Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

கழுகார் பதில்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அரசியலை சாக்கடையுடன் ஒப்பிடுவது சரியா?

சரியல்ல! சர்வாதிகாரத் தலைமையை வீழ்த்தி, ஜனநாயகக் காற்றை சுழல வைத்தது அரசியல். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட்ட பல மன்னர் ஆட்சிகளை வீழ்த்தி மக்களாட்சியை உருவாக்கியது அரசியல். ஒரு கட்சி ஆட்சியை அகற்றி, பல கட்சி அமைப்பு முறையை உரு வாக்கியது அரசியல். நான் வைத்ததுதான் சட்டம் என்று செயல்பட்ட பல தலைவர்களை வீட்டுக்கு அனுப்பியது அரசியல்.

கழுகார் பதில்கள்

'துப்பாக்கி முனையில் அரசியல் பிறக்கிறது’ என்றார் மாவோ. 'அமைதியில் அரசியல் உதயம் ஆகிறது’ என்றார் காந்தி. 'ஒடுக்கப்பட்டவர் உள்ளத்தில் பிறக்கிறது அரசியல்’ என்றார் பெரியார். இத்தகைய அரசியலை முன்னெடுப்பது எதிர்காலத் தேவை. சிலர் இன்று அரசியலைச் சாக்கடை ஆக்கி விட்டார்கள். அப்படி ஆக்கியது நல்லவர்​கள் யாரும் இதற்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்​காகத்தான். அதற்குப் பலியாகி விடாதீர்கள்.

 கே.ஏ.என். சிவம், பெங்களூரு.

கழுகார் பதில்கள்

'விமானம் வந்து மோதினாலும் கூடங்குளம் அணு உலை நொறுங்காது’ என்று சொல்கிறாரே அமைச்சர் நாராயணசாமி?

இவரே எதிரி நாட்டுக்கு ஐடியா கொடுத்து வருகிறார் போல!

 கரும்புலம் சித்திரவேலு, நெய்விளக்கு.

கழுகார் பதில்கள்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால் மட்டும், இலங்கையில் குடியா மூழ்கிவிடப் போகிறது?

##~##

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு சுபிட்சம் கிடைத்துவிடும் என்று யாரும் நம்பவில்லை. ஆனால், இந்த தீர்மானத்தின் மூலமாக உலக அரங்கில் 'இலங்கையில் நடந்திருப்பது மனித உரிமை மீறல். போர்க்குற்றம்’ என்பது பகிரங்கமாக ஒப்புக் கொள்ளப்பட்டு உள்ளது.

எந்தப் பிரச்னையிலும் விசாரணை, தண்டனை என்பது அடுத்த கட்டம்தான். வழக்கு என்பதுதானே அனைத்துக்கும் அடிப்படை. அம்மாதிரியான காரியம்தான் இந்தத் தீர்மானம்!

 ஸ்ரீஉஷா பூவராகவன், படியூர் (திருப்பூர்).

கழுகார் பதில்கள்

தே.மு.தி.க. - மார்க்சிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டு வரும் உறவு மூன்றாவது அணிக்கான முன்னோட்டமா?

மூன்றாவது இடத்துக்கான முன்னோட்டம் என்று மட்டுமே சொல்ல முடியும்!

 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்

ஸ்டாலின், தி.மு.க. தலைவராவதற்கு எதிரான தடைகள் முழுமையாக விலகி விட்டனவா?

இல்லை! நாளுக்கு நாள் தடைகள் அதிகம் ஆகிக்கொண்டுதான் வருகின்றன. அவரது ஆதரவாளர்கள் பலரும் மனரீதியாக ஏனோ வருத்தத்தில் இருக்கிறார்கள். கருணாநிதி கையால் 'தலைவர்’ பதவியை பெற்றால் மட்டுமே ஸ்டாலினுக்கு அது வாய்க்கும் என்பதே இப்போதைய நிலைமை!

 இ.சிகாமணி, போத்தனூர்.

கழுகார் பதில்கள்

ஓர் அரசியல்வாதியின் பேச்சாற்றல் எப்படி இருக்க வேண்டும்?

'எதிரில் இருப்பவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு பேச வேண்டும்’ என்று சொல்வார்கள். அது நிஜம் அல்ல. நினைப்பு மட்டும்தான். ஆனால்,  உண்மையில் பொதுமக்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துச் சில தலைவர்கள் பேசுவதுதான் வேதனையாக இருக்கிறது!

 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்

'அமெரிக்கா, சீனா இல்லாமல் உலகில் எந்தப் பிரச்னை யையும் தீர்க்க முடியாது’ என்கிறாரே ஹிலாரி?

பிரச்னைக்கு உரியவர்கள் இல்லாமல் எப்படி தீர்க்க முடியும்? உலகில் எங்கு பிரச்னை நடந்தாலும் இவர்கள் இருவரும்தானே மறைமுகமாகவோ நேரடியாகவோ காரணமாக இருக்கிறார்கள்?

இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க வேண்டுமானால், சீனா மனது வைக்க வேண்டும். இந்தியா - பாக். பிரச்னை தீர வேண்டுமானால் அமெரிக்கா உதவ வேண்டும். உலகம் ஒரு காலத்தில் அமெரிக்கா - ரஷ்யா எனப் பிரிந்து இருந்தது. இப்போது, அமெரிக்கா - சீனா என்று பிரிந்து இருக்கிறது. உலக நாடுகளை நிம்மதியாகவும் நிம்மதி இல்லாமலும் ஆக்கும் சக்தி இப்போது இவர்களுக்குத்தான் உண்டு.

ஹிலாரி சொல்வது 'இந்த’ அர்த்தத்தில்தானோ?

 பொன்விழி, அன்னூர்.

கழுகார் பதில்கள்

'எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முடியாது’ என்கிறாரே விஜயகாந்த்?

சும்மாவே வரத் தயாராக இருக்கிறார்களா?

 குணசேகர், வந்தவாசி.

கழுகார் பதில்கள்

'இன்னும்கூட அதிகமாக வரி விதித்து இருக்கலாம்’ என்கிறாரே கருணாநிதி?

கருணாநிதியின் நல்ல எண்ணத்துக்கு இது ஒரு உதாரணம். தனக்கு ஓட்டுப் போட்டால்... நல்ல மக்கள். இல்லையென்றால்... கெட்ட மக்கள் என்று ஒரு தலைவர் நினைக்கலாமா? மக்களின் மீது கோபம் என்றால், அதற்காக இப்படியா சாபம் விடுவது? தமிழகத்தில் அல்லது பிற மாநிலத்தில் கூட தனக்கு வாக்களிக்காத மக்கள் மீது நிறைய வரி விதிக்கலாம் என்று சாபம்விடும் அரசியல் தலைவர் கருணாநிதியைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது!

 போத்தனூர் புலிச்சோழன், கோயமுத்தூர்.

கழுகார் பதில்கள்

'தவறுகளில் இருந்து பாடம் படித்துக்கொள்வேன்’ என்று சொல்லும் ராகுலைப் பாராட்டலாம்தானே?

எவ்வளவு காலம்தான் பாடம் படித்துக்கொண்டு இருப்பார்? பாஸ் ஆவது எப்போது 'பாஸ்’?

 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

கழுகார் பதில்கள்

வேலை பெறும் உரிமைச் சட்டம் விரைவில் வருவது நன்மை தருமா?

தகவல் பெறும் உரிமைச் சட்டம் வந்தது. தகவல்கள் அனைத்தும் தடை இல்லாமல் கிடைத்து விட்டதா? அதைப் போலத்தான் இந்தச் சட்டமும் சிலருக்கு மட்டும் வேலையைப் பெற்றுத் தரும்!

கழுகார் பதில்கள்

ஒரு கடிதம்: சேதுசமுத்திரத் திட்டம் குறித்த பதிலுக்கு சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.கே.நெப்போலியன் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். ''சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற டி.ஆர்.பாலு அமைச்சராக இருந்த போது சிறப்பான பணிகளைச் செய்தார். ஆனால் சில மதவாத சக்திகள் ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று மலிவான விளம்பரத்துக்காக மத உணர்வுகளை தூண்டிவிட்டு வழக்கு போட்டு நிறுத்தி விட்டார்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே பாலுவை கேவலப்படுத்தி எழுதி உள்ளது என்னைப் போன்ற தி.மு.க. தொண்டர்களுக்கு அதிர்ச்சியையும் மனவேதனையையும் உருவாக்கி உள்ளது!'' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.