்கல் வருகிறது? அவரால் ஏன் சிறையில் இருந்து வெளியே வர​முடியவில்லை? தனது தரப்பு விளக்கம் எதையும் சொல்​லாமல் அவர் பயப்படுவது ஏன்? அவரிடம் பணமா இல்லை?

 வி.பரமசிவம், சென்னை-25.

கழுகார் பதில்கள்

அதிர்ஷ்டக் காற்று பி.எச்.பாண்டியன் பக்கம் அதிகமாக வீச ஆரம்பித்து விட்டதே?

ஜெயலலிதாவின் பரந்த மனதுக்கு இது ஒரு சாட்சி. ஜானகி அணி சார்பில் புறாவில் நின்று ஜெயித்தவர் அவர். அவருக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் பார்க்கும்போது, உண்மையில் ஜெ. சூப்பர்தான்!

 இரா.யூசுப் அன்சாரி, சென்னை-87.

கழுகார் பதில்கள்

இன்னும் குவான்டனாமா சிறையில் மனித இனத்துக்கு எதிரான குற்றத்தைச் செய்துகொண்டு இருக்கும் அமெரிக்க அரசு, இலங்கைக்கு எதிராக எந்த அடிப்படையில் தீர்மானம் கொண்டுவந்தது?

லஞ்சம் வாங்கும் போலீஸ்காரர்தான், அதற்காக திருடனை அரெஸ்ட் பண்ணும்போது, 'நீ லஞ்சம் வாங்குகிறவன்’ என்றா சொல்ல முடியும்? இன்றைக்கு அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகள் அந்த மனித உரிமை மீறலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங் கட்டும்!

 தமிழினியன், விழுப்புரம்.

கழுகார் பதில்கள்

திருச்சி இடைத்தேர்தலுக்கும் சங்கரன்கோவில் தேர்தலுக்கும் என்ன வித்தியாசம்?

ஆச்சர்யமான வித்தியாசம் அதில் இருக்​கிறது. திருச்சியில் அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் 14 ஆயிரம் வாக்கு​கள்தான் வித்தியாசம். ஆனால், சங்கரன்​கோவிலில் இரண்டு கட்சிகளுக்குமான வித்தியாசம் 68 ஆயிரம் ஆகி விட்டது. இத்தனைக்கும் திருச்சி தேர்தல் உடனே நடந்தது. ஆளும்கட்சி மீது கெட்ட பெயரும் அவ்வளவாக ஏற்படவில்லை. ஆனால், இப்போது தேர்தல் நடந்தபோது ஏராளமான நெகட்​டிவ் மேட்டர்கள்.

தென் மாவட்டங்களில் தி.மு.க. மிகமிகப் பலவீன​மாக இருக்கிறது என்பதை சங்கரன்கோவில் சொல்​கிறது!

ந.சேதுராமன், கொடுமுடி

கழுகார் பதில்கள்

ஒரு கற்பனைதான்! கருணாநிதி பிரதமர் ஆனால்?

ஒரு கற்பனைதான்! மன்மோகன் தமிழக முதல்வர் ஆனால்..? யோசித்து எழுதுங்கள்!  

 எஸ்.ஜெயகாந்தன், புன்செய்புளியம்பட்டி.

கழுகார் பதில்கள்

தமிழக டி.ஜி.பி.யாக விஜயகுமார் நியமிக்கப்படலாம் என்ற செய்தி உண்மையா?

இல்லை. இதை வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டுத்தான் அவர்போனார். இப்போதைய டி.ஜி.பி.யின் பணிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிகிறது. இவருக்கே நீட்டிப்பு கிடைக்குமா? அல்லது புதிய டி.ஜி.பி.யா எனக் காத்திருந்து கவனிப்​போம். ஆனால் விஜயகுமார் அதற்கு 2 மாதத்துக்கு முன்பே ஓய்வு பெற்றுவிடுவார்!

 சி.பாஸ்கர், குரோம்பேட்டை.

கழுகார் பதில்கள்

விடுதலைப் புலிகளுடன் தமிழக எம்.பி.க்களுக்குத் தொடர்பு இருக்கிறது என்று இலங்கைத் தூதர் பேசி இருக்​கிறாரே?

ஈழத் தமிழர்களுக்கு சார்பாக யார் பேசினாலும் இலங்கை அரசாங்கம் பாய்ச்சும் ஒரே அவதூறு இது மட்டும்தான். 'விடுதலைப் புலிகளைத்தான் முற்றாக அழித்து விட்டார்களே?’ அப்புறம் எப்படி தமிழக எம்.பி.க்கள் தொடர்பு வைத்துக்கொள்ள முடியும்?

 ஆர்.விஸ்வநாதன், சென்னை-78.

கழுகார் பதில்கள்

தமிழகத்தின் இன்றைய கடுமையான மின் தட்டுப்பாட்டுக்கு காரணம், இன்றைய அ.தி.மு.க. அரசா? அல்லது முந்தைய தி.மு.க. அரசா?

முந்தைய தி.மு.க. அரசும் அதற்கு முந்தைய அ.தி.மு.க. அரசும்தான் காரணம்! இதில் கருணாநி​தியை மட்டும் குறை சொல்லி ஜெயலலிதா தப்பிக்க முடியாது. இன்றைக்கு விஷன் 2023 என்ற தொலை நோக்குத் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்துள்ளார். அது வரவேற்கத்தக்கது. ஆனால் அப்படி ஒரு திட்டம் 2003-ம் ஆண்டே விஷன் 2013 என்ற திட்டமாக ஜெயலலிதா செய்திருந்தால், இப்போது ஏன் வரப்போகிறது மின்வெட்டு?

ஒருவரை மாற்றி ஒருவர் குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. இரண்டு பேரும் தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்க வேண்டும்!

 எம்.கல்யாணசுந்தரம், கோயம்புத்தூர்.

கழுகார் பதில்கள்

இப்போது ஊழலை மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்களே?

ஓட்டுக்கு பணம் வாங்குபவர்கள் எப்படி சீரியஸாக எடுப்பார்கள்? ஓட்டுக்குப் பணம் வாங்கு​பவர்கள் வாழும் நாட்டில் மந்திரியாக  இருப்பதைவிட காசு வாங்காமல் ஓட்டுப் போடும் மக்கள் வாழும் வார்டில் கவுன்சிலராக இருப்பது கௌரவமானது!

 கலைஞர் ப்ரியா, வேலூர்( நாமக்கல்).

கழுகார் பதில்கள்

கையிலே கூடங்குளத்தை வைத்துக்கொண்டு கூடுதல் மின்சாரம் கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதும் ஜெயலலிதா பற்றி?

தமிழகத்தின் மின்சாரத் தேவைக்கு கூடங்குளம் சர்வரோக நிவாரணி அல்ல. அந்த மின் திட்டத்தில் இருந்து 620 மெகா வாட் மின்சாரம் கிடைக்கப் போகிறது. அதில் இருந்து தமிழகத்துக்கு 200 மெகாவாட்தான் தரப் போகிறார்கள். ஆனால், நம்முடைய மின்பற்றாக்குறை 1200 மெகா வாட். எனவே, கூடங்குளம் திறந்ததும் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைத்துவிடும் என்பது கனவுதான்!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்