பிரபாகரனைப் பற்றிய புதிய புத்தகம். மாவீரனைப் பற்றி இன்னொரு மாவீரன் எழுதியது என்று இதற்கு பலரும் அடைமொழி கொடுத்தார்கள்!

பழ.நெடுமாறன் எழுதிய 'பிரபாகரன், தமிழர் எழுச்சியின் வடிவம்’ புத்தக வெளியீட்டு விழா தியாகராயர் நகர், சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. தமிழ் ஈழக் கோரிக்கையின் நியாயங்களை, தமிழ் ஈழத்துக்காகப் பிரபாகரன் நடத்திய போராட்டங்களை, அதில் புலிகள் அடைந்த வெற்றியை, அவர்களை முறியடிக்க நடைபெற்ற சூழ்ச்சிகளை முழுமையான ஆதாரங்களுடன் விளக்கும் புத்தகம் அது!

மாலை 6 மணிக்கு விழா தொடங்கியது. விழா அரங்கமும் மேடையும் தமிழ் உணர்வாளர்களால் நிரம்பி வழிந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, கவிஞர் காசி ஆனந்தன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட விழாவில், ம.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் வைகோ புத்தகத்தை வெளியிட்டார்.

தலைமையேற்றுப் பேசிய கவிஞர் காசி ஆனந்தன், ''இலங்கையில் தடை செய்யப்பட்டு இருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பற்றிய இந்தப் புத்தகத்தை, இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கும் தமிழ் தேசியக் கட்சித் தலைவர் நெடுமாறன் எழுதி உள்ளார். பிரபாகரனைப் பற்றி முழுமையாக அறிந்தவர் நெடுமாறன். அவர் எழுதுவதுதான் பொருத்தமானது. இலங்கையில் நடப்பது மனித உரிமை மீறல் என்று பிரசாரம் செய்யப்படுகிறது. அது மனித உரிமை மீறல் அல்ல; இன அழிப்பு. மனித உரிமை மீறல் என்றால், சிங்களவனின் உரிமையும் மீறப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அங்கு தமிழனின் உரிமைகள் மட்டுமே மீறப்படுகின்றன. அவர்களின் குடியேற்றங்கள் அழிக்கப்படுகின்றன. இந்தநிலை தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் அங்கு தமிழினம் இருக்காது. இதைப் புரிந்துகொள்ளாதவர்கள், தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுப்பதாகக் கூறுகின்றனர். நாங்கள் கேட்பது வீடு அல்ல; நாடு!'' என்றார் உணர்ச்சிகரமாக.

தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் மணியரசன், ''திராவிட நாடு கொள்கைக்காக இயக்கம் கண்டவர்கள், லட்சியத்தை விட்டுக் கொடுத்துவிட்டு, கட்சியை மட்டும் காப்பாற்றிக் கொண்டனர். வீடு கட்டித் தருகிறோம் என்று கூறியவன் ஜன்னலை மட்டும் கட்டி முடித்துக் காண்பித்ததைப் போல், தனித் தமிழ்நாடு அமைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ்நாடு என்ற பெயரை மட்டுமே சூட்டினார்கள். இதனால் யாருக்கு என்ன பயன்? பிரபாகரனைப் பற்றிப் பேசுவது அவரைப் பெருமைப்படுத்துவதோடு முடிந்து விடாமல், அவரது படிப்பினைகளுடன் நாம் எத்தகைய போராட்டங்களை தமிழகத்தில் எடுக்க வேண்டும் என்பதையும் யோசிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ''21-ம் நூற்றாண்டில் வீரத்தில் பிரபாகரனுக்கு இணையே இல்லை. உலக முதலாளித்துவ சூழ்ச்சியின் மையமாக இலங்கையும், நிலப்பிரபுத்துவ சூழ்ச்சி உடையவர்களாக இலங்கைத் தலைவர்களும் உள்ளனர். எனவே வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இனி செயல்பட வேண்டும்'' என்றார்.

சிறப்புரையாற்றிய வைகோ, ''தனித் தமிழ் ஈழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதை ஐக்கிய நாடுகள் சபை செய்ய வேண்டும். தமிழ் ஈழம் அமையப் பொது வாக்கெடுப்பு நடத்துவதா... அல்லது, பிரபாகரன் தலைமையில் புலிகள் மீண்டும் ஆயுதம் ஏந்துவதா என்பதை உலகம்தான் தீர் மானிக்க வேண்டும். 'பிரபாகரன், தமிழர் எழுச்சியின் வடிவம்’ எனும் இந்தப் புத்தகம் ஓர் ஆயுதச் சாலை. இதன் அடுத்த பாகத்தை சுதந்திரத் தமிழ் ஈழத்தில் அண்ணன் நெடுமாறன் வெளியிடுவார்'' என்று பார்வையாளர்களை உணர்ச்சி வசப்படுத்தினார்.

''பிரபாகரனின் புகழைப் பாடுவதற்காக இந்த நூலை எழுதவில்லை. பிரபாகரன் தலைமையில் வீரம் செறிந்த தமிழ் ஈழப் போராட்டம் எவ்வாறு நடைபெற்றது, அதை முறியடிக்க எப்படி எல்லாம் சூழ்ச்சிகள் நடைபெற்றன என்பதை எதிர்காலத் தலைமுறை தெரிந்து கொள்ளவே இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறேன். இதைப்புரிந்துகொண்டு தமிழ் ஈழப் போராட்டத்துக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் தோள் கொடுக்க வேண்டும்'' என்றார், ஏற்புரையாற்றிய பழ.நெடுமாறன்.

தமிழ் உணர்வாளர்களை உசுப்பி விடுவதாக அமைந்து இருந்தது இந்தக் கூட்டம்!

- ஜோ.ஸ்டாலின், படம்: வீ.நாகமணி