எஸ்.ஜெயகாந்தன், புன்செய்ப்புளியம் பட்டி.

'நான் ஸ்டாலின் ஆளும் இல்லை. அழகிரி ஆளும் இல்லை’ என்கிறாரே குஷ்பூ?

குஷ்பூ, பொய் சொல்ல மாட்டார். அவர் கருணாநிதி ஆள்!

சங்கத்தமிழன், சென்னிவீரம் பாளையம்.

மியான்மர் தேர்தலில் ஆங் சான் சூகி பெற்றிருக்கும் வெற்றி, அனுதாபத்தால் கிடைத்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

இது தவறு. துணிச்சலின் குழந்தைதான் வெற்றி. எனவே, ஆங் சான் சூகியின் துணிச்சல் இந்தத் தேர்தல் வெற்றியைச் சாத்தியம் ஆக்கி உள்ளது. அடக்குமுறை ஆட்சியின் கீழ் வாழும் மக்கள், போராட் டக்காரர்கள் மீது அனுதாபம் காட்டுவது இல்லை. ஆக்ரோஷமான ஆதரவைத் தான் காட்டுவார்கள். சூகிக்கு அதுதான் கிடைத்துள்ளது!

இ.சிகாமணி, அத்தனூர்.

தனித்தமிழில் இனிப் பேச முடியுமா?

மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார்... போலப் பேசுவதுதான் தனித்தமிழ் என்று எண்ணுவது தவறு. கிராமங்களில், அடித்தட்டு மக்கள் இப்போதும் இயல்பு தமிழில், பழகு தமிழில் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், ஆங்கிலத்தை அவசியமற்றுத் திணிப்பது நகர்ப்புற நாகரிகமாகக் கருதப்படுகிறது. மனதில் உள்ளதை இயல்பாக, பேச்சுவழக்கில் உள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசினாலே போதும்!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

'அமுதசுரபி’ பாத்திரம் இன்று இருந்தால்?

உழைப்பை உதாசீனப்படுத்தி இலவசங்களை எதிர்பார்த்து நிற்கும் மக்கள் கூட்டம் அதிகமாகி வரும் காலத்தில் 'அமுதசுரபி’ ஆபத்தானது. அதுவும் அம்மாவுக்கு ஒன்றும் அய்யாவுக்கு ஒன்றுமாகக் கிடைத்து விட்டால்...? யோசிக்கவே பயமாக இருக்கிறது!

ஸ்ரீ உஷா பூவராகவன், படியூர்.

தீரன் சின்னமலைக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளாரே?

மிகத் தாமதமாகச் செய்யப்பட்டாலும் சரியான முயற்சியே! கொங்கு நாட்டின் வரிப் பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றபோது, பாளையக்காரன் சின்னமலை பறித்துக்கொண்டான். 'சென்னிமலைக்கும் சிவன் மலைக்கும் நடுவில் இந்தச் சின்னமலை பறித்துக் கொண்டான் என்று சொல்’ என்று இவன் சொன்னபோதுதான் இப்படி ஒரு ஆள் இருப்பதே பிரிட்டிஷ் அரசுக்குத் தெரியும். இவரைக் கொல்வதற்காக மட்டுமே மூன்று போர்களை பிரிட்டிஷார் தொடுத்தார்கள். மூன்றிலுமே இவரைக் கொல்லமுடியவில்லை. அனைத்திலும் வென்றார். வீரத்தால் வீழ்த்த முடியாத சின்னமலையை இறுதியில் துரோகமே வென்றது. சமையல்காரரால் காட்டிக் கொடுக்கப்பட்டு சின்னமலை மாட்டினார். அவரும் அவரது தம்பிமார் இருவரும் மெய்க்காப்பாளர் ஒருவருமாக நான்கு பேரும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்ட வரலாறு நினைவுச் சின்னமாக ஆக்கப்பட வேண்டியதுதான்!

எஸ்.ஜெயகாந்தன், புன்செய்ப்புளியம்பட்டி.

'விவாகரத்துகளில் தமிழகம் முதலிடம்’ என்று வந்துள்ள செய்தி குறித்து? மண முறிவுகள் அதிகரிக்க என்ன காரணம் கழுகாரே?

பணம், காதல் இரண்டில் ஏதாவது ஒன்றை மையமாக வைத்து நடக்கும் திருமணங்கள் முறிவில் போய் நிற்கின்றன. அதனால் தான், 'பணத்துக்காகத் திருமணம் செய்து கொண்டவனைப் போல் அயோக்கியனும் இல்லை. காதலுக்காக மட்டுமே கல்யாணம் செய்து கொண்ட வனைப் போல் முட்டாளும் இல்லை’ என்று மேலை நாட்டு தத்துவாசிரியன் ஜான்ஸன் எழுதினார்.

பொறுப்புணர்வு, அன்பு, பரஸ்பர விட்டுக் கொடுத்தல்... மூன்றும் இருக்கு மானால் மண முறிவு குறையலாம். ஆனால், யதார்த் தம் வேறு மாதிரி யாக இருக்கிறது.!

வீ.பரமசிவம், சென்னை.

கட்சிப் பதவிகளுக்கு வயது வரம்பு கொண்டுவரப் போகிறதாமே மார்க்சிஸ்ட்?

மார்க்சிஸ்ட் கட்சியில் 60 வயதுக்குப் பிறகுதான் ஒருவர் மாநிலக் கமிட்டிக்கு வரமுடியும். 70 தாண்டியவர்களால் தான் மத்தியக் கமிட்டிக்குப் போக முடியும். இதில் என்ன வயது வரம்பு வைக்கப் போகிறார்கள் தோழர்கள்?

அதற்கு முன்னால் தோழர்கள் ஒன்றைச் செய்யலாம்... 60 ஆண்டுகள் நல்ல வேலையில் நிம்மதியாக இருந்து விட்டு கையில் காசுடன் ஓய்வு பெற்ற பிறகு கட்சிப் பதவிக்கு வருபவர்களுக்குத் தடை விதியுங்கள். 35 ஆண்டுகள் வெயில் - மழை பாராது உழைத்தவர்கள் இத்தகைய பதவிகளை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்!

ர.ஷண்முகப் ப்ரியா, திருப்பூர்-5

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு என்கிறார்கள். அப்படியானால் துப்பாக்கி எடுக்காத காந்திக்கு துப்பாக்கியால் எப்படிச் சாவு வந்தது?

கத்தி என்பதை வெறும் கருவியாக மட்டுமே பார்க்கக் கூடாது. கத்தி போன்ற கருத்துக்களைச் சொன்னவர்களும் அப்படித்தான் எதிர் கொள்ளப்பட்டு உள்ளார்கள். 'மதம்’ என்பது இருபுறமும் கூர்மையான கத்தியைப் போன்றது. அதை, தன்னுடைய மனப்பரிசுத்தத்தை மட்டுமே நம்பிக் கையாண்டார் காந்தி. அவரை உணரத் தவறியவர்களால் வன்முறையோடு எதிர்கொள்ளப்பட்டார்.

காந்தி, துப்பாக்கியை எடுக்கவில்லை. ஆனால் பேசிய கருத்துக்கள் துப்பாக்கிகளை விட சர்ச்சைக் குரியவைகளாக இருந்தன. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது காந்தி எழுதிய கட்டுரைகள், கடிதங்கள், பேச்சுக்களைப் படியுங்கள்!

டி.ஜெய்சிங், கோயமுத்தூர்.

கருணாநிதி சமீபத்தில் அடித்த ஜோக்?

சொன்னால், டூட்டி முடித்துச் சென்றவரின் மனம் புண்படும்!

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).

கணவனுக்காக அன்று பல பெண்கள் தியாகம் செய்து போராடினார்கள். ஆனால், சசிகலா தனது கணவருக்காக போராடவில்லையே?

சசிகலா புரியாத புதிர்! கணவரும் தம்பியும் சிறையில் இருக்க... தன்னுடைய மொத்த சொந்தங்களும் 'சதிகாரர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டு கட்சியை விட்டுக் கட்டம் கட்டப்பட... தான் மட்டும் சுத்த சுயம்புவாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் சசிகலாவுக்கு ஏன் வந்தது?

புராணப் பெண் பாத்திரங்களைவிட இதைப் புரிந்து கொள்வதே கஷ்டமாக இருக்கிறது!

அர்ஜுனன்.ஜி, திருப்பூர்-7.

வி.கே.சிங் - மன்மோகன் சிங் ஒப்பிடுக!

பேசக் கூடாத இடத்தில் இருந்தாலும்... தன் மீது ஒரு புகார் என்றதும் சிலிர்த்து எழுந்தார் வி.கே.சிங். பேசியாக வேண்டிய இடத்திலும்... தன் மீது அவமானகரமான புகார்கள் வந்தபோதும் மௌனம் சாதிக்கிறார் எம்.எம்.சிங்.

ரெண்டு பேருமே 'சிங்’ என்பதைத் தவிர எந்த ஒற்றுமையும் இல்லை.!