Published:Updated:

நாடாளுமன்ற கூட்டம் நாளை தொடங்குகிறது: அவை சுமுகமாக நடக்குமா?

நாடாளுமன்ற கூட்டம் நாளை தொடங்குகிறது: அவை சுமுகமாக நடக்குமா?
நாடாளுமன்ற கூட்டம் நாளை தொடங்குகிறது: அவை சுமுகமாக நடக்குமா?
நாடாளுமன்ற கூட்டம் நாளை தொடங்குகிறது: அவை சுமுகமாக நடக்குமா?

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தயார் நிலையில் உள்ளதால் அவை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்குமா? என்பது கேள்விக்குறிதான்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி இம்மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து நேற்று சபாநாயகர் மீராகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத், தேவைப்பட்டால் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார்.

உத்தரகண்ட் வெள்ளப் பெருக்கு, நாட்டின் பொருளாதார சூழல் மற்றும் பல்வேறு விவகாரங்களை இக்கூட்டத்தொடரில் எழுப்ப பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

##~~##
நாடாளுமன்ற கூட்டத் தொடர் மிகக் குறுகியகாலம் மட்டுமே நடக்க உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
முக்கிய எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பவுள்ள நிலையில், அனைத்து பிரச்னைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.