Published:Updated:

தமிழக அரசு கேட்கும் இழப்பீட்டை வழங்க முடியாது: சொல்கிறார் அன்புமணி

தமிழக அரசு கேட்கும் இழப்பீட்டை வழங்க முடியாது: சொல்கிறார் அன்புமணி
தமிழக அரசு கேட்கும் இழப்பீட்டை வழங்க முடியாது: சொல்கிறார் அன்புமணி
தமிழக அரசு கேட்கும் இழப்பீட்டை வழங்க முடியாது: சொல்கிறார் அன்புமணி

சென்னை: பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக தமிழக அரசு கேட்கும் இழப்பீட்டை வழங்க முடியாது என்று பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி கூறினார்.

சென்னை மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் தியாகராய நகரில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள அரசு மதுபான கடைகளை உடனே மூட வேண்டும் என்றும் சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் தமிழை ஆட்சி மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக தமிழக அரசு கேட்கும் இழப்பீட்டை வழங்க முடியாது என்றார்.

##~~##
பா.ம.க.வினர் மீது தமிழக அரசு பொய் வழக்கு போட்டுள்ளதாகவும், சட்டத்தின் மூலம் தமிழக அரசு போட்டது பொய் வழக்குதான் என்பதை நிரூபிப்போம் என்றார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பா.ம.க. தனித்துப் போட்டியிடும் என்று தெரிவித்த அன்புமணி, 15 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்றார்.