Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

மதுப்பித்தன், சென்னை.

கழுகார் பதில்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'கர்ணன்’ படம் சக்கைப்போடு போடுவதைக் கவனித்தீரா?

கழுகார் பதில்கள்

  சினிமாவில் மட்டுமா... அரசியலிலும்கூட ஃப்ரெண்ட்ஷிப் கதைகள்தான் சக்கைப்போடு போடுகின்றன. கர்ண - துரியோதன பாசமா, ஜெ. - சசி பாசமா எது சுவாரஸ்யமானது என்று யோசியுங்கள்!

அ.அர்ஜுனன், விழுப்புரம்.

கழுகார் பதில்கள்

'நடுக்கடலில் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்கிறாரே ப.சிதம்பரம்?

நம் சிதம்பரமா சொன்னார்? ஆச்சர்ய மாக இருக்கிறதே? தூக்கத்தில் இருந்தவர் எழுந்து விட்டாரா?

ஆர்.ராதாகிருஷ்ணன், புதுச்சேரி.

கழுகார் பதில்கள்

மூன்றரை மாதங்களுக்குப் பிறகு, போயஸ் கார்டனுக்குத் திரும்பி விட்டாரே சசிகலா?

  இடையில் ஒரு முறை நேரிலும், மூன்று முறை டெலிபோனிலும் பேசினார்களாம்.  இந்த முறை 'நிரந்தரமாய்த் திரும்பி விட்டார்’ என்று வேண்டுமானால் சொல்லலாம்!

உ.தனவேல், காங்கேயம்.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

டி.என்.பி.எஸ்.சி.யில் அதன் தலைவர் ஆர்.நடராஜ் எடுத்து வரும் நடவடிக்கைகள்?

  ஆக்கபூர்வமாக உள்ளன. மூன்று ஆண்டு காலத்துக்கு இது தொடர்ந்தால், அடுத்து எந்த முறைகேடும் எப்போதும் தலை தூக்காது.

இதுவரை நடந்த முறைகேடுகளுக்கு ஆர்.நடராஜ் என்ன பரிகாரம் காணப்போகிறார்? முறைகேடாகப் பதவி பெற்றவர்கள் இருந்தால் அவர்களை விலக்கும் அதிரடியையும் ஆர்.நடராஜ் செய்தால் மட்டுமே, களையெடுப்பு முழுமை அடையும்!

சு.கணேசன், திருமயம்.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துக்குமரன்?

  இந்த நூற்றாண்டில் இப்படியும் ஒரு எம்.எல்.ஏ. இருக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் முத்துக்குமரன்.

'ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? ஒரு அடிமை நீக்ரோவைப் போல உழைக்க வேண்டும். அதற்கான பலனை அமெரிக்க முதலாளியைப் போலப் பெற வேண்டும்’ என்றார் ஜோசப் ஸ்டாலின். ஆனால், முத்துக் குமரன் உழைக்க மட்டுமே செய்தார். பலனைப் பெறவில்லை. பெற நினைக்கவும் இல்லை.

மற்ற பூர்ஷ§வா கட்சிகளில் இத்தகைய மனிதர்களை எதிர்பார்ப்பது தவறு. கம்யூனிஸ்ட் கட்சிகளாவது முத்துக்குமரன்களை உருவாக்க வேண்டும்.

பொ.மாரிமுத்துக்குமார், திருச்சி.5

கழுகார் பதில்கள்

'அரசியலில் சொதப்புவது எப்படி?’ என்று, எந்த அரசியல் தலைவரிடம் கேட்டால் சரியான பதிலைத் தருவார்?

  கேள்விகள் கேட்பது - பதில்களைத் தருவது... இரண்டிலும் சமர்த்தர் கருணாநிதிதான்!

  ஆர்.விஜயகுமார், மதுரை.

கழுகார் பதில்கள்

எல்லாவற்றையும் குறை சொல்கிறீரே... இந்த நாட்டுக்கு எதுதான் தேவை?

  'உலகுக்கு எது தேவை என்று கேட்காதீர்கள். எது உங்களை விழிப்புடன் இயங்க வைக்கிறதோ, அதைச் செய்யுங்கள். ஏனெனில், விழிப்புடன் இருப்பவர்களே உலகுக்குத் தேவை’ என்கிறான் ஹோவார்ட் துர்மன்!

கழுகார் பதில்கள்

லட்சுமி செங்குட்டுவன், வேலூர்( நாமக்கல்).

கழுகார் பதில்கள்

ராமஜெயம்..?

  அதிகார போதைக்குள் அளவுக்கு மீறித் திளைப்பதால் எதிர்கொள்ள வேண்டிய ஆபத்து இது என்பதை அரசியல் சக்திகள் உணர வேண்டும். எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.

மு.சுப்பிரமணி, நெல்லை.

கழுகார் பதில்கள்

எல்லா விலையும் உயர்ந்து விட்டதே?

  ஓட்டுக்கு வாங்கும் பணமும் உயர்ந்து விட்டதே! பிறகு என்ன கவலை?

சுதீஷ், கன்னியாகுமரி.

கழுகார் பதில்கள்

பிறரது தகவல்களைத் திருடி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஹங்கேரி அதிபர் பால் ஹூ மிட் ராஜினாமா செய்து விட்டாரே?

கழுகார் பதில்கள்

  ஒரு புத்தகத்தில் இருந்து எடுத்து எழுதினால், அது திருட்டு. பத்து புத்தகத்தில் இருந்து தொகுத்து எழுதினால், அது ஆராய்ச்சி என்பார்கள். ஹங்கேரி அதிபர் ஆராய்ச்சி செய்துள்ளார். நம் ஊரில் சிலர் அந்தத் தொகுப்பு வேலையைக்கூட வாடகைக்கு விட்டு விடுகிறார்களே. இது, பால் ஹூ மிட்டுக்குத் தெரியுமா?

எஸ்.ஆர்.சரவணக்குமார், தேனி.

கழுகார் பதில்கள்

முல்லைப் பெரியாறு அணை குறித்து, நீதிபதி ஆனந்த் குழு அறிக்கை வருவது மாதிரித் தெரியவில்லையே?

  அநேகமாக இந்த மாதம் 22-ம் தேதி இறுதி விசாரணை முடிந்து, 30-ம் தேதிக்குள் அறிக்கை வந்து விடும் என்று நினைக் கிறேன்.

எஸ்.கிருஷ்ணன், கன்னியாகுமரி.

கழுகார் பதில்கள்

சசிகலா வந்து விட்டார். இனி ஒவ்வொருவராக வந்து விடுவார்களே?

  திண்ணை கிடைத்தால்... மடத்தைப் பிடிக்க முடியாதா?

கழுகார் பதில்கள்