உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது என்பதை எல்லாம் தாண்டி, தண்டனை அனுபவித்துக் களி தின்ற சிறைக்குள்ளேயே திரும்பிப் போய் தேட்டை போடுகிற கில்லாடித்தனத்தை அரங்கேற்றி இருக்கிறார் விஜயபானு என்கிற 'போலி போலீஸ்' அதிகாரி!

எந்தப் புழல் சிறையில் திருட்டுக் குற்றத்துக்காகக் கைதியாக அடைபட்டிருந்தாரோ, அங்கேயே போலீஸ் வேடத்தில் நுழைந்து, தான் ஏற்கெனவே 'படித்து வைத்திருந்த’ அதிகாரிகளின் ரகசியங்களை ஆயுதமாகப் பயன்படுத்தி, அரைகுறை ஆங்கிலத்தில் பேசி மிரட்டி, கோடிக்கணக்கான மதிப்புள்ள ரூபாயையும் நகைகளையும் பறித்துச் சென்று இருக்கிறார். சேலம், வேலூர் சிறைகளிலும் இதே லீலையைப் பதறாமல் அரங்கேற்றி இருக்கிறார் இந்த அசகாய சூரி!

ஏமாந்தவர்கள் என்று சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் மீது துளியும் பரிதாபப்பட முடியாது. மடியில் கனம் இருந்த காரணத்தால் மட்டுமே, பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு கழற்றிக் கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு சிறைச்சாலைக்குள் இருந்து யார் கண்ணிலும் படாமல் தப்பிச் செல்வது எத்தனை கடினமோ... அதைவிடப் பல நூறு மடங்கு கடினமான காரியம், சம்பந்தம் இல்லாதவர்கள் சிறைச்சாலைக்குள் நுழைவது. அதிலும், பத்தாம் வகுப்பே படித்த இந்தக் குற்றவாளி, சிறை ஊழியர்கள் அத்தனை பேரின் 'ராயல் சல்யூட்' மரியாதையுடன் சென்று, வீடியோ சகிதம் 'விசாரணை’க் கூத்தையும் அரங்கேற்றி, காக்கிவாலாக்களிடமே மாமூல் வாங்கி இருக்கிறார்.

அதிகாரி என்றதுமே, கட்டுப்பாடு என்ற பெயரில் எந்தக் கேள்வியும் கேட்காமல் விறைப்பாக வணக்கம் சொல்லி, ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கும் அடிமை மனோபாவம் சீருடைப் பணியாளர்களிடம் வளர்க்கப்பட்டதும்கூட இந்தத் தவறுக்கு ஒரு காரணம்.

சில்லறைத் திருடர்களில் தொடங்கி, சர்வதேசப் பயங்கரவாதிகள் வரைக்கும் விதவிதமான குற்றவாளிகளையும் எதை நம்பித்தான் இந்தப் புல்தடுக்கிப் பயில்வான்களிடம் ஒப்படைக்கிறதோ சட்டம்?! சிறைச்சாலை என்பது, தவறு செய்தவர்கள் மனம் வருந்தி திருந்துவதற்கான இடம் என்பார்கள். முதலில் திருந்த வேண்டியது கைதிகள் அல்ல... காவலர்கள்தான்போல் இருக்கிறது!