Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஆஸ்ரா கர்க், சகாயம், கண்ணப்பன்

மிஸ்டர் கழுகு: ஆஸ்ரா கர்க், சகாயம், கண்ணப்பன்

மிஸ்டர் கழுகு: ஆஸ்ரா கர்க், சகாயம், கண்ணப்பன்

''நல்லதுக்கு காலம் இல்லை!'' என்றார் கழுகார்!

 அதற்கான காரணத்தை அவரே அவிழ்ப்பார் என்பதால் அமைதியாக இருந்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''மதுரையில் அழகிரி பெயரைச் சொல்லிக் கெட்ட ஆட்டம் போட்டவர்களை மொத்தமாகத் தட்டி வைத்து இந்த ஆட்சிக்கும் முதல்வருக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்த மூன்று பேர், கலெக்டர் சகாயம், கமிஷனர் கண்ணப்பன், எஸ்.பி. ஆஸ்ரா கர்க். இப்போது அந்த மூன்று பேரையும் மதுரையில் இருந்து மாற்றுவதற்கு ஆளும் கட்சியில் இருக்கும் சிலரே முயற்சிக்கிறார்கள். அதற்கு போலீஸிலும், நிர்வாகத்திலும் உள்ள உயர் அதிகாரிகளே தூபம் போடுகிறார்கள்!'' என்று சீரியஸான குரலில் சொன்ன கழுகார் தொடர்ந்தார்!

''தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு முன் மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா, 'மதுரையில் அழகிரி ஆட்கள் தனிரவுடி ராஜாங்கம் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மதுரையில் ரவுடிகள் ராஜ்ஜியம் ஒழிக்கப்படும்’ என்று முழங்கினார். சட்டசபைத் தேர்தலின்போது நேர்மையான அதிகாரிகளான கமிஷனர் கண்ணப்பன், எஸ்.பி. ஆஸ்ரா கர்க், கலெக்டர் சகாயம் ஆகியோர் தேர்தல் கமிஷனால் மதுரையில் நியமிக்கப்பட்டனர். தி.மு.க.வினரின் 'திருமங்கலம்’ ஃபார்முலாவை இந்த நேர்மையான அதிகாரிகள் டீம் மதுரையில் உடைத்து எறிந்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர் மாற்றப் பட்டாலும் இவர்கள் மாற்றப்படவில்லை. குறிப்பாக, அழகிரியின் ஆதரவாளர்களான பொட்டு சுரேஷ், தளபதி உட்பட பலர் மீது நிலஅபகரிப்பு மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில் கைது செய்து தி.மு.க. கூடாரத்தையே கலகலக்கச் செய்தவர் எஸ்.பி. ஆஸ்ரா கர்க். ஆனால், இப்போது அதே எஸ்.பி. ஆஸ்ரா கர்க்கை மாற்றுவதற்கான மறைமுக வேலைகள் அரங்கேறி வருகின்றன.

##~##

விருதுநகர் மாவட்டத்தைக் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வருகிறார் எஸ்.பி. ஆஸ்ரா கர்க். சிவ காசியைச் சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி தாளாளர் சோலைச்சாமி மீது நிலஅபகரிப்பு வழக்குப் பதிவு செய்திருப்பதுதான் இவருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.  'தாளாளர் சோலைச்சாமி மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்ததற்காக எஸ்.பி. ஆஸ்ரா கர்க்குக்கு பல இடங்களில் இருந்து கடும் நெருக்கடிகள் வந்தன. அதிஉயர் போலீஸ் அதிகாரியே இதை விரும்பவில்லை.’ என்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பலரும் ஆஸ்ரா கர்க்கிடம் பேசி இருக்கிறார்கள். அவர் எதற்கும் மசியவில்லையாம். இதையடுத்து, ஆஸ்ரா கர்க்கை டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு 'தெலுங்கானா’ அதிகாரிகள் டீம் காய் நகர்த்தி வருகிறது. 'அழகிரியின் நிழல்கள் மீது கைவைத்தபோதுகூட இத்தகைய எதிர்ப்பும் மிரட்ட லும் எனக்கு வரவில்லை. ஆனால், ஒரு கல்லூரி உரிமையாளரைக் கைது செய்தால் இத்தனை போலீஸ் அதிகாரிகள் சமாதானம் பேச வருகிறார் களே’ என்று நொந்துகொண்டாராம் ஆஸ்ரா கர்க். போலீஸ் மேல்மட்டத்திலும் முதல்வரைச் சுற்றிலும் இருக்கும் குறிப்பிட்ட தெலுங்கு லாபி ஒன்று இதற்கான வேலைகளில் இறங்கி உள்ளது. எப்போது வேண்டு மானாலும் டிரான்ஸ்ஃபர் வரலாம்!''

''ம்!''

''சிவகாசியில் ஒரு லாட்ஜை விற்க மறுத்த அதன் உரிமையாளர் மீது மான் தோல் மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக போலீசார் பதிவு செய்த வழக்கு,  தலித் மக்களிடம் நிலத்தை அபகரித்தது, நிலத்தை தர மறுத்த ஒரு பஞ்சாயத்துத் தலைவர் மீது 18 வழக்கு களை போலீஸ் மூலம் போடவைத்தது என ஒரு புள்ளி மீது பல புகார்கள் ஆஸ்ரா கர்க்கிடம் குவிந்து வருகின்றன.  ஆஸ்ரா கர்க் நடவடிக்கையில் இறங் குவதற்கு முன், டிரான்ஸ்ஃபர் படலத்தை அரங்கேற்றத் துடிக்கிறார்கள்!''

''இதில் இருக்கும் உண்மைகள் முதல்வருக்குத் தெரியாமலா போய்விடும்?''

''தன்னிடம் வரும் டிரான்ஸ்ஃபர் ஃபைல்களில் இப்போது அதிகப்படியான கேள்விகள் கேட்டுத்தான் முதல்வர் கையெழுத்துப் போடுகிறார். சகாயம் மேட்டரில் அதுதான் நடந்தது. மதுரை கலெக்டராக இருந்து எந்த குரூப் அடாவடிக்கும் வளைந்து கொடுக்காமல் சகாயம் வலம் வருவது பலருக்கும் பிடிக்கவில்லை. இதில் ஆளும் கட்சியினரும் அடக்கம். 'அழகிரி கல்லூரிக்கு நோட்டீஸ்தான் அனுப்பினார். துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று ஆளும் கட்சியினரே ஒரு மொட்டை பெட்டிஷனைத் தட்டி விட்டனர். இதற்கு மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் சிலரும் உடந்தை என்கிறார்கள். 'சகாயம், சென்னையில் இருந்தால் சில திட்டப் பணிகளை சிறப்பாகச் செய்ய வசதியாக இருக்கும்’ என்று நல்ல பிள்ளையாக ஒரு காரணத்தையும் கண்டுபிடித்தனர். சகாயம் டிரா ன்ஸ்ஃபர் ஃபைல் வந்ததுமே முதல்வர் கோபம் ஆனார். சரியான காரணத்தைச் சொல்லுங்கள்’ என்று எழுதி ஃபைலைத் திருப்பி அனுப்பி விட்டார்’ என்றும் பேச்சு.

இதற்குப் பிறகுதான் மதுரையில் பின்னப்படும் சதி வலைகளை முதல்வர் உணர ஆரம்பித்து இருப்பதாகச் சொல்கிறார்கள். 'மதுரையில் சகாயம், ஆஸ்ரா கர்க், கண்ணப்பன் ஆகிய மூன்று பேரும் இருப்பது எங்களுக்கு மட்டும் அல்ல... உங்களுக்கும் சிக்கல்தான்’ என்று அ.தி.மு.க.வினரிடம், தி.மு.க.வினர் சொல்லி வருவதும் ஆட்சி மேலிடத்துக்கு வந்து விட்டது!''

''முதல்வர்தான் உஷாராக இருக்க வேண்டும்!''

''அடுத்து சொல்லப்போவதும் போலீஸ் செய்தி தான். ஆனால், அரசியல் கலந்தது. தி.மு.க. ஒன்றியச் செயலாளர் கதிரவனைக் கடத்திய வழக்கில், ரவுடி வரிச்சியூர் செல்வத்தை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து கடைந்து, உண்மைகளைக் கறந்து இருக்கிறார்கள். இதனால் தி.மு.க. வட்டாரம் கலகலத்துப்போய் இருக்கிறது. குறிப்பாக ரித்தீஷ்!''

''வரிச்சூர் சொன்னதை வரி வரியாகச் சொல்லும்!''

மிஸ்டர் கழுகு: ஆஸ்ரா கர்க், சகாயம், கண்ணப்பன்

''திகிலான பல கிளைக் கதைகள் வந்து விழுந்தாலும், ரித்தீஷ் சம்பந்தப்பட்ட விவகாரங்களை மட்டுமே பிரதானமாகக் கொண்டு விசாரணை அறிக்கையை எழுதி இருக்கிறது போலீஸ். 'நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இருந்து எனக்கு ரித்தீஷ் அறிமுகம். அவர் சொன்ன வேலையைத் தட்டாமல் செய்து முடிப்பேன். ராமநாதபுரத்தில் ரித்தீஷின் அரசியல் வளர்ச்சிக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுப.தங்கவேலனும் அவரது குடும்பத்தினரும் நந்தி போல் குறுக்கே நிற்கிறார்கள். அவர்களிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவியைக் கைப்பற்றினால் தான் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்று ரித்தீஷ் கணக்குப் போட்டார். அதற்காக ஒன்றியச் செயலாளர்கள் சிலரை சரிக்கட்டும் முயற்சியில் இறங்கினார். அப்போது, 'கதிரவன் சம்மதித்தால் நாங்களும் ரித்தீஷை ஆதரிக்கத் தயார்’ என சிலர் சொன்னார்கள். ஆனால், கதிரவன் இதற்கு சம்மதிக்கவில்லை. அவரை மிரட்டி வழிக்குக் கொண்டுவரும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார் ரித்தீஷ்.’ என்று வரிச்சூர் செல்வம் சொன்னதாக மதுரை போலீஸார் சொல்கிறார்கள்!''

''அப்படியா?''

''போலீஸ் வட்டாரத்தில் உலவுவதைத்தான் சொல்கிறேன்! 'ஆளைத் தூக்கிருங்க; மத்ததை நான் பாத்துக்கிறேன்’னு எங்களுக்குத் தைரியம் கொடுத்ததால், பத்து நாட்களுக்கும் மேலாக கதிரவனின் நடமாட்டத்தைக் கண்காணித்து ஆளைத் தூக்கினோம். உள்ளூர் ஆட்களை வைத்துக் கடத்தினால் முகம் தெரிந்துவிடும் என்பதால் கேரளாவைச் சேர்ந்த எனது  நண்பர்களை வைத்துக் கடத்தினோம். இதற்கான கூலியையும் வாங்கிக் கொடுத்தேன். கதிரவன் போலீஸுக்குப் போனதும் எஸ்கேப் ஆகி, டெல்லியில் எம்.பி-க் களுக்கான வீட்டில் தலைமறைவாக இருந்தோம். போலீஸ் கவனம் திரும்பியதும் திண்டுக்கல் வந்த எனது கேரள நண்பர்கள், மிளகு வியாபாரிகள் என்று சொல்லி லாட்ஜில் தங்கி இருந்தார்கள். அப்போது போலீஸ் கைது செய்துவிட்டது’ என்று அனைத்துக் கதைகளையும் வரிச்சியூர் செல்வம் ஒப்புக்கொண்டாராம்!''

''ரித்தீஷ§க்குச் சிக்கலாச்சே?''

''இருந்தாலும் இறுதி அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யும்போதுதான் எல்லா உண்மைகளும் வெளிச்சத்துக்கு வரும். சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தனக்கு ஒதுக்கப்பட்ட களப்பாகுளம் ஏரியாவில் பணத்தைத் தண்ணீராய் இறைத்தார் ரித்தீஷ். கடைசிவரை அவர் அங்கே இருந்திருந்தால், தி.மு.க-வுக்கு டெபாசிட் தப்பி இருக்கும். இதை உணர்ந்த அ.தி.மு.க-வினர், தலைமைக்குத் தகவல் கொடுக்க, ஆள் கடத்தல் வழக்கில் ரித்தீஷை போலீஸ் கிட்டி போட்டது. கடைசியாக, அவரது செல்போன் கேரளாவுக்குள் இயங்கி இருக்கிறது. அதன்பிறகு தகவல் இல்லை. 'எம்.பி-க்கு ராஜஸ்தானில் ஆட்கள் இருக்கிறார்கள். அவர் அங்கே இருக்கலாம்’ என்பது வரிச்சியூரான் போலீஸுக்கு கொடுத்திருக்கும் க்ளூ என்றும் சொல்லப்படுகிறது. இந்தக் கடத்தலுக்குப் பயன்படுத்திய ஸ்கார்பியோ காரை சென்னையில் மார்வாடியிடம் அடகு வைத்திருக்கிறார்கள். அதை மீட்டு மதுரைக்குக் கொண்டு வந்துவிட்டது போலீஸ். கோவை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அந்தக் காரில் இருந்தது போலி நம்பர் பிளேட்டாம்!''

''இது இன்னொரு குற்றமே!''

''இப்போது கடலூர் முகவரியில் இருக்கிறது கார். 'அதன் உண்மையான முதலாளி யார் என்பதே குழப்பமாய் இருக்கிறது’ என்று சொல்லும் போலீஸ், 'இந்தக் கடத்தலில் வரிச்சியூர் செல்வம், அவன் தம்பி செந்தில் உட்பட மொத்தம் 11 பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். கொடைக்கானல் மலை அடிவாரத்தில் உள்ள தேவதானப்பட்டி தோப்பில் வைத்துத்தான் கதிரவனைக் கண்ணைக் கட்டி டார்ச்சர் செய்து இருக்கிறார்கள். ரித்தீஷ§க்காக இந்தக் கடத்தலை வரிச்சியூர் செல்வம் செய்ததாகவும் இவருடன் கை தான அஜீத் மீது கேரளாவில் ஏராளமான வழக்குகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கேரள போலீஸ், இந்த அஜீத்தை அள்ளிக்கொண்டு போய் இருக்கிறது. ரித்தீஷ் வளைக்கப்பட்டால்தான் முழு உண்மையும் வெளியில் வரும். 'சொந்தக் கட்சிக்குள் மீண்டும் ஒரு தா.கி. சம்பவம் போல நடக்க இருந்த விவகாரம் இது. எனவே, சட்டத்தின் முன்னால் மொத்தமாக அனை வரையும் கொண்டுவந்து நிறுத்துவோம்’ என்று சபதம் போட்டுள்ளது போலீஸ்!''

''தி.மு.க-வுக்கு பெரும் சிக்கலை உண்டாக்கும் போல!'' என்று நாம் சொன்னதை ஆமோதித்தவாறு கிளம்பினார் கழுகார்!

டாஸ்மாக் மூடுவிழா?

அ.தி.மு.க. ஆட்சியின் முதல் பட்ஜெட்டில் புதிதாக எதுவுமே இல்லை. காரணம், பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய அறிவிப்புகளை எல்லாம் ஒரு வாரத்துக்கு முன்பே முதல்வர் ஜெயலலிதா, தினமும் அறிக்கைகள் மூலம் சொல்லி விட்டார். அதோடு 'தொலைநோக்கு 2023’ அறிக்கையையும் வெளியிட்டு விட்டதால், பட்ஜெட்டில் சொல்வதற்கு புதிதாக எதுவும் இல்லாமல் போய்விட்டது.

மது பானங்களுக்கு விற்பனை வரி விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருப்பதால், மதுபானங்களின் விலை உயரலாம். இதில், இன்னொரு செய்தியும் காதில் விழுகிறது. மதுபான விற்பனையை தனியாரிடம் ஒப்படைக்கும் யோசனையில் அரசு இருக்கிறதாம். தனியார் என்றால் ஏல முறையில் தனித்தனி நபர்களுக்கு வழங்குவது இல்லை. ஒட்டுமொத்தமாக அனைத்துக் கடைகளையும் ஒரே நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மொத்தப் பணத்தையும் அந்த நிறுவனம் கொடுத்து விடும். அகில இந்திய அளவில் பிரபல நிறுவனம் ஒன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.  

டாஸ்மாக்கில் இருந்து வருவாய் கிடைத்தாலும், பராமரிப்பு, ஊழியர் களுக்குச் சம்பளம் என்று ஏகமாய் செலவாகிறதாம். அதனால், தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, அரசுக்கு இப்போது வரும் வருவாயைவிட கூடுதலாக வாங்கிக்கொள்ளத் திட்டமாம்.

மிஸ்டர் கழுகு: ஆஸ்ரா கர்க், சகாயம், கண்ணப்பன்