Published:Updated:

சசி வலை; ஜெ. நிலை!

ப.திருமாவேலன்ஓவியம் : ஹரன்

##~##

க்களை மடையர்களாக நினைக்கும் அரசியல் தலைவர்கள் இருக்கும் நாட்டில்தான் இது மாதிரி எல்லாம் நடக்கும். ஜெயலலிதா - சசிகலா நட்பு... பிரிவு... மீண்டும் நட்பு... இதைத்தான் ஞாபகப்'படுத்துகிறது’.

 சசிகலாவைச் சதிகாரர் என்று சொல்லிக் கட்சியைவிட்டு நீக்கியது முதல், அவர் அப்பாவி என்று மீண்டும் சேர்த்துக்கொண்டது வரையிலான 100 நாட்களும் சொல்வது ஒன்றுதான்... ஜெயலலிதாவுக்கு சசிகலா மட்டும்தான் தங்கையாக இருக்க முடியும்; சசிகலாவுக்கு ஜெயலலிதா மட்டும்தான் அக்காவாக இருக்க முடியும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'போயஸ் கார்டன் இல்லத்தில் அக்காவுடன் இருந்த வரை, வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஓரளவுக்குத்தான் எனக்குத் தெரிந்ததே தவிர, முழு விவரமும் தெரியாது. 24 ஆண்டுகள் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்த நான், கடந்த டிசம்பர் மாதம் அக்காவைப் பிரிந்து, அவரது

சசி வலை; ஜெ. நிலை!

வீட்டைவிட்டு வெளியே வந்து வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவான பின்னர் தான், நடந்த உண்மைகள் முழுமையாக எனக்குத் தெரியவந்தன.

என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்ததை அடிப்படையாகவைத்து, எனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும்... அதனால், கட்சிக்குப் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதை யும்... அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப் பட்டன என்பதையும்... கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டன என்பதையும்... அக்காவுக்கு எதிரான சில சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன். மிகுந்த வேதனை அடைந்தேன். இவை எல்லாம் எனக்கே தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை’ என்கிறது சசிகலாவின் பெயரில் வந்த அறிக்கை.

சசிகலாவின் பெயரைப் பயன்படுத்தி அவரது சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் தங்களைத் தாங்களே அ.தி.மு.க. பொதுச் செயலாளர்களாக நினைத்துக்கொண்டு செயல்பட்டது சசிகலாவுக்குத் தெரியாது என்பது மட்டும் அல்ல; தனக்கும் இதுபற்றித் தெரியாது என்று ஜெயலலிதா சொல்ல வருவதையும் நம்ப முடியாது. சசிகலா வுக்கு இந்த மாதிரியான விஷயங்கள் தெரியுமா; தெரியாதா என்பது நாட்டுக்கு முக்கியமான சமாசாரம் அல்ல. ஏனென்றால், சசிகலா இந்த நாட்டு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இல்லை. ஆனால், அந்தக் கடமை ஜெயலலிதாவுக்கு உண்டு!

கான்ட்ராக்ட் எடுப்பது, கமிஷன் வாங்குவது, ஆட்களை நியமிப்பது, அதிகாரிகளை மாற்றுவது, மாவட்டச் செயலாளர்களுடன் மல்லுக்கு நிற்பது, மந்திரிகளிடம் பணம் கேட்பது, எம்.எல்.ஏ-க்களிடம் மாமூல் வசூலிப்பது என்பது மாதிரியான எத்தனையோ சமாசாரங்கள் சசிகலாவின் குடும்பத்தினர், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்ட பலரால் நடத்தப்பட்டன. சட்ட மன்றத் தேர்தலில் ம.தி.மு.க-வுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கலாம் என்று வைகோவிடம் பேச்சுவார்த்தைக்குப் போனது எம்.நடராஜனின் தம்பி எம்.ராமச்சந்திரனும் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியும். (இவர்கள் இருவரும் இப்போது கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள்!) ஜெயலலிதாவுக்கே தெரியாமல் வேட்பாளர் பட்டிய லில் பலரையும் சேர்த்து, முன்கூட்டியே பட்டியல் வெளிவரக் காரணமாக இருந் தவர் ராவணன். (இப்போது கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்!) தா.பாண்டியனும் ஜி.ராமகிருஷ்ணனும் டாக்டர் கிருஷ்ண ச£மியும் கார்டனுக்குள் வந்து தங்களுக்குத் தேவையான தொகுதிகளைக் கேட்டபோது, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியவர் சசிகலா. (கட்சியைவிட்டு நீக்கப்பட்டு இப்போது சேர்க்கப்பட்டு இருப்பவர்!) விஜயகாந்த் கார்டனுக்கு வந்து ஜெயலலிதா விடம் பேசிக்கொண்டு இருந்தபோது சுடிதார் அணிந்த சசிகலா திடீரென உள்ளே நுழைய... 'இவங்களைத் தெரியும்ல’ என்று 'அக்கா’ அறிமுகப்படுத்த... 'தங்கை’ அருகிலேயே உட்கார... சரிக்குச் சமமான நாற்காலியை அவருக்குப் போட்டுக்கொடுத்தவர் ஜெயலலிதா.

எது எதுவோ நடந்தபோது எல்லாம் கண்டும் காணாததுபோல் இருந்த ஜெயலலிதா, திடீரெனச் 'சதி... சதி... சதி’ என்று கிளர்ந்து எழுந்ததற்கு என்ன காரணம்? இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அடுத்தவர்கள். ஆனால் இம்முறை, ஜெயலலிதாவின் நாற்காலிக்கே குறிவைக்கப்பட்டது. அதனால்தான் அளவுக்கு மீறிய பதற்றமும் பயமும்!

சசி வலை; ஜெ. நிலை!

'ஜெயலலிதாவை அவர் வகிக்கும் பதவி யில் இருந்து விலக்குவதற்கும் அந்த இடத் தில் அமர்வதற்கும் திவாகரனும் ராவண னும் சதி செய்தார்கள்’ என்று தெரியவந்த தால்தான், சசிகலா உள்ளிட்ட அத்தனை பேருக்கும் கட்சியைவிட்டுக் கல்தா கொடுத்தார் ஜெயலலிதா. இப்போது அவரே 'அது’ சசிகலாவுக்குத் தெரியாமல் நடந்தது என்று நம்புகிறார்; கட்சிக்காரர்களையும் பொதுமக்களையும் நம்பச் சொல்கிறார்.

சசி வலை; ஜெ. நிலை!

''அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே நான் விரும்புகிறேன். என் வாழ்க்கையை ஏற்கெனவே அக்காவுக்கு அர்ப்பணித்துவிட்டேன். இனியும் எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவுக்குப் பணி செய்து அவருக்கு உதவியாக இருக்கவே விரும்புகிறேன்!'' என்ற சசிகலாவின் வார்த்தைகளைப் படிக்க நன்றாக இருக்கிறது. சசிகலா என்ற நபர், போயஸ் கார்டனுக்குள் ஜெயலலிதா வுக்கு உதவி செய்பவராக மட்டும் இருந் தால், யாரும் அவரை விமர்சிக்கப்போவதும் இல்லை; அவரைப் பற்றி எழுதப்போவதும் இல்லை. கட்சியும் ஆட்சியும் அவரால் பாதிக்கப்படும்போதுதான் - அவரைக் கவனிக்க வேண்டி உள்ளது.

ஜெயலலிதா அவர்களே, இன்னொரு நாடகத்தைப் பார்க்கும் மனநிலையில் தமிழ்நாடு இல்லை!