பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

காந்தி லெனின், திருச்சி.

கழுகார் பதில்கள்

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி..?

கழுகார் பதில்கள்

சுதந்திரமான சிந்தனை​ கொண்டவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்க முடியாது. ராதாவின் நிலைமையும் அதுதான். பெரியாரைத் 'தலைவர்’ என்றவர் ராதா. ஆனால், அவரையே விமர்சித்து... அவருக்கு  முன்னா​லேயே பேசுவார். திரா விடர் கழகத்தில் இருப்பவர் போலக் காட்டிக் கொண்டார்... அவ்வளவுதான். 'காமராஜர்தான் தமிழர் தலைவர்’ என்று சொன்னார். அதற்காக, காங்கிரஸ் கட்சியை ராதா ஏற்றுக்கொள்ளவில்லை. கருணாநிதி உள்ளிட்ட தி.மு.க.வினர் சிலரைப் பிடிக்கும். ஆனால், அந்தக் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்தார். ஆனால், எம்.ஜி.ஆருக்கு அரசியல் தேவை இல்லை என்றார்.

எமர்ஜென்சிக்கு எதிராகப் பலரும் சென்னை சிறையில் அடைக்கப்பட்ட​போது ராதாவும் உள்ளே இருந்தார். எமர்ஜென்சிக் கொடுமைகளுக்கு எதிராக அவர் வாயைத் திறக்கவில்லை. 'நான் ஒரு நடிகன். எனக்கு அரசியல் எண்ணங்கள் உண்டு. ஆனால் கட்சி ஈடுபாடு தேவை இல்லை’ என்பதில் கடைசி வரை உறுதியாக இருந்தார்.

தன்னுடைய சிந்தனையின் போக்குக்கு  ஏற்ப தனது அரசியலை வடிவமைத்துக்​கொண்டார். அதில், சுயநலம் எந்தக் காலத்திலும் இல்லை. எவருடைய தயவுக்காகவும் தனது சிந்தனையை அவர் அடமானம் வைத்ததும் இல்லை!

 எம்.கல்யாணசுந்தரம், கோயம்புத்தூர்.

கழுகார் பதில்கள்

ஜெயலலிதாவிடம் அதிகம் காணப்படுவது மறக்கும் குணமா? மன்னிக்கும் குணமா?

மறப்பது போலவும் மன்னிப்பது போலவும் நடிக்கும் குணம்!

 ஸ்ரீஉஷா பூவராகவன், படியூர்.

கழுகார் பதில்கள்

கழுகார் பயப்படும் நபர்?

வாசகர்!

 இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

கழுகார் பதில்கள்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் துப்பாக்கிக் கலாசாரத்துக்கு யார் காரணம்?

##~##

காவல் துறைதான்!

கிரிமினல்கள் சில அரசியல்வாதிகளுடன் தொடர்பு வைத்து இருப்பதையும், அரசியல் கட்சிகள், சில கிரிமினல்களைத் தங்களது கைப்பாவையாகப் பயன்படுத்துவதையும் கண்டும் காணாதது போல இருப்பது சில போலீஸ் உயர் அதிகாரிகள்தான். 'தங்கள் பதவிக்கு ஆபத்து வராமல் இருந்தால் போதும்’ என்று இத்தகைய அதிகாரிகள் கண் மூடிக்கிடப்பதுதான் தமிழகத்தில் துப்பாக்கிக் கலாசாரத்தை அதிகப்படுத்தி வருகிறது. இன்றைக்கும், தமிழகத்தில் எத்தனைக் கள்ளத் துப்பாக்கிகள் இருக்கின்றன.. என்பது போலீ ஸாருக்குத் தெரியும். ஒரு கெடு வையுங்கள். 'கள்ளத் துப்பாக்கி இனிமேல் கண்டுபிடிக்கப்பட்டால், சம் பந்தப்பட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் உட்பட அனைவரும் சஸ்பெண்ட்’ என்று. கொண்டு வந்து கொட்டிவிட மாட்டார்களா?

 ரேவதிப்ரியன், ஈரோடு.

கழுகார் பதில்கள்

'மார்ட்டின் லூதர்கிங் போல எனக்கும் ஒரு கனவு உண்டு’ என்கிறாரே ஜெயலலிதா?

கனவு எல்லோருக்கும் உண்டு. அதை நடைமுறைப்​படுத்த நாம் எப்படி நம்மை மாற்றிக்கொண்டோம் என்பதுதான் முக்கியம். அந்தக் கனவை நிறைவேற்ற நாம் எத்தகைய தகுதியானவர்களை நம் அருகில் வைத்திருக்கிறோம் என்பது அதைவிட முக்கியம்!

 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

கழுகார் பதில்கள்

'எங்களுக்கு நீங்கள்தான் அம்மா. என் பிள்ளை​களுக்கும் நீங்கள்தான் அம்மா. என் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் நீங்கள்தான் அம்மா. எங்களுக்கு பொன், பொருள் வேண்டாம். பதவிகள் தந்து என்னை உயர்த்தி, இந்த முகவரி தந்ததே பத்து தலைமுறைகளுக்குப் போதும்’ என்று பால்வளத் துறை அமைச்சர் மூர்த்தி, முதல்வரைப் புகழ்ந்துள்ளாரே?

இந்த மாதிரி பல்லாயிரம் பாராட்டுக்களைக் கேட்டுக் கேட்டு புளித்துப்போனவர் ஜெயலலிதா. இன்னமும் இத்தகைய புகழ்ச்சி மயக்கம் ஜெயலலிதாவுக்கு இருப்பதுதான் வியப்பு!

கழுகார் பதில்கள்

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

கழுகார் பதில்கள்

வாக்களிப்பது தவிர இன்றைய சூழலில் வேறென்ன தலையான கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது?

வாக்களிப்பது என்பது உங்களது உரிமை. ஆனால், உங்களின் பிரதிநிதியை ஐந்து ஆண்டுகளுக்குக் கண்காணிப்பதுதான் உங்களின் முக்கியக் கடமை. அதை ஒவ்வொரு குடிமகனும் செய்யத் தவறுவதுதான் அரசியல் கட்சிகளின் மெத்தனத்துக்குக் காரணம்!

 ஆர்.ராஜதுரை, சீர்காழி.

கழுகார் பதில்கள்

'குடிகாரர்கள் ஓட்டு பா.ம.க.வுக்குத் தேவை இல்லை’ என்று டாக்டர் ராமதாஸ் சொல்லி இருக்கிறாரே?

இதை, டாஸ்மாக் கடை வாசலில் போர்டு எழுதி​வையுங்கள். அப்படியாவது குடி குறைகிறதா எனப் பார்க்கலாம்?!

 வி.பரமசிவம், சென்னை.25.

கழுகார் பதில்கள்

'காவிரி விஷயத்தில் தமிழகம் எப்போதும் நியாயமாக நடப்பது இல்லை. ஜெயலலிதா முதல்வராக எப்போது வந்தாலும் இதே பிரச்னைதான்’ என்கிறாரே கர்நாடக சட்டசபை காங்கிரஸ் தலைவர் சித்தராமையா?

காவிரி விஷயத்தில் ஜெயலலிதா உண்மையாக இருக்கிறார் என்று இதன் மூலம் தெரிகிறது!

 என்.சண்முகம், திருவண்ணாமலை.

கழுகார் பதில்கள்

'அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே நின்று தேர்த​லைச் சந்தித்தால், தமிழகத்தில் பா.ம.க.தான்ஆட்சியைப் பிடிக்கும்’ என்கிறாரே காடுவெட்டி குரு?

எங்கே... பெரம்பலூரிலா? அரியலூரிலா? காடுவெட்டியிலா?

 சிவசுப்பிரமணியன், சென்னை.10.

கழுகார் பதில்கள்

திண்டிவனம் கொலை வழக்கில் யார் யார் பெயரோ இடம்பெறப்போகிறது என்று சொன்னார்களே? அப்படி எதுவுமே இல்லையே?

அகில இந்தியத் தலைவர் ஒருவரின் அரசியல் ஆலோசகர்தான் இதற்கான பதிலைச் சொல்லக் கடமைப்பட்டவர். தமிழ்நாட்டு விவகாரங்களைக் கவனிப்பவர் மீடியேட்டர்!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு