Published:Updated:

குஜராத்: ``சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம்!" - 18 கிராம மக்கள் அறிவிப்பின் பின்னணி என்ன?

18 கிராமங்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு ( ட்விட்டர் )

அஞ்செலி, நவ்சாரி சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள குறைந்தது 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.

குஜராத்: ``சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம்!" - 18 கிராம மக்கள் அறிவிப்பின் பின்னணி என்ன?

அஞ்செலி, நவ்சாரி சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள குறைந்தது 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
18 கிராமங்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு ( ட்விட்டர் )

குஜராத்தில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இதற்கிடையில், அஞ்செலி மற்றும் நவ்சாரி சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தேர்தலைப் புறக்கணித்து, அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கிராமங்களுக்குள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டியிருக்கின்றனர்.

குஜராத் தேர்தல்
குஜராத் தேர்தல்

அஞ்செலி, நவ்சாரி சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள குறைந்தது 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள், ``கொரோனா காலகட்டத்துக்கு முன்பு வரை அஞ்செலியில் நின்று சென்ற ரயில்கள், கொரோனா ஊரடங்குக்குப் பிறகு நிறுத்தப்படுவதில்லை. அதனால், தற்போது வழக்கமாகச் அந்த ரயிலில் செல்பவர்கள், தனியார் வாகனங்களில் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு, நாளொன்றுக்கு, 300 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பழையபடி ரயில்களை நிறுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" எனக் கூறுகின்றனர்.

train
train

ரயில் சேவை தொடர்பாக பலமுறை கோரிக்கை முன்வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. உள்ளூர் ரயில்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாததால், தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்திருக்கின்றனர். அதற்காக, அஞ்செலி ரயில் நிலையம் அருகிலும், மற்ற கிராமங்களிலும், `ரயில் இல்லையென்றால், ஓட்டும் இல்லை. பா.ஜ க உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் பிரசாரத்திற்கு இங்கு வர வேண்டாம். நாங்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம்' என போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்.