Published:Updated:

தங்கர்பச்சானின் தமிழ்க் கூடு!

படம் அல்ல... கட்சி!

##~##

ழுத்தாளராக, சினிமா இயக்குனராக, நடிகராக, 'தானே’ போராளியாக அறியப்பட்ட தங்கர் பச்சான், இப்போது அரசியல் தலை​வராக அவதாரம் எடுத்து இருக்கிறார்! 

கடந்த 24-ம் தேதி, ஈரோட்டில் தனியார் கல்லூரி ஒன்றுக்குப் பேச வந்த தங்கர்பச்சான், தனது அரசியல் இயக்கத்தைத் தொடங்கி வைத்து, 'தமிழ்க்கூடு’ என்று பெயரும் சூட்டினார். ''தமிழர்களுக்கான கட்சி இது. தமிழகத்தில் தமிழ்தான் ஆட்சி மொழி. இந்தக்கட்சி மக்களை நம்பித் தொ டங்கப்​படவில்லை. மாணவர்களை நம்பித் தொடங்​​கப்​பட்டது'' என்று பேசத் தொடங்​கினார் தங்கர்​பச்சான். ''தமிழ்ச் சமு​தாயத்திடம் நான் கேட்க வேண்டிய கேள்​விகள் ஏராளம். ஆனால், மக்களிடம் பேச மாட்டேன். அவர்​கள் வாக்குகளை விற்று​விட்டார்கள். அடுத்த தலைமுறை நீங்கள்தான். அத​னால்தான் உங்​களி டம் வந்துள்ளேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தங்கர்பச்சானின் தமிழ்க் கூடு!

சுனாமியின்​போது ஓரிரு வாரங்களில் மக்களின் வாழ்வாதாரம் சரி செய்யப்பட்டது. ஆனால், 'தானே’ புயலால் பாதிக்கப்​பட்ட 30 லட்சம் மக்களின் வாழ்​வாதாரம் இன்னமும் சரி​செய்யப்​படவில்லை. ஈழத் தமிழனுக்​காகப் போராடிய நம் சகோதரர்கள், கடலூர் தமிழனுக்குக் குரல் கொடுக்​க​வில்லை.

'தானே’ பாதிப்பு குறித்து நான் எடுத்த குறும்படத்தின் சி.டி-யை உள்துறை அமைச்சகத்திடம் கொடுத்​துள்ளேன். சோனியாவை சந்தி க்கக்கூட நேரம்  கிடைத்து விட்டது. ஆனால், தமிழக முதல்வரை சந்திக்க பிப்ரவரி மாதத்தில் இருந்து அலையாய் அலைகிறேன். முடியவில்லை.

இடைத்தேர்தலில் மக்கள் மீது ரவுடிகள், பண முதலாளிகள் அடக்குமுறை தொடுத்தார்கள். சங்கரன்கோவிலில் 32 மந்திரி களும் சங்கமித்தார்கள். 40 நாட்கள் அரசு அலுவலகங்​கள், திட்டங்கள் முடங்கின. ஈழத்திலே தமிழர்களை கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தபோது கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள், இப்போது பிரபாகரனைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. தமிழர்களை ராஜபக்ஷே அழிக்கவில்லை. தமிழர்கள்தான் தமிழர்களை அழித்தார்கள்.

மாற்றம் என்பது ஒரு சிலரின் மத்தியில் இருந்துதான் தொடங்க வேண்டும். இனம், மொழி, மண், மக்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லிக்கொடுக்க ஆள் இல்லை. தமிழகத்தில் 440 பொறியியல் கல்லூரிகளும், ஏராளமான கலைக் கல்லூரிகளும் இருக்கின்றன. அத்தனை மாணவர்களும் 'தமிழ்க்கூடு’ அமைப்பில் இணைய வேண்டும். நீங்கள் எந்த நேரமும் என்னுடைய அலைபேசிக்குப் பேசலாம். வாருங்​கள், புதிய சமுதாயத்தைப் படைப்போம்'' என்றார் ஆவேசமாக!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: க.தனசேகரன், க.ரமேஷ்